கர்ப்பகாலத்தில் பதற்றம்

பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது கவலைப்படுவது சகஜம்தான். தாங்கள் எதைச் சாப்பிடலாம், எதைச் சாப்பிடக்கூடாது, எதைக் குடிக்கலாம், எதைக் குடிக்கக்கூடாது, என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது... கர்ப்பிணிப்பெண்கள் இப்படி எண்ணிக் குழம்புவது இயல்புதான். அது ஒரு மகிழ்ச்சியான காலகட்டம். அதேசமயம், பயமான காலகட்டமும்கூட. ஆனால், இந்த எண்ணங்கள் அவர்களை மிகவும் தொந்தரவு செய்தால், அவர்களுடைய தினசரி வாழ்க்கையைப் பாதிக்கத்தொடங்கினால், அநேகமாக அவர்களுக்குப் பதற்றக் குறைபாடு வந்திருக்கலாம்.

கர்ப்பகாலத்தில் வரும் பதற்றக் குறைபாட்டுக்கான சில அறிகுறிகள்:

·தொடர்ச்சியான கவலையெண்ணங்கள், அவை கொஞ்சமும் குறையாமல் நீடித்தல்

·தொடர்ந்து நிலைகொள்ளாத உணர்வு அல்லது எரிச்சல் அல்லது விளிம்பிலிருக்கும் உணர்வு

·அதீத பயம், அதைச் சமாளிக்க இயலாத உணர்வு

·தசைகள் இறுகுதல், அமைதியாக இருக்க இயலாமல் சிரமப்படுதல்

·இரவில் தூக்கம் வராமல் சிரமப்படுதல்

கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண், இயல்பான குழப்பத்தைத் தாண்டி மிகவும் கவலைப்பட்டால், அவருக்கு இந்த அறிகுறிகளில் எவையேனும் இருந்தால், அவர் ஒரு நிபுணரைச் சென்று சந்தித்து உதவிபெறுவது நல்லது. இதுபற்றி அவர்கள் தங்களுடைய கணவரிடம் அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவரிடம் சொல்லலாம். ஒரு மனநல நிபுணரைச் சந்திப்பதுபற்றிப் பேசலாம்.

கர்ப்பகாலத்தில் பெண்களிடம் காணப்படும் உடல், மன மாற்றங்களைக் கருத்தில்கொண்டு பார்க்கும்போது, பல பெண்களுக்குப் பதற்றம், மனச்சோர்வுக்கான அறிகுறிகள் வரும் வாய்ப்பு அதிகம். பெரும்பாலான பெண்கள் இதை எளிதில் சமாளித்துவிடுகிறார்கள். அவர்களுக்கு வேறு எந்த உதவியும் தேவைப்படுவதில்லை. அதேசமயம், சில பெண்களுக்கு இந்தப் பிரச்னை தீவிரமாகிவிடுகிறது. கர்ப்பமாக உள்ள ஒரு பெண்ணுக்குப் பதற்றக் குறைபாடு வருகிற வாய்ப்பை அதிகரிக்கக்கூடிய சில காரணிகள்:

·இதற்குமுன் அவருக்குப் பதற்றக் குறைபாடு வந்திருத்தல்

·அவரது குடும்பத்தில் வேறு யாருக்காவது பதற்றக் குறைபாடு வந்திருத்தல்

·இதற்குமுன் அவர் கர்ப்பமாக இருந்தபோது ஏதேனும் எதிர்மறை அனுபவத்தைச் சந்தித்திருத்தல்

·வீட்டில் அல்லது அலுவலகத்தில் அதீத மன அழுத்தம்

இது இயல்பான விஷயம்தான்.

அநேகமாக இது பதற்றக் குறைபாடாக இருக்கலாம்

குழந்தையின் ஆரோக்கியத்தைப்பற்றிக் கவலைப்படுதல், தான் ஒரு நல்ல தாயா என்று கவலைப்படுதல், குழந்தை பெற்றதால் ஏற்பட்டிருக்கக்கூடிய நிதிச் சிரமங்களைப்பற்றிச் சிந்தித்தல் போன்றவை.

இந்தக் கவலைகள் அதிகரித்து, அவரால் தன்னுடைய தினசரி வாழ்க்கையையே சமாளிக்க இயலாதபோது; அலுவலகத்தில், வீட்டில் அவரால் இயல்பாகப் பணியாற்ற இயலாதபோது; முன்பு அவர் அனுபவித்துச் செய்த விஷயங்களில் இப்போது ஆர்வமில்லாமல்போகும்போது; அடிக்கடி அவருக்குப் பயம் வரும்போது

தூக்கம் போதாமல் ஆங்காங்கே உடல் வலி ஏற்படுதல்

அடிக்கடி படபடப்பு வந்து, அதனால் தசைகள் இறுகிக்கொண்டு களைப்பு ஏற்படுதல்

சிகிச்சை

பதற்ற அறிகுறிகள் மிதமாகவோ நடுத்தர அளவிலோ உள்ள பெண்களுக்கு, பிறருடைய உணர்வுநிலை ஆதரவு, கொஞ்சம் சைக்கோதெரபி (அறிவாற்றல் பழகுமுறைச் சிகிச்சை (CBT) அல்லது, உளப்பகுப்பாய்வுச் சிகிச்சை (IPT) போன்றவை) போதும். இந்தச் சிகிச்சைகளின்மூலம், அவர்களுக்கு இந்தப் பய எண்ணங்கள் ஏன் வந்தன என்கிற உண்மையை ஆராய்ந்து கண்டுபிடிக்கலாம், அவர்களுடைய சிந்தனையை மாற்றலாம். இதைக்காட்டிலும் தீவிரமான அறிகுறிகள் உள்ள பெண்களுக்கு, மருந்துகளும் தேவைப்படலாம். இந்த மருந்துகளைப்பற்றி ஒரு மனநல மருத்துவர் தீர்மானிப்பார். தாய்க்கு எந்த மருந்துகள் குறைவான ஆபத்துடன் அதிகப் பலன்களைத் தரும் என்று அவர் சிந்தித்து ஆலோசனை வழங்குவார். பெரும்பாலான மருந்துகளைக் குறைந்த அளவில் உட்கொள்ளவேண்டியிருக்கும், அல்லது, தேவையுள்ளபோதுமட்டும் உட்கொள்ளவேண்டியிருக்கும்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org