மனநலப் பிரச்னை கொண்டோரின் உடல் சார்ந்த நலப் பிரச்னைகள்
உடல் மற்றும் மனம்

மனநலப் பிரச்னை கொண்டோரின் உடல் சார்ந்த நலப் பிரச்னைகள்

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

மனநலப் பிரச்னை கொண்டோருக்குப் பல நேரங்களில் உடல் சார்ந்த பிரச்னைகளும் வருகின்றன.  இது அவர்களுடைய பிரச்னையின் இயல்பால் வரலாம், மருந்தால் வரலாம் அல்லது உடல்நலம் சரியில்லாததால் ஏற்பட்ட வாழ்க்கைமுறை மாற்றங்களால் வரலாம்.  

ஒருவருடைய மனநலப் பிரச்னையால் அவருடைய உடல்நலனில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் பலவிதமாக அமையலாம்: உடல் வலிகள், எடை அதிகரித்தல், உயர் ரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு போன்றவை-பல ஆண்டுகளாக மருந்துகளைச் சாப்பிடுவதின் விளைவாக இது நிகழலாம், குறிப்பாக தீவிர மனநலப் பிரச்னை கொண்டோர் மத்தியில் இது அதிகம் காணப்படுகிறது.    போதைப் பொருட்களை அதீதமாகப் பயன்படுத்துவதுபோன்ற உள்ளம் சார்ந்த குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்குத் தொலைநோக்கில் உடல் சார்ந்த பல பிரச்னைகளின் பாதிப்பு வரலாம்.   

அதேசமயம், இந்தப் பிரச்னைகளில் பெரும்பாலானவற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை வழங்கிவிட்டால், அவர் ஒரு செயலுள்ள வாழ்க்கையை நடத்தும்படி இவற்றைக் கையாளலாம்.     மருந்துகளின் அளவைக் குறைப்பதன்மூலம் சில பக்கவிளைவுகளைக் கட்டுப்படுத்தலாம், பரிந்துரைக்கப்படும் மருந்துகளை மாற்றுவதன்மூலம் சிலவற்றை முற்றிலுமாகத் தடுத்துவிடலாம்.   

மனநலப் பிரச்னை கொண்டவர்கள் அல்லது அவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் இந்த அறிகுறிகளைத் தொடர்ந்து கவனித்துவரவேண்டும், இவை தென்பட்டால் உடனடியாக உதவியை நாடவேண்டும் அல்லது வாழ்க்கைமுறை மாற்றங்களை அமல்படுத்தவேண்டும். 

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org