தனிப்பட்ட அனுபவம்: நன்றியுணர்வுப் பழக்கமானது ஓர் அறையில் விளக்குகளை எரியச்செய்வதாக, அங்கு ஏற்கனவே என்ன இருக்கிறது என்பதைக் காட்டுவதாகத் தோன்றுகிறது

நலத்துறை ஆய்வாளர்கள் ஒரு மந்திர மருந்தைக் கண்டுபிடித்துள்ளார்கள் அது மன வலிமையை அதிகரிக்கிறது, சுய மதிப்பை மற்றும் பச்சாதாபத்தை மேம்படுத்துகிறது, தீவிரத்தன்மையைக் குறைக்கிறது, மனத்தைத் தளர்வாக இருக்கச்செய்கிறது, உளவியல் நலனை மேம்படுத்துகிறது, அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் போவதைத் தடுக்கிறது, வலிகள் மற்றும் நோவுகளைக் குறைக்கிறது, நட்புகளை உண்டாக்குகிறது மற்றும் ஆழமான உறவுகளை நீடித்திருக்கச் செய்கிறது. இதில் ஒரு நல்ல விஷயம், மக்கள் அனைவரிடமும் ஏற்கனவே அந்த மருந்து உள்ளது, அதை அவர்கள் செயல்படுத்தினால் போதும். அந்த மருந்தின் பெயர், நன்றியுணர்வு என்கிற மனநிலை.

ஹார்வார்ட் கல்வி நிறுவனமானது நன்றியுணர்வை இவ்வாறு வரையறுக்கிறது: “ஒருவர் பெறுகிற தொட்டறியக்கூடிய அல்லது தொட்டறிய இயலாத விஷயங்களுக்காக அவர் நன்றி பாராட்டுதல்.” நன்றியுணர்வுப் பழக்கமானது ஒருவருடைய மூளையிலும் ஒட்டுமொத்த மனநலனிலும் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதுபற்றிய அனுபவத் தரவுகளை ஆய்வாளர்கள் சேகரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

பிப்ரவரி மாதத்தின் நிறைவில் நான் ஒரு நன்றியுணர்வு நாட்குறிப்பைப் பராமரிக்கத் தொடங்கியபோது, கல்வியாளர்களின் இந்த ஆர்வத்தைப்பற்றி எனக்கு ஏதும் தெரிந்திருக்கவில்லை. நான் ஒப்புக்கொள்ளுதல் மற்றும் ஏற்றுக்கொள்ளுதலின் கணங்களுக்கு என்னுடைய விழிப்புணர்வைத் திறந்துவைக்க விரும்பினேன், நேர்ச் சிந்தனையை வலுக்கட்டாயமாக முயற்சி செய்ய விரும்பவில்லை. அந்த நிகழ்வுகளைப்பற்றியும் என்னுடைய வாழ்க்கையில் அவற்றின் தாக்கத்தைப்பற்றியும் நான் நாட்குறிப்புகளை எழுதத்தொடங்கினேன்.

இந்த நன்றியுணர்வுச் சவாலை ஏற்றுகொள்வதற்கான தேடலை நான் உணர்ந்ததற்குக் காரணம், கடந்த சில ஆண்டுகளாக என் வாழ்க்கையில் ஓர் அவிழ்த்தல் மற்றும் நாடுதல் உணர்வு இருந்துவந்துள்ளது. சலுகை கொண்ட வாழ்க்கையின் வளங்கள், ஆழமான உறவுகள் மற்றும் நிறைய அன்பை நான் மகிழ்ச்சியோடு அனுபவித்தபோதும், ஐயம், பதற்றம்,விரக்தி, சோகம், இழப்புணர்வு, குழப்பம் மற்றும் என்னுடைய வாழ்க்கைக்கு நானே உரிமை கொள்ளவேண்டிய ஒரு பசி ஆகியவற்றை உணர்ந்தேன். என் வாழ்க்கையின் இருள் மற்றும் மிகுந்த நம்பிக்கையின்மீது நன்றியுணர்வு லென்ஸைக் குவிப்பது ஒரு பரபரப்பான கதையின் முக்கியமான கட்டத்தை எட்டியதுபோல் உணரச்செய்தது. அது என்னுடைய அன்றாட வாழ்க்கையில் கண்ணோட்டம் மற்றும் பாரபட்சமின்மையின் சாத்தியங்களை அதிகப்படுத்தியுள்ளது, ஒவ்வொரு கணத்திலும் இருத்தலை ஊக்குவித்துள்ளது.

நன்றியுணர்வு என்பது உண்மையில் எப்படித் தோன்றுகிறது? மிகுந்த போக்குவரத்தின் மத்தியில் ஒருவர் தடுமாறிக்கொண்டிருக்கிறார். அப்போது, சூரியன் மறைவதை எதிர்பாராதவிதமாகக் காண்கிறார். அதுபோல்தான் நன்றியுணர்வும் தோன்றுகிறது.

ஒருவர் தன்னுடைய உடலில் நன்றியுணர்வை எங்கே உணர்கிறார்? சில நேரங்களில் அவர் அதைத் தன்னுடைய கண்ணிலோ தொண்டையிலோ உணர்கிறார் (நிறைவாக, அவரிடம் ஆனந்த கண்ணீர் வழிகிறது), சில நேரங்களில் அவர் அதனைத் தன்னுடைய இதயத்தில் உணர்கிறார், ஒரு விரிவாக்கமாக, ஏற்றுக்கொள்ளுதலின் ஒரு வெள்ளமாக, ஒருவிதமான உள் சுய அணைப்பாகக் காண்கிறார்.

பல ஆண்டுகளுக்குமுன்னால் நான் சமூக ஊடகத் தளங்களில் ஒரு ‘நன்றியுணர்வுச் சவாலை’ ஏற்றுக்கொண்டேன், அப்போது நான் சிறுநீர் கழிப்பதற்கான ஓர் இடத்துக்காக, என்னுடைய சிறுவயதில் நான் கண்ட ஒரு மாங்காய் மரத்துக்காக, என்னுடைய தாய்க்காக, மூச்சுவிட இயலும் என்னுடைய திறனுக்காக, வாழ்க்கையைக் காப்பாற்றும் உரையாடல்களைக் கொண்டிருந்ததற்காக, [என்னுடைய வாழ்க்கையில் வந்த] மனிதர்களுக்காக நன்றியுணர்வைக் கண்டேன். என்னுடைய பதிவுகளுடன் பிற மக்களுக்கு உண்டான இணைப்புகள் என்னுடைய நன்றியுணர்வைப் பல மடங்காக்கின. இந்தமுறை நன்றியுணர்வு நாட்குறிப்பானது இணைப்பை உருவாக்கும் ஒரு கட்டமைப்புத் தொகுதியாக எனக்குத் தோன்றியது. ஆனால், அது பெருமளவு உள்நோக்கிப் பார்ப்பதாக இருந்ததால், நாளின் நிறைவில் ஓர் இடத்தில் அமர்ந்து குறிப்புகளை எழுதுவது சவாலாகத் தோன்றியது. இதற்கான அன்றாட ஒழுக்கத்தை உண்டாக்கிக்கொள்வதற்குச் சிறிது உழைப்பு தேவைப்பட்டது   

இந்தமுறை, நன்றியுணர்வுச் சவாலானது உள் இணைப்புகளை வலுப்படுத்துவது, நான் நானாக இருக்க அனுமதிப்பது, உள் மற்றும் வெளி முரண்களை ஏற்றுக்கொள்வது, உள் நிலப்பரப்பை உணர்வது, பல நினைவுகளிலிருந்து அழிந்துபோன தோற்றங்களை நீக்குவது, என்னுடைய அச்சங்களுடன் கை குலுக்குவது, என்னை எதிர்மறையின் சூழல்களுக்குள் உறிஞ்சி இழுத்த இணைப்புகளை உதறுவது போன்றவற்றைப்பற்றியதாக இருந்தது. ஆனாலும், அதிகம் ஆபத்துக்குள்ளாகக்கூடியவராக மற்றும் ஆழமான இருப்பைக் கொண்டவராக இருப்பதற்காக என்னுடைய இதயத்தைத் திறப்பதாகவும் இது இருந்தது .

இந்த நாட்குறிப்பைத் தொடங்கியபோது நான் வேலை தேடிக்கொண்டிருந்தேன். நன்றியுணர்வுச் சவாலைத் தொடங்கிப் பத்து நாட்களுக்குள் வேலையானது என்னை நோக்கி வரத்தொடங்கியது. பதினைந்தாவது நாளில் நான் இவ்வாறு எழுதினேன்: நிறைய வேலை வந்து குவிகிறது. சில மாற்றங்கள் நிகழ்கின்றன. நான் மூச்சு விடுவதற்கும் நாட்குறிப்பு எழுதுவதற்கும் நேரத்தைக் கண்டறிந்திருப்பதால் எனக்குப் பல வியப்பூட்டும் விருந்துகள் கிடைத்துள்ளன, எடுத்துக்காட்டாக, உதிக்கும் சூரியன் ஒரு பால்கனிச் செடியில் தொங்கிக்கொண்டிருக்கிற காட்சி, அல்லது, ஒரு சக ஊழியருடன் நான் முரணை அனுபவிக்கும்போது ‘சண்டையிடுவது எப்படி’ என்பதுபற்றிய ஒரு புத்த சமயப் புத்தகத்தைக் கண்டறிவது.

தொழில்முறையில் ஓர் எடிட்டரான நேஹா M, நன்றியுணர்வு நாட்குறிப்பு எழுதுவது ’கவனப் பழக்கத்தை’ ஊக்கப்படுத்துவதைத் தான் அனுபவிப்பதாகச் சொல்கிறார். அவர் தனக்குத்தானேயும் நன்றியுணர்வை வெளிப்படுத்திக்கொள்கிறார், இது எழுதுவதன்மூலம் நிகழ்கிறது, எடுத்துக்காட்டாக, ’நான் மிகவும் நன்றியுணர்வாக உணர்கிறேன்… நான் இன்றைக்கு என்னை நன்கு கவனித்துக்கொண்டேன்.’

சுதந்திர எழுத்தாளர் மற்றும் யோகா பயிற்றுநரான பூர்ணிமா மைசூர், ‘சிறப்பாகச் செயல்படுகிற அனைத்திற்கும் ஒரு தொடர்ந்த நினைவூட்டி’யாக இந்த நாட்குறிப்பை எண்ணுகிறார். மிகவும் அழுத்தமான நேரங்களில்கூட இந்த நினைவூட்டி நன்கு செயல்படுகிறது என்கிறார். இந்தச் சவாலை ஏற்றுக்கொண்டதற்கு அவர் சொல்லும் காரணங்கள், ‘வாழ்க்கையில் நடந்துள்ள அனைத்து நல்லவற்றையும் நீங்கள் உங்களுக்கே நினைவுபடுத்திக்கொள்ளவேண்டும், குறிப்பாக, உங்கள் மனம் மிகவும் சோர்ந்திருக்கும்போது.

பெற்றோர் மற்றும் குழந்தைகளுடன் பணியாற்றும் ஆலோசகரான சுபா பார்த்தசாரதி, இந்தப் பழக்கம் ஓர் அன்றாட வேலையாகிவிடாதபடி பார்த்துக்கொள்ளவேண்டும் என்று எச்சரிக்கிறார். “தங்களுடைய வீட்டில் தாங்கள் எப்படி ஒரு நன்றியுணர்வுச் சுழலை உருவாக்கினோம் என்பதை ஒரு தந்தை பகிர்ந்துகொண்டது எனக்கு நினைவிருக்கிறது. ஒரு மாதத்துக்குப்பிறகு அது வெறும் சடங்காகிவிட்டது.”

சில நேரங்களில் இவருக்கு வரும் சில பின்னூட்டங்கள், “நாங்கள் நன்றியை உணரும் விஷயங்களை எழுதும்போது, நாங்கள் இன்னும் உள்ளுக்குள் மகிழ்ச்சியை உணரவில்லையே என்பதுபற்றிய குற்றவுணர்வைச் சந்திக்கிறோம்” என்கின்றன. இது பற்றி அவர் சொல்வது, “ஒவ்வோர் அனுபவமும் தன்னளவில் தான் இருக்கவேண்டிய விதத்தில் இருக்கிறது என்பதை உணர்வதற்கு நேரம் தேவை.”

ஒவ்வொரு நாளும் தனக்குக் கிடைத்திருக்கும் வரங்களை எண்ணிப்பார்ப்பது மூளையில் ஒரு நேர்விதமான தாக்கத்தைக் கொண்டிருக்கிறது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக ரேவதி ரமணன் வாசித்துள்ளார். இப்போது அவர் ஒவ்வொரு நாளும் தான் நன்றியை உணர்கிற ஒரு விஷயத்தைப்பற்றி ட்விட்டர் இணையத்தளத்தில் எழுதுகிறார். இந்தப் பழக்கத்தை அவர் தொடங்கியபோது, எதிர்மறையான கருத்துகளும் அதீதமான சிந்தனையும் அவரைக் கீழ்நோக்கி இழுத்துக்கொண்டிருந்தன. வீட்டுக்கு வெளியே ஒரு முழு நேரப் பணியைச் செய்தபடி இரட்டைக் குழந்தைகளை வளர்க்கிற அன்றாட அழுத்தமானது இப்போதும் அவரை அவ்வப்போது களைப்படையச்செய்கிறது. ஆனால், இந்தப் பழக்கமானது அவர் இரவு நேரத்தில் நன்கு உறங்குவதற்கு உதவுகிறது. "நன்றியுணர்வைக் கண்டறிவதுதான் மிக முக்கியம் என்றில்லை; அது இருக்கிறதா என்று பார்ப்பதற்கு நினைவுகொள்வதுதான் முதல் விஷயம்,“ என்கிறார் ரேவதி, “நன்றியுணர்வானது என்னை நகர்த்துவதன்மூலம் அந்தக் கணத்தை நகர்த்துகிறது. என்னைச் சுற்றியுள்ள எதுவும் மாறவில்லை, நான் மாறுகிறேன். ”     

எனக்குத் தெரிந்தவரை, நன்றியுணர்வுப் பழக்கமானது அதிக இரக்கம், புறத்தன்மை, நுண்ணுணர்வு மற்றும் வாழ்க்கையை அது இருக்கும் விதத்தில் ஏற்றுக்கொள்கிற ஓர் ஆழமான உணர்வை நோக்கித் திருப்பப்பட்ட ஓர் உள் ரேடாருடன் தன்னை மீண்டும் அமைத்துக்கொள்வதாகும். அந்தத் திறன் நமக்குள் எப்போதும் இருப்பதாகத் தோன்றுகிறது, அதனை நாம் மீண்டும் பயன்படுத்தத்தொடங்குவது மதிப்புமிக்கதாக இருக்கும் என்று தோன்றுகிறது, குறிப்பாக, அந்தக் கணத்தில் வாழ்க்கை நமக்குத் தர விரும்பும் விஷயங்களைவிட அதிக விஷயங்களை நாம் விரும்பும்போது இது நல்ல பலன் தருகிறது. நன்றியுணர்வுப் பழக்கமானது ஓர் அறையின் விளக்குகளை எரியச்செய்கிறது, அந்த அறையில் ஏற்கனவே உள்ள விஷயங்களை மக்களுக்குக் காட்டுகிறது.

இதற்காக அவர்கள் அந்த அறையைச் சுத்தப்படுத்தவேண்டியிருக்கலாம், தூசு தட்டவேண்டியிருக்கலாம், குப்பைகளை அகற்றி ஒழுங்குபடுத்தவேண்டியிருக்கலாம், இவையெல்லாம் வலியில்லாத பணிகள் என்று சொல்ல இயலாது, ஆனால் அதேசமயம், இந்தப் பழக்கத்தால் மீண்டும் அலங்கரிக்கப்பட்ட, மூச்சுவிடுதலை இன்னும் எளிதாக்கக்கூடிய ஓர் அறை என்கிற விருது கிடைக்கிறது. 

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org