மொபைல் ஃபோன்களுக்கு அடிமையானால், மனச்சோர்வும் பதற்றமும் ஏற்படலாம் என்கிறது ஓர் ஆய்வு

Published on

மொபைல் ஃபோன்களுக்கு அடிமையான ஒருவருக்கு மனச்சோர்வு, பதற்றக் குறைபாடுகள் வரும் வாய்ப்பு அதிகம் என்கிறது இல்லினாய்ஸ் பல்கலைக்கழகம். அங்கே நிகழ்த்தப்பட்ட ஓர் ஆய்வில் இவ்விவரம் தெரியவந்துள்ளது. 300 பல்கலைக்கழக மாணவர்கள்மத்தியில் இந்த ஆய்வு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கிறது இல்லினாய்ஸ் நியூஸ் ப்யூரோ. மாதிரிக் குழுவினருக்குத் தரப்பட்ட வினாத்தாள்கள் மாணவர் மனநலம் அடிப்படையில் அமைந்திருந்தன. செல்ஃபோன் பயன்பாட்டால் கல்வி அல்லது வேலைத்திறனில் என்ன தாக்கம் ஏற்படுகிறது என்பதில் தொடங்கி, இணையம் இல்லாவிட்டால் வாழ்க்கை போரடிக்கிறதா, ஆர்வமில்லாததுபோல் தோன்றுகிறதா என்பதுவரை பலதரப்பட்ட கேள்விகள் இதில் இடம்பெற்றிருந்தன. இந்த வினாத்தாளின் நோக்கம், தொலைபேசி மற்றும் இணையம் ஆகியவற்றுக்கும், அடிமையாதல்/தன்னைத்தானே அழித்துக்கொள்ளுதல் பழக்கவழக்கங்களுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா என்பதை ஆராய்வதுதான்.

இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் உளவியல் பேராசிரியராகப் பணியாற்றும் அலெஜன்ட்ரோ ல்லெரஸ் இதுபற்றிப் பேசுகையில், 'யாரெல்லாம் இணையம், செல்ஃபோனுக்குத் தாங்கள் அடிமையாகிவிட்டதுபோல் நடந்துகொள்வதாகச் சொன்னார்களோ, அவர்களிடமெல்லாம் மனச்சோர்வு மற்றும் பதற்றத்துக்கான அறிகுறிகள் அதிகம் காணப்பட்டன' என்றார். இந்த ஆய்வுபற்றி மேலும் வாசிப்பதற்கு இங்கே க்ளிக் செய்யுங்கள். (https://news.illinois.edu/blog/view/6367/334240)

logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org