சிறப்புத் தேவைகளுடைய உடன்பிறந்தவர்களுடன் வளர்வது சவாலாக இருக்கலாம்

மனநலப் பிரச்னைகளோ சிறப்பு தேவைகளோ உடைய உடன்பிறந்தவர்களை உடைய குழந்தைகள் இளம் வயதிலேயே, தங்களுக்கும் தங்களுடைய உடன்பிறந்தவருக்கும் இடையேயான வேறுபாடுகளை அறிந்துகொள்ள வாய்ப்புள்ளது. அவர்கள் தங்களுடைய வயதொத்தவர்களை விட மிகவும் உணர்வுப்பூர்வமாக, உணர்வு முதிர்ச்சி உடையவராக வளரலாம், அல்லது அந்தச் சூழ்நிலை மீது கோபம் கொள்ளலாம் ஏனெனில் அவர்களுடைய உடன்பிறந்தவர்களே எல்லாப் பராமரிப்பையும் கவனிப்பையும் பெறுகின்றனர்.

பெற்றோர் இந்தச் சூழ்நிலையை எப்படி கையாளுகின்றனர் என்பதுதான் உடன்பிறந்தவர் எந்த வகையான மனப்பாங்குடன் வளர்கிறார் என்பதைத் தீர்மானிக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தச் சூழ்நிலையில் பெற்றோர் என்ன செய்யலாம்?

பிரச்னையைப் பற்றி பேசலாம் :  குழந்தையிடம் (வயதுக்குப் பொருத்தமான முறையில்) அவருடைய உடன்பிறந்தவர் கொண்டுள்ள பிரச்னையைப் பற்றியும், சில வேலைகளில் உடன்பிறந்தவருக்கு உதவி தேவை என்பது பற்றியும் பேசலாம். பிரச்னை கொண்ட குழந்தையைப் பராமரிப்பது பெற்றோருடைய பொறுப்பு என்ற முறையில் கூறாமல், பிரச்னை கொண்ட குழந்தையைக் கவனிப்பது ஒட்டுமொத்தக் குடும்பத்தின் பொறுப்பாகக் காட்டலாம். பிரச்னையைப்பற்றி உரையாடலைத் தொடங்கி, குடும்பம் ஒட்டுமொத்தமாக என்ன செய்ய முடியும்; ஒவ்வொரு நபரும் தனித்தனியாக எப்படி உதவலாம் என்று ஆலோசிக்கலாம்.

பிரச்னையா நாமாபெரும்பாலும், ஒரு குழந்தை நன்றாகவும் மற்றொரு குழந்தை பிரச்னையோடும் இருக்கும் குடும்பத்தின் நிலைகள், பெற்றோர் Vs குழந்தைகள் என்று மாறுகிறது; நன்றாக இருக்கும் குழந்தை, தன்னுடைய உடன் பிறந்தவருடன் பெற்றோர் கவனத்திற்குப் ‘போட்டியிடுவதாக’ எண்ணுகிறது. இந்நிலையில் உள்ள பெற்றோர் தங்கள் குழந்தையிடம் அவருடைய உடன்பிறந்தவர் அனுபவிக்கும் பிரச்னை, அதன் தாக்கம் ஆகியவற்றைச் சொல்லி, ‘நாம் இதில் இணைந்து போராடுவோம்’ என்று கூறலாம்.

உடன்பிறந்தவரைக் கவனிப்பதில் குழந்தையை ஈடுபடுத்தலாம்ஒரு குழந்தை, தன்னுடைய உடன்பிறந்தவர் எதனால் வருந்துகிறார் என்பதைப் புரிந்துகொள்வதற்குப் பெற்றோர் உதவலாம், மேலும் அதனை உணவுப்பூர்வமாகப் புரிந்துகொள்ள உங்கள் குழந்தைக்கு கூறவும். எடுத்துக்காட்டாக, குறிப்பிட்ட வளர்ச்சிக் குறைபாடுடைய குழந்தைகள் சத்தமான ஒலியையோ இசையையோ கேட்டால் முரட்டுத்தனமாக மாறலாம். எனவே குழந்தையிடம் சத்தத்தைக் குறைக்கக் கூறுவதற்குப் பதிலாக, அவர்கள் மற்றொரு வாய்ப்பை அளிக்கலாம், “நீ இயர்போன்களைப் பயன்படுத்த முடியுமா? ஏனெனில் சத்தம் உனது சகோதரன்/சகோதரிக்கு மிகவும் அழுத்தமாக இருக்கும்” என்று தெளிவாக்க கூறலாம். இதன்மூலம், உடன்பிறந்தவருடைய பிரச்னையால்தான் பெற்றோர் மாற்றிக் கொள்ளக் கூறுகிறார்கள் என்று குழந்தை புரிந்துகொள்ளும்.

உடன்பிறந்தவருடைய கவனிப்பில் அவர்களை ஈடுபடுத்தலாம்:  தன்னுடைய உடன்பிறந்தவருக்கு மருந்துகளைச் சாப்பிட நினைவுபடுத்துவது, அவர்களுடன் சாப்பிடுவது, அவர்களுடன் விளையாடுவது போன்றவற்றைக் குழந்தையைச் செய்யச்சொல்லலாம். அவர்கள் வழங்கும் உதவி உடன்பிறந்தவருக்கு அழுத்தத்தைக் கொடுக்கிறதா என்று பெற்றோர் குறிப்பிட்ட இடைவெளிகளில் சோதிக்கலாம்.

இரு குழந்தைகளின் தேவைகளையும் கவனிக்கலாம்உடன்பிறந்தவருக்குப் பெற்றோருடைய நேரமும் கவனிப்பும் தேவைப்படும் நேரத்திலும் கூட (சிறப்புக் கவனம் தேவைப்படும்போது கூட) இன்னொரு குழந்தையிடம் பேசலாம். பிரச்னையுள்ள குழந்தைக்கு ஓர் அவசரம், மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்ல வேண்டும், அதே நேரம், அவருடைய உடன்பிறந்த குழந்தை தன் பொம்மை உடைந்துவிட்டதற்காக வருந்துகிறது. இந்நிலையில் பிரச்னையுள்ள குழந்தையின் சூழ்நிலை அதிகச் சிக்கலாக உள்ளது என்றாலும்கூட, ஒரு நிமிடம் யோசிக்கலாம், உடைந்த பொம்மையைக் கொண்டுள்ள குழந்தையின் வருத்தத்தை உணர்ந்து பேசலாம், நெருக்கடி சரியானதும் இதைக் கவனிப்போம் என்று விளக்கலாம்.

திறந்த மனத்துடன் உரையாடலாம், ஒன்றாகப் போதுமான நேரத்தைச் செலவழிக்கலாம்: ஒரு குழந்தைக்குச் சிறப்புத் தேவைகள் உள்ளபோது பெற்றோரால் இரு குழந்தைகளுடனும் சம அளவு நேரத்தைச் செலவிடுவது சாத்தியமில்லாததாக இருக்கலாம். அதற்குப் பதிலாக, அவர்கள் நன்றாக உள்ள குழந்தையுடன் போதிய நேரத்தைச் செலவிடலாம். குழந்தையை அடிக்கடி கவனிப்பதை உறுதிப்படுத்தலாம். கணவரோ மனைவியோ குழந்தையுடன் இடையூறு இல்லாமல் நேரத்தைச் செலவழிக்கச் சில வழக்கங்களைத் தொடங்கலாம் (தலைவாருதல், பள்ளிக்குச் செல்லத் தயார்செய்தல், அல்லது படுக்கைக்கு முன் கதை நேரம்), அப்போது மற்றொருவர் மற்றொரு குழந்தையைக் கவனிக்கலாம். அட்டை விளையாட்டுகள் அல்லது குழந்தை விரும்பும் பிற செயல்பாடுகளில் ஈடுபடலாம், இது குழந்தையும் பெற்றோரும் உரையாட உதவும்.

களங்கத்தை எதிர்கொள்ள அவர்களுக்கு உதவலாம்சிறப்புத் தேவைகள் உடைய உடன்பிறந்தவர்கள் கொண்ட குழந்தைகள் களங்கத்தால் மறைமுகமாகப் பாதிக்கப்படுகிறார்கள் – அவர்கள் அதே வயதுடைய மற்ற குழந்தைகளுடன் உரையாடும்போது அது அதிகம் நடக்கிறது. அவர்களுடைய நண்பர்களோ வகுப்புத் தோழர்களோ அவர்களுடைய உடன்பிறந்தவர் குறித்துக் கேலி செய்யும்போது, கிண்டலடித்துப் பேசும்போதும், தாங்களும் அதில் இணைந்துகொள்வதா (தங்களுடைய ஒத்த வயதுக் குழுவுக்குள் சேர்த்துக்கொள்ளப்படுவதற்காக) அல்லது தங்களுடைய உடன்பிறந்தவர்களைப் பாதுகாப்பதா என்பதற்கு இடையில் அவர்கள் மாட்டிக் கொள்கிறார்கள். அவர்கள் தங்களுடைய உடன்பிறந்தவர்களை விளையாட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று பெற்றோர் வற்புறுத்தும்போது பிரச்னை அதிக அழுத்தமானதாக மாறுகிறது.

அதற்குப் பதிலாக என்ன செய்யலாம்? குழந்தையிடம் உடன்பிறந்தவருடனோ அதுபோன்ற ஒத்த நிலைகள் கொண்டவர்களுடனோ உணர்வுப்பூர்வமாக இருக்கக் கூறலாம், அவர்களிடம் “நாம் அவர்களுக்குப் பட்டப்பெயர் வைக்கவோ கேலி செய்யவோ கூடாது” என்று கூறலாம். 

தேவைப்பட்டால் ஆதரவை நாடலாம்குழந்தை வளர்ப்பு எளிதானது இல்லை, நல்ல உடல்நிலையில் இல்லாத குழந்தையை வளர்ப்பது இன்னும் கடினமானது. ஆகவே, பெற்றோர் தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்ளும் வழிகளைக் கண்டறியலாம், ஆதரவு மூலங்களை நாடலாம். இதன்மூலம் அவர்கள் தங்களுடைய அழுத்தத்தைக் குழந்தைகள் மீது காட்டாமல் இருப்பார்கள், அவர்களைச் சிறப்பாகக் கவனித்துக்கொள்வார்கள்.

எச்சரிக்கைப் பகுதிகளில் கவனமாக இருக்கலாம்: பெற்றோரின் ஒரு குழந்தைக்கு மனநலப் பிரச்னைகள் இருந்தால், உடன்பிறந்த குழந்தையும் மனநலப் பிரச்னைகளைக் கொண்டிருக்க அதிக வாய்ப்பு உள்ளது. அப்படித் தங்கள் குழந்தையிடன் உடன்பிறந்த குழந்தையுடைய மனநலப் பிரச்னையின் ஏதேனும் அடையாளங்களைக் கவனித்தால், உடனடியாக உதவியை நாடவேண்டும். பிற எச்சரிக்கைப் பகுதிகள்: திடீர் நடத்தை மாற்றம், நீடித்த கோபம் அல்லது கவலை, குடும்பம் மற்றும் நண்பர்களிடமிருந்து ஒதுங்கியிருத்தல், பள்ளிக்குச் செல்ல மறுத்தல், போதைப்பொருள் பயன்பாடு போன்றவை. இவற்றில் ஏதேனும் அடையாளங்களைக் குழந்தையிடம் கவனித்தால், முடிந்தவரையில் உடனடியாக நிபுணரை நாடலாம்.

மேலும் வாசிக்க:

Related Stories

No stories found.
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org