வருத்தங்களை வெல்லுதல்

வருத்தங்களை வெல்லுதல்

வாழ்வில் வருத்தங்கள் இல்லாதவர்கள் யாராவது உண்டா?  அநேகமாக அப்படி யாரும் இல்லை, எல்லாருக்கும் ஏதாவது வருத்தங்கள் இருக்கின்றன, பதிவுசெய்யப்பட்ட வரலாற்றில் எப்போதும் இதுதான் நிகழ்ந்துள்ளது என்று நாம் யூகிக்கலாம்.   பழங்கால இஸ்ரேலியர்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தார்கள், அங்கிருந்து தப்பி வந்ததை எண்ணி வருந்தினார்கள், தங்களுடைய பாலைவனப் பிரச்னைகளுக்கு மோசஸைக் குற்றம் சாட்டினார்கள்.  புதிய தேசமாகிய அமெரிக்கா, இங்கிலாந்துடன் போருக்குச் சென்றபோது அமெரிக்கப் புரட்சி உளவாளியாகிய நாதன் ஹேல் புகழ்பெற்ற ஒரு வருத்தத்தைத் தெரிவித்தார், “என் நாட்டுக்காகத் தருவதற்கு எனக்கு ஒரே ஒரு உயிர்தானே இருக்கிறது”.    நம் காலத்தின் மிகவும் புகழ்பெற்ற தொழில் தலைவரான ஸ்டீவ் ஜாப்ஸ் தன்னுடைய கடைசி நேர்காணல் ஒன்றில் இப்படி ஒரு வருத்தத்தைத் தெரிவித்தார்: அவர் தன்னுடைய நான்கு குழந்தைகளுடன் அதிக நெருக்கமாக இல்லாததை எண்ணி வருந்தினார்.

ஆனால், வியப்பூட்டும்விதமாக, இந்தத் தலைப்பு சமீபத்தில்தான் அறிவியல் கவனத்தைப் பெறத் தொடங்கியிருக்கிறது.  ஒரு நூற்றாண்டுக்குமுன், வியன்னாவில் தான் சந்தித்த நடுத்தர வர்க்க நோயாளிகள் மத்தியில் நிறைய குற்றவுணர்ச்சியைக் கண்டறிந்தார் சிங்மன்ட் ஃப்ராய்டு, அதனை அடக்கிவைக்கப்பட்ட பாலியல் எண்ணங்களுடன் இணைத்தார், ஆனால் இன்றைய உளவியலாளர்கள் வருத்தத்தை மாறுபட்ட, இன்னும் அகன்ற ஒரு நிகழ்வாகக் காண்கிறார்கள்.    ஒருவர் தன்னுடைய எண்ணங்கள் அல்லது செயல்கள்பற்றிக் குற்ற உணர்ச்சி கொள்ளாமல் வருத்தங்களை கொண்டிருப்பது நிச்சயம் சாத்தியமே.  ஒருவர் எதை எண்ணி வருந்துகிறார், எப்போதெல்லாம் வருந்துகிறார், எந்த அளவு தீவிரத்துடன் வருந்துகிறார் ஆகிய அனைத்தும் ஒரு மாற்றத்தை உண்டாக்குகின்றன என்கிற கருத்துக்கு உளவியல் ஆராய்ச்சிகள் இப்போது வந்தடைந்துகொண்டிருக்கின்றன.    வருத்தம் என்பது, பொதுவாக நம்பப்படுவதுபோல், எல்லாரிடமும் ஒரேமாதிரி காணப்பட்டால் இந்தக் கண்டுபிடிப்புகள் உள்ளுணர்வு அடிப்படையிலானவை என்று குறிப்பிடலாம், ஆனால் எல்லாரும் பழைய தவறுகளில் அல்லது வாழ்க்கையில் விட்டுவிட்ட வாய்ப்புகளில் தங்கிக் கிடப்பதில்லை, ஆனால் வேறு சிலர் அதை எப்போதும் மறப்பதில்லை.  

நேர்வித உளவியல் குறிப்பாக எதைக் கண்டறிந்துள்ளது? இதுபற்றிச் சுருக்கமாகப் பார்ப்போம்.

முதலில், செய்தவற்றைப்பற்றிய வருத்தங்களுக்கும் செய்யாதவற்றைப்பற்றிய வருத்தங்களுக்கும் இடையே பெரிய வேறுபாடு உள்ளது செய்துவிட்டவற்றை நினைத்து ஒருவர் வருந்தும்போது முதன்மையாக “சூடான” உணர்வுகள், எடுத்துக்காட்டாக, கோபம் போன்றவை (”அந்தக் காரை வாங்கியது எவ்வளவு பெரிய முட்டாள்தனம், நான் எப்படி இதைச் செய்தேன்!”) ஏற்படுவதாகத் தோன்றுகிறது. செய்யாமல் விட்டுவிட்டதைப்பற்றிய கவலைகள் பொதுவாக ஆவலுணர்வை (”அந்தக் கோடைக் காலத்தில் நான் நியூ ஜெர்ஸியில் தங்கியிருந்ததற்குப் பதிலாக கேத்தியுடன் லண்டனுக்குச் சென்றிருந்தால்?”) அல்லது விரக்தியை (”சட்டக்கல்லூரிக்குச் செல்வதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு இருந்தபோது, நான் ஏன் போகவில்லை? வாழ்நாள்முழுக்க ஆயுள் காப்பீட்டை விற்று விற்று நான் என்னுடைய வாழ்க்கையை வீணடித்துவிட்டேன்.”) உண்டாக்குகின்றன. ஆய்வுகளில் தொடர்ந்து தெரியவருகிற இன்னொரு விஷயம், மக்கள் குறுகிய காலகட்டத்தில் தாங்கள் செய்தவற்றை எண்ணி அதிகக் கவலைகளை அனுபவிக்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு வயதாக ஆக இந்த மனோநிலையானது குறிப்பிடத்தக்க அளவு தலைகீழாகிறது.   

அதாவது, இருபதுகளில் அல்லது முப்பதுகளில் உள்ள பெரும்பாலானோருடைய முதன்மையான கவலைகள் தாங்கள் செய்துவிட்ட முட்டாள்தனமான செயல்களைப்பற்றியதாக இருக்கும் என்று குறிப்பிடலாம்.   இத்துடன் ஒப்பிடும்போது, வாழ்க்கையின் நடுநிலையில் உள்ளவர்கள் மற்றும் மூத்தவர்கள் தாங்கள் செய்யாதவற்றை எண்ணி வருத்தத்தை அனுபவிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன, இந்தக் கவலைகள் தாங்குவதற்கு அதிக வலியுள்ளவையாக இருக்கலாம்.  

அநேகமாக எல்லாரும் வாழ்க்கையில் ஏதோ சில கவலைகளை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவாக இருப்பதால், இந்தக் கவலைகளை அவர்கள் எப்படிக் கையாள வேண்டும் என்பது ஒரு முக்கியமான நலம் சார்ந்த விஷயமாகிறது.    கனடாவில் உள்ள மான்ட்ரியாலில் இருக்கும் கான்கார்டியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜாமி ஃபார்குவாஹர் தலைமையில் நடைபெற்ற ஒரு சுவையான ஆராய்ச்சியில், ஓய்வுபெற்றோர் தங்களுடைய வாழ்க்கைக் கவலைகளை சிறப்பாகச் சமாளிப்பதற்கு இரண்டு வியூகங்களை வெளிப்படுத்தினார்கள்.     முதல் வியூகம், ஒருவர் தன்னுடைய ஓய்வு ஆண்டுகளை ஒரு “சரி செய்யக்கூடிய” வருத்தத்தைச் சரிசெய்வதற்காகச் சுறுசுறுப்பாகச் செலவிடுவது-எடுத்துக்காட்டாக தன்னுடைய குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுவது, அதிகம் பயணம் செய்வது அல்லது பொருளுள்ள தன்னார்வலர் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வதுபோன்றவை.  இரண்டாவது வியூகம், சில வருத்தங்களைத் தீர்க்க இயலாது என்கிற பார்வையை ஏற்றுக்கொள்வது, அதன்மூலம் அந்த வருத்தத்திலிருந்து தன்னை "விலக்கிக்கொள்வது” – எடுத்துக்காட்டாக, இன்னும் அதிகம் படித்திருக்கலாம் என்கிற கவலையை இதற்கு மேல் தீர்க்க இயலாது என்று தீர்மானித்துக்கொண்டு உளப்பூர்வமாக அந்தக் கவலையை விடுவது.       இந்த ஆராய்ச்சியாளர்கள் தீர்மானித்த விஷயம், “ஓய்வு பெற்ற ஒருவருடைய செயல் ஊடாடல் மற்றும் மனநிறைவைக் கண்டறியும் ஒரு குறிப்பிடத்தக்க நிர்ணயிப்பான், கவலையைக் கையாளுதல்.”

இன்றைக்குப் பெரிய தொழில் நிறுவனங்கள் கவலையைப்பற்றிய கவனத்தைக் கொண்டிருப்பதில் வியப்பில்லை, அவர்கள் வலி மிகுந்த இந்த உணர்வைச் சரிசெய்யும் நோக்கத்துடன் பொருள்கள் மற்றும் தயாரிப்புகளை முன்வைக்கும் “வியூகத்தை”க் கொண்டிருக்கிறார்கள்.     எடுத்துக்காட்டாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் சமீபத்தில் 2,000 மூத்த அமெரிக்கர்களை (55 அல்லது அதற்கு மேல் வயது கொண்டவர்கள்) அணுகிப் பேசியது, அதன்மூலம் தெரியவந்த விஷயங்கள் அருமையானவை.   உங்களுடைய வாழ்க்கையின் மிகப் பெரிய கவலை எது என்று அவர்களிடம் கேட்கப்பட்டபோது, பங்கேற்பாளர்களில் 25%க்கு மேற்பட்டவர்கள் “நண்பர்களுடன் தொடர்பை இழந்தது” என்று சொன்னார்கள், அடுத்த இடத்தில், 20% பேர் “ஓய்வெடுப்பதற்காகப் போதுமான அளவு பயணம் செய்யாதது” என்று சொன்னார்கள்.  மிக அதிகமாக வேலை செய்ததற்காகவும், தங்களுடைய குழந்தைகளுடன் போதுமான அளவு நேரம் செலவிடாததற்காகவும் பெண்களைவிட ஆண்கள் அதிகமாக வருந்துகிறார்கள் என்பது எதிர்பார்க்கக்கூடியதுதான் (இந்த இரு கேள்விகளுக்கும் 17% ஆண்கள் "ஆம்” என்று பதில் தெரிவித்திருந்தார்கள், பெண்களில் முறையே 8% மற்றும் 12% பேர் "ஆம்” என்று தெரிவித்திருந்தார்கள்).      இதற்கு எதிராக, போதுமான அளவு பயணம் செய்யவில்லையே என்று ஆண்களைவிடப் பெண்கள் அதிகம் வருந்துகிறார்கள் (பெண்கள் 22%, ஆண்கள் 17%).   இந்தக் கணக்கெடுப்பை மையமாகக் கொண்டு பிரிட்டிஷ் ஏர்வேஸ் எல்லா வயது கொண்ட மக்களையும் மகிழ்ச்சிக்காக அதிகம் பயணம் செய்யவேண்டும் என்று தூண்டக்கூடும்.    மற்ற பயனாளர் வாங்குதல்களுக்கும் இதேபோன்ற ஒரு தாக்கம் உண்டா? 

இந்த ஆண்டில் MIT செய்திகள் ஓர் அறிக்கையை வெளியிட்டது, இதன்படி, வசதியான வாங்குநர்கள், ஒரு கவர்ச்சியான பொருளை வாங்குவதற்கான ஒரு வாய்ப்பு தங்களிடம் இருந்தபோது அதை வாங்காமல் விட்டுவிட்டோமே என்று வருந்துகிற சாத்தியம், அந்தப் பொருளை வாங்கிய பிறகு அதற்காக அதிகம் செலவழித்துவிட்டோமோ என்று வருந்துவதற்கான சாத்தியத்தைவிட அதிகம் என்று ஆராய்ச்சி தெரிவிக்கிறது.    MIT பேராசிரியர் கரேன் ஜெங் இதுபற்றிக் கூறியது, “ப்ராண்ட் செய்யப்பட்ட ஃபேஷன் பொருட்கள் வலுவான "தீர்ந்துவிடுமோ என்கிற வருத்தத்தை” உண்டாக்கக்கூடும், வலுவற்ற "விலை அதிகம்” என்கிற வருத்தத்தை உண்டாக்கக்கூடும்.”  அதாவது, ஒருவர் ஒரு விலையுயர்ந்த பொருளை வாங்குகிறார் என்றால் அதற்காகத் தான் எவ்வளவு பணம் செலுத்தினோம் என்பதைப்பற்றிக் காலப்போக்கில் அவர் மறந்துவிடக்கூடும், அதை வாங்கினோமே என்று எண்ணி மகிழக்கூடும்.   அதேசமயம், அவர் அந்தப் பொருளை வாங்குவதற்கான வாய்ப்பை விட்டுவிட்டால், வருத்தத்தின் வலியை அனுபவிப்பார்.  சுவையான விஷயம், டி-ஷர்ட்கள்போன்ற இயல்பான பொருட்களில் இந்தத் தாக்கம் காணப்படுவதில்லை, ஏனெனில் பெரும்பாலானோர் இந்தத் துணிகளை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள்.     

இதில் தெளிவாகத் தெரிகிற ஒரு விஷயம், தீவிரக் கவலையானது மக்களுடைய மன நலம் மற்றும் உடல் நலத்துக்குக்கூட பாதிப்பைக் கொண்டுவருகிறது.  டொரன்டோவிலுள்ள சன்னி புரூக் நல மையத்தை சேர்ந்த டாக்டர் இசபெல்லே பவ்வர் தலைமையில் நடைபெற்ற ஓர் ஆராய்ச்சியில், தங்களுடைய வெற்றிகரமான நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினருடன் தன்னை ஒப்பிட்டுக்கொண்ட மக்களுக்கு, தன்னைவிட மோசமாகக் கருதுபவர்களுடன் தங்களை ஒப்பிட்டுக்கொள்ளும் மக்களுடன் ஒப்பிடும்போது அடிக்கடி ஜலதோஷப் பிரச்னை வருவது கண்டறியப்பட்டுள்ளது.    மான்ட்ரியாலில் உள்ள கான்கார்டியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் கார்ஸ்டென் ராஷ் நடத்திய ஓர் ஆய்வு, மூத்த குடிமக்களுடைய தீவிரக் கவலைகளால் தூக்கப் பிரச்னைகள் அதிகரித்ததாகவும், கார்டிசால் சமநிலையின்மை ஏற்பட்டதாகவும், அவர்களுடைய மகிழ்ச்சி உணர்வுகள் குறைந்ததாகவும் இணைத்துக் காட்டியது.   

மக்கள் தங்களுடைய வருத்தங்களைக் குறைந்துக்கொண்டு, அதன்மூலம் தங்களுடைய உணர்வு நலனை மேம்படுத்திக்கொள்ளக் கற்றுக்கொள்ள இயலுமா?  இயலும் என்று நிச்சயமாக தோன்றுகிறது.  இதுபற்றி நிகழ்த்தப்பட்ட ஒரு பரிசோதனை ஆராய்ச்சியில், நாட்குறிப்பு எழுதுகிற பழக்கம், அந்தந்த நிகழ்வுகளை உணர்வுரீதியில் செயல்முறைப்படுத்தி அவற்றை மறப்பதற்கு உதவுகிறது என்று தெரியவந்துள்ளது. குறிப்பாக வலிமிகுந்த தனிப்பட்ட அனுபவங்களைப்பற்றி எழுதுவது மிகவும் உதவுகிறதாம்.     20ம் நூற்றாண்டைச்சேர்ந்த பிரிட்டிஷ் எழுத்தாளர் கேத்ரீன் மேன்ஸ்ஃபீல்ட் இதுபற்றித் தெரிவித்த சிந்தனைகள் மிகவும் சிறந்தவையாக இருக்கின்றன, ”வருத்தம் என்பது ஒரு பயங்கரமான ஆற்றல் வீணாக்கி.      அதை வைத்து நாம் உருப்படியாக எதையும் செய்ய இயலாது.   வேண்டுமென்றால் சும்மா அதில் புரண்டுகொண்டிருக்கலாம் அவ்வளவுதான்.”

வழிநடத்தப்படும் செயல்பாடு        

இதைச் செய்துவிட்டோமே என்று வருந்துகிற ஒரு விஷயத்தைச் சிந்திக்கவேண்டும், போதுமான அளவு நேரம் எடுத்துக்கொண்டு அதைப்பற்றி முழுமையாக எழுதவேண்டும்.  அதன்பிறகு, அந்த விஷயம் தொடர்பான தன்னுடைய உணர்வுப்பிணைப்பை விட்டுவிடவேண்டும்.  இதைச் செய்யாமல் விட்டுவிட்டோமே என்கிற கவலை தொடர்ந்து வரும்போது, “எதார்த்தப் பரிசோதனை” ஒன்றைத் தீவிரமாகச் செய்வது பயனளிக்கலாம்.  அதாவது, இவர் அதைச் செய்திருந்தால் உண்மையிலேயே இவருடைய வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் வந்திருக்குமா அல்லது அவர் தன்னுடைய கச்சிதமற்ற உலகில் ஒரு கச்சிதமான சூழலைக் கற்பனை செய்துகொண்டு சிறிய அளவு பலனை அடைகிறாரா அல்லது எந்தப் பலனையும் அடையவில்லையா?

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org