கவனித்துக்கொள்ளுதல்

மனநலத்துறையில் பாதிக்கப்பட்டிருப்பவர்களைப் பார்த்துக்கொள்ளுகிறவர்களுடைய பங்கு மிகவும் முக்கியமானது. இவர்கள் எந்தவிதமான சம்பளமும் பெற்றுக்கொள்ளாமல் மனநலப் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ள ஒருவருக்கு பராமரிப்பு அளிக்கிறார்கள், அவர்களை ஆதரித்து அவர்களுக்கு வேண்டியவற்றைச் செய்கிறார்கள். பொதுவாக பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்துக்கொள்கிறவர்கள் அவர்களுடைய நெருங்கிய குடும்ப உறுப்பினர்களாக இருப்பார்கள், அவர்களைக் கவனித்துக்கொள்வதற்காக இவர்கள் குறிப்பிடத்தக்க நேரத்தைச் செலவிடுவார்கள்.

மனநலப் பிரச்னைகளை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு, நாம் மனநலப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களுடைய உலகத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளவேண்டும், அவர்கள் வழங்கும் மதிப்பு மிக்க பங்களிப்பை உணரவேண்டும்.

இணையத்தளத்தின் இந்தப் பகுதி மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் லட்சக்கணக்கானவர்கள் இப்படி உள்ளார்கள், இவர்களுடய பங்களிப்பு எங்கும் பேசப்படுவதில்லை, பாராட்டப்படுவதில்லை, அவர்கள் அதை எதிர்பார்க்காமல் தொடர்ந்து தங்களுடைய சிறந்த பங்களிப்பை வழங்கிவருகிறார்கள். தங்களுடய அன்புக்குரியவர்களின் வாழ்க்கையைச் சிறப்பாக்க தங்களால் இயன்றதைச் செய்து வருகிறார்கள்.

நீங்கள் மனநலப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட உங்கள் அன்புக்குரியவரைக் கவனித்துக்கொள்கிறீர்கள் என்றால், அதில் உங்களுக்கு உதவக்கூடிய விவரங்களையும் தகவல்களையும் நாங்கள் இங்கே வழங்க உள்ளோம். அத்துடன் உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தத் தேவையான விஷயங்களையும் நீங்கள் இங்கே காணலாம்.

நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம், நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையின் ஏதாவது ஒரு காலகட்டத்தில் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவரை கவனித்துக்கொள்கிறவராக வாழவேண்டியிருக்கலாம். ஆகவே, இந்தக் கட்டுரைகளை அனைவரும் வாசிக்கவேண்டியது அவசியம்.

ஒருசிலர் மனநலம் பாதிக்கப்பட்டவர்களைச் சிலநாள் மட்டுமே கவனித்துக்கொள்வார்கள், வேறு சிலர் ஆண்டுக்கணக்கில் அவர்களைக் கவனித்துக்கொள்ளவேண்டி இருக்கலாம். உங்களுடைய கவனித்துக்கொள்ளும் பணி தாற்காலிகமானதாகவே இருந்தாலும், இதைப்பற்றி நீங்கள் அறிந்துகொள்வது நல்லது.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org