ஓர் உடல் குறைபாடு உங்கள் உடல் தோற்றத்தைப் பாதிக்கவேண்டியதில்லை

ஓர் உடல் குறைபாடு உங்கள் உடல் தோற்றத்தைப் பாதிக்கவேண்டியதில்லை

உடல்தோற்றம் என்பது, நாம் நமது உடல், அதன் பகுதிகள், அளவு, வடிவம் மற்றும் பல்வேறு பண்புகளை எப்படிப் பார்க்கிறோம் என்ற ஒருவரின் உடல் குறித்த அவரது புலன் உணர்வாகும். அது ஒரு புலன் உணர்வாக இருப்பதால், அது நமது வாழ்வின் பல்வேறு காரணிகளால் தாக்கமேற்படுத்தப்படுகிறது – அவை: சூழல், நுட்பமான மற்றும் நுட்பமற்ற செய்திகள், நமது நினைவுகள் மற்றும் நம்மையும் சுற்றியுள்ள உலகையும் மதிப்பிட நாம் பயன்படுத்தும் பல்வேறு கருத்தாக்கங்கள் மற்றும் பொதுமைப்படுத்தல்கள்.

எதிர்மறை உடல்தோற்றம் என்பது, எதிர்மறையான சுய-பேச்சு, நிறம், வடிவம் குறித்து வருந்துதல், குறைபாட்டோடு இருப்பதாக உணர்தல், உடல் பகுதிகள்/ உணர்வு உறுப்புகளின் வலுவின்மை அல்லது குறைபாடு போன்றவற்றால் வரையறுக்கப்படுகிறது. உடல்குறைபாடு உடைய நபருக்கு இன்னும் கடினமாக இருப்பது எதுவென்றால் தங்களுடைய உடல் குறைபாடு குறித்த அவர்களுடைய ஏற்றுக்கொள்ளும் நிலை, அது உடல் தோற்றப் பிரச்னையைச் சிக்கலாக்கலாம். கவலைக்குரிய விஷயம், எதிர்மறை உடல் தோற்றத்தால் ஒருவருக்கு மனச்சோர்வு, உண்ணுதல் குறைபாடுகள், தனிமையுணர்வு, குறைந்த சுய மதிப்பு போன்ற பிற மன நலச் சவால்கள் வரலாம்.

ஒருவர் உடல்தோற்றப் பிரச்னைகளை எதிர்கொள்ளும் போது, ஆதரவான சூழல் மற்றும் அவருக்கு நேர்விதமான உறுதியைக் கொடுக்கும் ஆதரவு அமைப்பைத் தவிர, பெரும் பகுதி வேலை அந்த நபராலேயே செய்யப்பட வேண்டியுள்ளது. நேர்வித உடல்தோற்றத்தை நோக்கிய பயணத்தைத் தொடங்க: 

  1. எதிர்மறை உடல்தோற்றத்தை உண்டாக்கும் செய்திகளுடைய மூலங்களைக் கருதத் தொடங்கலாம் – நபர்கள், TV, சமூக ஊடகம் போன்றவை – இந்த மூலங்களிலிருந்து முடிந்தவரை விலகியிருக்கலாம். மிக முக்கியமாக அவற்றை நேர்வித உடல்தோற்றச் செய்திகளுடன் மாற்ற முயற்சிசெய்யலாம்.
  2. தன்னுடைய உடலை ஏற்றுக் கொள்வதைத் தங்களுடைய குறைபாட்டை ஏற்றுக்கொள்வது பாதிக்கிறதா என்று அவர்கள் தங்களைத் தாங்களே கேட்கலாம். பல நேரங்களில், முதன்மைப் பிரச்னையை எதிர்கொள்ளாத வரை, அதைச் சுற்றியுள்ள பிரச்னைகள் அதைச் சிக்கலாக்கும். அந்த சூழலில் அவர் தன்னுடைய குறைபாட்டை ஏற்றுக் கொள்ளச் செயலாற்றத் தொடங்கி, அதன்பின் பிற கவலைகளுக்கு நகர்வது சிறந்த யோசனையாக இருக்கும்.
  3. தன்னுடைய எண்ணங்கள் பற்றிய நாட்குறிப்பை வைத்திருக்கலாம். அவர் தன்னுடைய எதிர்மறை மற்றும் நேர்வித எண்ணங்களை எழுதலாம். இது ஒருவருக்கு அவருடைய எதிர்மறை சுய சிந்தனைகள் மேலும் அவற்றின் தூண்டுதல்கள் குறித்தும் மிகுந்த விழிப்பாக இருக்க உதவும்.
  4. தன்னுடைய நகரில் உள்ள ஆதரவுக் குழுக்களை நாடலாம், அங்கே ஒருவர் தன்னுடைய கதைகளைப் பகிரலாம், பிறருடைய கதைகளைக் கேட்கலாம், ஒருவரிடமிருந்து இன்னொருவர் கற்றுக்கொள்ளலாம், இதற்கான ஒரு பாதுகாப்பான இடத்தை இக்குழுக்கள் அமைத்துத்தருகின்றன.
  5. தன்னுடைய எதிர்மறை உடல் தோற்றம் குறித்து விழிப்புணர்வைத் தொடர்ந்து கட்டமைத்தல் – அது எப்படி உருவாகிறது மற்றும் எப்படித் தாக்கம் ஏற்படுத்துகிறது ஆகியவற்றை அறிதல் – படித்தல், இணையத்தில் உரைகளைக் கேட்டல் அல்லது தொடர்புடைய நேரடிப் பேச்சுகளில் கலந்து கொள்ளல் போன்றவற்றின் வழியாக. இது ஒருவருடைய அனுபவம் மற்றும் அவருடைய சிந்தனைகளின் அமைப்பு குறித்து ஆராய அவருக்கு உதவும்.
  6. தன்னுடைய உடலைப் பராமரிக்கலாம், தனக்குத்தானே அன்பு செலுத்தலாம்: ஆரோக்கியமாக உண்ணலாம், தொடர்ந்து உடற்பயிற்சி செய்யலாம், அவ்வப்போது தன்னைத்தானே பாராட்டிக்கொள்ளலாம்.
  7. பொழுதுபோக்குகளை வளர்த்துக்கொள்ள, புதிய திறமைகளைக் கற்றுக்கொள்ள அவர் தனக்கு வசதியான சூழலிலிருந்து வெளியே வரலாம். இதன்மூலம், அவர் எப்போதும் தன்னுடைய உடல் எப்படித் தோன்றுகிறது என்பதைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்காமல், இந்த அரிய கருவியைப் பயன்படுத்தித் தான் எதை அடையலாம் என்பதில் கவனம் செலுத்துவார்.
  8. நிறைவாக, இதைத் தன்னால் எதிர்கொள்ள இயலாது என்று அவருக்குத் தோன்றினால், மனநல நிபுணரை நாடலாம். அந்நிபுணரின் சிகிச்சை முறையால், அவர் தன்னைப்பற்றித் தானே அறியலாம், தன்னுடைய கவலைகளுக்குத் தீர்வு காணலாம்.

ஷ்ரேயா ஶ்ரீதரன் - மாத்ரே, மும்பையைச் சேர்ந்த மனநல நிபுணர்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org