கோபப் பிரச்னைகளைச் சரிசெய்ய இயலுமா?

கோபப் பிரச்னைகளைச் சரிசெய்ய இயலுமா?

கோபம் என்னும் பிரச்னை

நாம் எல்லாரும் நமது வாழ்வின் சில பகுதிகளில் அல்லது தினசரி வாழ்வில் கோபத்தை உணர்ந்திருப்போம். கோபம் என்ற உணர்வை அனுபவிப்பது இயல்பானது, ஏற்றுக்கொள்ளத்தக்கது, தேவையானது மற்றும் பொருத்தமானது. கோபம் என்பது, வெளிப்புற அல்லது உள் நிகழ்வுகளால் தூண்டப்படுகிற ஓர் அடிப்படை உணர்வாகும்.  நாம் ஆராய்ந்தால், பின்வருவனவற்றில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவை கோப விளைவை நம்மிடம் தூண்டியிருக்கலாம்:

வெளிப்புற நிகழ்வுகள்

         மன அழுத்தம் ஏற்படுத்தும் விரும்பத்தகாத சூழல்

         மற்றொரு நபரின் விரும்பத்தகாத அல்லது நியாயப்படுத்த இயலாத செயல்

         மற்றொரு நபரால் நமது தேவைகள் பூர்த்தியடையாமை 

உள் நிகழ்வுகள்

         ஒரு நபர் அல்லது சூழ்நிலையை எண்ணி காயப்படுதல், வருந்துதல் அல்லது விரக்தியடைதல்

         சில நினைவுகள், தீர்க்கப்படாத பிரச்னைகள் அல்லது தனிப்பட்ட பிரச்னைகள்.

         மற்றவர்கள் மற்றும் வாழ்வின் எதார்த்தமில்லாத எதிர்பார்ப்புகள்

கோபத்தை உணரும்போது, வரக்கூடிய ஓர் ஆபத்துக்கான எச்சரிக்கை விடுக்கப்படுகிறது: அத்துமீறல், அநீதி, மரியாதையின்மை அல்லது மீதமுள்ள உடல்/உணர்வுக் காயம். கோபத்தை உணர்வதென்பது, ஒரு விரும்பத்தகாத நிகழ்வு அல்லது சூழலுக்கான ஓர் இயற்கையான எதிர்வினைதான். ஆனால், சில நேரங்களில் அது ஒரு பிரச்னையாகக்கூடும்:

         அது அதிகமாகும்போது

         அது பொருத்தமற்ற முறையில் வெளிப்படுத்தப்படும்போது 

         அது வெளிப்படுத்தப்படாதபோது அல்லது உள்ளுக்குள் வைக்கப்படும்போது 

ஒருவர் தன்னுடைய கோபத்தைச் சீற்றமாக அல்லது குமுறலாக வெளிப்படுத்துவதால், அவருக்கு இதயம் தொடர்பான பிரச்னைகள் மற்றும் உயர் அழுத்தம் ஆகியவற்றுக்கான ஆபத்து ஏற்படலாம். கோபம் அடிக்கடி அல்லது ஆழமாக உணரப்படும்போது, அல்லது வெளிப்படுத்தப்படும்போது, மனிதர்களின் உடல் மற்றும் மனத்தில் அழுத்தம் ஏற்படுகிறது. 

சொற்களாகவோ உடல்ரீதியாகவோ பொருத்தமற்ற முறையில் கோபத்தை வெளிப்படுத்துவது, ஒருவரைக் கோபமானவராக, விரோதமானவராக, மேலும் தாக்குபவராகக்கூட ஆக்கலாம். இது மற்றவர்களைத் தடுப்பு நடவடிக்கையில் வைத்து, தனிப்பட்ட மற்றும் தொழில் உறவுகளைச் சிதைக்கலாம். 

அதிகப்படுத்தப்பட்ட அல்லது அழுத்தப்பட்ட கோபம், மனிதர்களின் மனம் மற்றும் உடலில் ஓர் அழுத்த விளைவை ஏற்படுத்தலாம். கோபம் அல்லது சீற்றத்துக்குக் காரணமான குழந்தைப் பருவ அனுபவங்களை அந்த நேரத்தில் வெளிப்படுத்த இயலாததால் அவை அடக்கப்பட்டிருக்கலாம்.  அடக்கப்பட்ட கோபம், தொடர்ச்சியாக அந்த நபர் அல்லது நிகழ்வைக் குறித்துச் சிந்திக்க வைக்கிறது, மேலும் தீடீரென கோபத்தை வெளிப்படுத்தல் அல்லது உள்நோக்கித் திருப்புவதற்கு இட்டுச் செல்கிறது.  நீண்ட காலம் அடக்குதல், மன நலப் பிரச்னைகளுக்கும் இட்டுச் செல்லலாம். கோபம் ஒழுங்குபடுத்தப்படாதபோது அல்லது ஆற்றுப்படுத்தப்படாதபோது, அது ஒரு தவறான நபரிடம் அல்லது சூழலின்போது வெளிப்படலாம். யார்மீது, எங்கே வெளிப்படவேண்டுமோ அங்கே வெளிப்படாமல் போகலாம். இது பெரும்பாலும் தவறான புரிந்துகொள்ளல்கள் மற்றும் தனிப்பட்ட பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது.

கோபப் பிரச்னைகளைச் சரிசெய்தல் 

ஒருவர் தன்னுடைய கோப உணர்வைக் கட்டுப்படுத்தச் சிரமப்படும்போது, கோபப் பிரச்னைகள் தொடங்குகின்றன. கோபத்தை உணர்வது இயல்பானது, அதேவேளையில், நாம் அதை ஒழுங்குபடுத்திப் பொருத்தமான முறையில் தனக்கு மற்றும் பிறருக்குக் காயமில்லாமல் வெளிப்படுத்தினால் அது பயனுள்ளதாகும்.

பின்வருவன கோபத்தை ஒழுங்குபடுத்துவதில் மற்றும் வெளிப்படுத்துவதில் உதவலாம்:

         ஒருவர் தன்னுடைய கோப பிரச்னை குறித்து விழிப்புடன் இருத்தல்: இதுதான் ஒருவர் தன்னுடைய கோபத்தைக் கையாள்வதின் முதல் படியாகும். ஒருவர் இவற்றின் மூலம் தன்னுடைய கோபப் பிரச்சினைகள் குறித்து அறியலாம்:

   1    எது கோபத்தைத் தூண்டியது என்று அறிதல்

   2    தான் அனுபவித்த கோபத்திற்குப் பின்னாலிருக்கும் காரணத்தை அறிதல்.

   3    கோபத்திற்கான உணர்வு நியாயமானதா அல்லது தவறான கருத்தை அடிப்படையாகக் கொண்டதா என்று அறிதல்

         மனத்தைத் தளர்த்தும் நுட்பங்களைத் தொடர்ந்து பயிற்சியெடுத்தல்: கோபத்தால் மனித உடலில் அழுத்தம் ஏற்படலாம், எடுத்துக்காட்டாக, அதிகப்படியான இதயத்துடிப்பு, அவசரமாக மூச்சுவிடுதல் போன்றவை. இது நமக்குத் தெரியும். ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி மற்றும் தசைத் தளர்வுப் பயிற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டால், கோபத்தை இதமாக்கிக் குறைக்க உதவும்.

         கோபத்தைப் பொருத்தமான முறையில் வெளிப்படுத்துதல்: அனுபவிக்கப்படும் எந்த உணர்ச்சியும் வெளிப்படுத்தப்படவேண்டும். இது கோப உணர்ச்சிக்கும் பொருந்தும். எனவே, கோபத்துடன் தொடர்புடைய விரக்தி மற்றும் உணர்வுகளை அமைதியான மற்றும் இணைந்த வழியில் வெளிப்படுத்துவது கோபத்தின் உணர்வைக் கட்டுப்படுத்துவதில் உதவுகிறது. பிற உணர்வுகளை வெளிப்படும் முறைகளான நாட்குறிப்பு எழுதுதல், பாடல் எழுதுதல் அல்லது படம் வரைதல் ஆகியவையும் உதவலாம்.

         ஒருவருடைய தேவைகள் மற்றும் விருப்பங்களை உரையாடல்: ஒருவர் தன்னுடைய தேவைகள் மற்றும் விருப்பங்களைப் பயனுள்ள முறையில் பிறருக்கு தெரிவிப்பதால், பிறரிடமிருந்து சரியான எதிர்பார்ப்புகளை அமைக்கலாம். 

         நிபுணர்களின் உதவியை நாடுதல்: மேற்கண்டவற்றை முயன்றபிறகும் ஒருவருடைய கோபம் கட்டுக்குள் வரவில்லையென்றால், அவர் நிபுணரிடம் உதவி பெறவேண்டியிருக்கலாம்.  அவர் தன்னுடைய கோபப் பிரச்னைகளைப் புரிந்துகொள்வதற்கு மற்றும் கையாள்வதற்கு, ஒரு சான்றுபெற்ற ஆலோசகர் அல்லது மனநலநிபுணர்  உதவலாம்.

உசாத்துணைகள்

கோபம் உங்களைக் கட்டுப்படுத்தும் முன் அதைக் கட்டுப்படுத்துதல்: http://www.apa.org/topics/anger/control.aspx

கோபத்தைக் கையாளுதல்: http://www.helpguide.org/articles/emotional-health/anger-management.htm

Related Stories

No stories found.
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org