குழந்தைப்பருவம்

குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் என்றால் என்ன?

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

குழந்தைப் பாலியல் துன்புறுத்தல் (CSA) என்றால் என்ன? குழந்தைப் பாலியல் துன்புறுத்தல் என்பது, இந்தச் சூழ்நிலைகளில் ஒரு குழந்தை பாலியல் செயல்பாட்டில் ஈடுபடுத்தப்படுவதாகும்: - அவருக்கு அது முழுமையாகப் புரியவில்லை - அவரால் அதற்குத் தகவலறிந்த ஒப்புதலை வழங்க இயலவில்லை - வளர்ச்சிரீதியில் அவர் அதற்குத் தயாராக இல்லை, அவரால் இதற்கு ஒப்புதல் வழங்க இயலாது அல்லது, சட்டங்கள் அல்லது சமூகத்தின் பேசப்படாத சமூக விஷயங்களை மீறுகிறது. (1999 WHO குழந்தைத் துன்புறுத்தல் தடுப்பு ஆலோசனைவழங்கலில் அமைக்கப்பட்ட வரையறையின்படி)

(குழந்தைப் பாலியல் துன்புறுத்தலுக்கான WHO வரையறைபற்றி மேலும் தெரிந்துகொள்ள, இந்த இணையத் தளத்துக்குச் செல்லலாம்: http://www.who.int/violence_injury_prevention/resources/publications/en/guidelines_chap7.pdf)

ஒரு குழந்தை பாலியல்ரீதியில் துன்புறுத்தப்படுவதை எப்படித் தெரிந்துகொள்ளலாம்? பாலியல் வன்முறைக்கு ஆளாகும் குழந்தைகளிடம் பின்வரும் உடல்சார்ந்த அறிகுறிகளில்* இரண்டோ பலவோ தென்படலாம் தனிப்பட்ட உடல் பாகங்களில் (மார்பகங்கள்/பெண்ணுறுப்பு/பின்பகுதி) காயங்கள் மலம் கழிக்கும்போது வலி பெண்ணுறுப்பிலிருந்து திரவம் வழிதல் (ரத்தம்/வெள்ளை) வயிற்றில் வலி பாலியல்ரீதியில் பரிமாறப்படும் நோய்த்தொற்றுகள் / HIV திரும்பத்திரும்ப சிறுநீர்ப்பாதைத் தொற்றுகள் ஏற்படுதல் கர்ப்பம் www.whiteswanfoundation.org ஆதாரம்: பாலியல் துன்புறுத்தலைத் தடுப்பதற்கான திறமைகள், டாக்டர். வ்ருந்தா MN PSW துறை, NIMHANS

ஒரு குழந்தை பாலியல்ரீதியில் துன்புறுத்தப்படுவதை எப்படித் தெரிந்துகொள்ளலாம்? பாலியல் வன்முறைக்கு ஆளாகும் குழந்தைகளிடம் பின்வரும் உடல்சார்ந்த அறிகுறிகளில்* இரண்டோ பலவோ தென்படலாம் வயதுக்குப் பொருந்தாத பாலியல் அறிவு பள்ளிச் செயல்திறனில் மாற்றங்கள் வளர்ச்சியில் பின்னடைவு (எகா: படுக்கையில் சிறுநீர் கழித்தல்) சில குறிப்பிட்ட நபர்கள் அல்லது இடங்களைப்பற்றி அச்சம் அல்லது விருப்பமின்மை பசியெடுப்பதில் மாற்றங்கள் சமூகரீதியில் தனித்திருத்தல் அல்லது விலகியிருத்தல் அதீதமாகக் குளித்தல் அல்லது கழுவுதல் தூக்கத்தில் தொந்தரவுகள் (கெட்ட கனவுகள்) தன்னைக் காயப்படுத்திக்கொள்ளுதல் பதற்றம், மனச்சோர்வு www.whiteswanfoundation.org ஆதாரம்: பாலியல் துன்புறுத்தலைத் தடுப்பதற்கான திறமைகள், டாக்டர். வ்ருந்தா MN PSW துறை, NIMHANS

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org