சமூகப் பராமரிப்பால், மனநலம் பாதிக்கப்பட்டோர் சிறப்பாகக் குணமாகலாம்

கர்நாடகத்தின் பவகடா தாலுக்கா, மங்கலவடாவில் ஒரு குடிசையில் அமர்ந்திருக்கிறார் 32 வயது ஹனுமந்தராயா. தன்னைச்சுற்றி அமர்ந்திருக்கும் அக்கம்பக்கத்து வீட்டாரை அவர் கவனமின்றிப் பார்க்கிறார். ஹனுமந்தராயா சிறுவனாக இருக்கும்போதே, அவருக்குப் புத்திசாலித்தனக் குறைபாடு, சைக்கோசிஸ் பிரச்னைகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவரைக் கவனித்துக்கொள்கிற முதன்மையான, ஒரே நபர், அவருடைய தாய் லக்‌ஷ்மம்மா. 80 வயதான லக்‌ஷ்மம்மா மிகவும் களைத்திருக்கிறார். ”அவனை எப்போதும் கவனித்துக்கொண்டே இருப்பது களைப்பூட்டுகிறது. சில நேரங்களில், தன்னைச் சுற்றியிருப்பவர்கள்மீது அவன் கோபப்படுகிறான், ஆவேசப்படுகிறான். எனக்குப்பிறகு அவனை யார் கவனித்துக்கொள்வார்கள்?” என்கிறார் அவர். பவகடாவிலிருக்கும் நரேந்திரா அறக்கட்டளை, பெங்களூரைச் சேர்ந்த, மனநலம் சார்ந்து இயங்கும் லாபநோக்கில்லாத நிறுவனமான இந்திய அடிப்படைத் தேவைகள் (BNI) ஆகியவற்றின் உதவியுடன் மங்கலவடாவில் மாற்றுத்திறனாளிகள் சுய உதவிக்குழு (அல்லது சங்கம்) ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. லக்‌ஷ்மம்மா அதில் பங்கேற்கிறார். இந்த இயக்கம், மங்கல்வாடா போன்ற கிராமங்களில் மனநல நல்வாழ்வுப் பரமாரிப்பில் சமூகப் பங்களிப்பைக் கட்டமைப்பதற்கு இணைந்து பணியாற்றுகிறது.

லக்‌ஷ்மம்மா, வீட்டிலிருந்து வெளியே செல்ல வேண்டிய தேவையிருப்பதால், அவளது மகனைக் கவனிப்பதற்காக சங்கா உறுப்பினர்களை நாடுகிறார் ஒரு பராமரிப்பாளராக, அவள் தனிமையாக மற்றும் சோர்வாக உணரலாம். நாங்கள் அவளைப் போன்ற பராமரிப்பாளர்களுக்கு பராமரிப்பில் இருந்து இடைவெளி எடுத்துக் கொண்டு, மற்ற வேலைகளைப் பார்ப்பதற்கு உதவுகிறோம். நாங்கள் அவர்களின்  குடும்பத்தில் உள்ள மனநிலைப் பாதிக்கப்பட்டவர்களைப் பராமரிப்பதை மாறி மாறிச் செய்கிறோம்என்று இயலாமை உதவுக் குழு உறுப்பினர் சதீஷ் கூறுகிறார். ஆனால்  கடைக்குப் போவது போன்ற சிறிய வேலைகளுக்கு, அவள் அவளது அண்டை வீட்டார்களையும் நாடலாம்.

வளர்ச்சிப் பணியாளர்களால் நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பல ஆண்டுகளாகப் பங்கேற்றதும், மனநல வல்லுநர்களால் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட பல மருத்துவ முகாம்களும், இக்கிராம உறுப்பினர்களை மனநலம் பாதிக்கப்படவர்கள் மற்றும் அவர்களைக் பராமரிப்பவர்களின் பல்வேறு தேவைகளை உணரச் செய்துள்ளது. இந்த உணர்த்தும் பணி லக்‌ஷ்மம்மா போன்ற பராமரிப்பாளர்களின் நன்மைக்காகச் செய்யப்படுகிறது.

சமூக மனநலக் பராமரிப்பு ஏன் முக்கியம்

மன நோய் கொண்டவர்களின் பராமரிப்பு என்பது மருந்துகளுடன் முடிவடைவதில்லை. நோயிலிருந்து மீளுவதில் ஒரு முக்கியமான அங்கமாக பராமரிப்பாளர்கள் மற்றும் அவர்கள் வாழும் சமூகத்திலிருந்து பெறும் மறுவாழ்வு மற்றும் ஆதரவு இருக்கிறது. மருத்துவ சிகிச்சை பெற்ற பின்னர், மனநல பாதிப்புடையவர்களுக்குத் தங்களின் வழக்கமான செயல்களுக்குத் திரும்ப, தங்களையும் தங்கள் குடும்பத்தையும் பார்ப்பதற்காக மீண்டும் வேலை செய்யத் தொடங்க, சமூகத்தில் பங்கு பெற மறுவாழ்வு தேவையாக இருக்கலாம்.

சமூக மன நலத்தின் முதன்மை இலக்குகளுள் ஒன்று, மனநல நல்வாழ்வுப் பராமரிப்பை முதன்மை நல்வாழ்வுப் பராமரிப்புடன் இணைத்து, அப்பகுதியில் வாழும் போதுமான மருத்துவ வசதிகள் அற்ற பெரும் சமூகங்களைச் சென்றடைவது என்பதாகும். BNI போன்ற அமைப்புகள் அதன் நட்பு அமைப்புகள் மற்றும் மனநல வல்லுநர்களுடன் இணைந்து அது போன்ற பகுதியில் சமூக மனநலச் சேவைகளை ஆதரிக்கின்றன. சமூகப் பணியாளர்கள், விழிப்புணர்வு ஏற்படுத்தல், நோயாளிகளை அணுகுதல், மேலும் அவர்களை மருத்துவ முகாம்களில் சிகிச்சை பெறச் செய்தல் போன்றவற்றில் முக்கியப் பங்காற்றுகின்றனர். விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உள்ளூர்வாசிகளுக்குப் பொருத்தமான தெரு நாடகங்கள் மற்றும் பாடல்கள் மூலம் நடத்தப்படுகிறது.

சமூகப் பராமரிப்பு என்றால் என்ன?

சாந்தாரம், எனும் மனநலம் பாதிக்கப்பட்டவர், ஈரோடு மாவட்டம், தாளவாடி வட்டாரத்தின் தெருக்களில் திரிந்து கொண்டிருந்தார். ஒரு NGO பிரதிநிதி சாந்தாராமை அப்பகுதியில் ஒரு மருத்துவ முகாமிற்கு அழைத்துச் சென்றார். அவரது மருந்துகளைக் கவனிக்க எந்த பராமரிப்பாளர்களும் இல்லாததால், உள்ளூர் காவல் நிலையம் பொறுப்பை எடுத்துக் கொண்டது. காவல்துறை அதிகாரிகள் மூன்று மாதங்களுக்குத் தினமும் அவருக்கு மருந்து கொடுப்பதைப் பார்த்துக் கொண்டனர். சாந்தாரம் அவரது பாதிப்பிலிருந்து மீண்டும், அவர் எங்கிருந்து வந்தார் என நினைவு கூர்ந்தார். காவல்துறை அதிகாரிகள், சாந்தாராமை மீண்டும் அவருடைய கிராமத்தில் கொண்டு விட்டனர். 

(இக்கதை உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் அமைந்தது. தனியுரிமையைக் பாதுகாக்க பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன)

சமூகக் கவனிப்பு அல்லது பராமரிப்பு என்பது சமூகத்தின் உறுப்பினர்கள், நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு மற்றும் கவனிப்பு வழங்குவதற்கு பொறுப்பேற்பதாகும். பராமரிப்பது என்பதில் பெரும்பாலும் மருத்துகளைக் கொடுப்பது மற்றும் அந்நபரின் பாதுகாப்பு மற்றும் உடல்நலத்தைக் கவனிப்பது ஆகியவை அடங்கும். சமூகப் பராமரிப்பாளர்கள், தூரத்து உறவினர்கள், நண்பர்கள் அல்லது அண்டை வீட்டார்களை உள்ளடக்க்கியவர்கள். அவர்கள் முதன்மைப் பராமரிப்பாளர்களுக்கு அவர்களின் பணிகளுக்கு இடையில் சிறுஓய்வு அளிப்பதற்காக தங்களது நேரம் மற்றும் முயற்சிகளை முன்வந்து வழங்குபவர்கள்.

பராமரிப்பாளர்கள், நோயளிக்கு கவனிப்பு மற்றும் மருந்துகளை வழங்குவதில் மனநல வல்லுநரின் அறிவுரையைப் பின்பற்றுவதை நினைவில் கொள்ள வேண்டும். அவர்கள், ஒரு நோயாளியின் சிகிச்சைத் திட்டம் மற்றொரு நோயாளிக்கும் ஒன்றுபோல் இருப்பதில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

சமூகப் பராமரிப்பு என்பது நகர்புற அமைப்பிலும் வேலை செய்யுமா?

நகரங்களில், பராமரிப்பாளர்கள் ஆதரவுக் குழுக்களில் இருந்து வருகின்றனர். அங்கு அவர்கள் தங்களுக்குள் கலந்துரையாடி தங்களுக்குள் ஆதரவுகளைப் கண்டுகொள்கின்றனர். ஆனால், சமூக ஆதரவு என்பது இன்னும் நகர்ப் பகுதிகளில் பொதுவானதாக ஆகவில்லை. “சமூகம் என்ற சிந்தனை கிராம்ப்புற அமைப்பில் வலுவாக உள்ளது. அங்கு தன்னியல்பு, மற்றவர்களைக் கவனிக்கும் மற்றும் உதவும் இயல்புடன் மக்கள் உள்ளனர்ஒரு நகர்ப்புற அமைப்பில் மூடப்பட்ட சமூகக் குழு இல்லை ஏனென்றால், மக்கள் அவர்கள் வேலைகளில் ஆழ்ந்துள்ளனர், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயருகின்றனர், சமூகம் என்ற உணர்வு இல்லை. ஆனால் அது போன்ற அமைப்பு இருப்பது நோயாளிகள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும்”, என்று மரு. N ஐனார்த்தனன், இணைப் பேராசிரியர், மனநல சமூகப்பணி துறை, NIMHANS.

மனநலப் பாதிப்புடையவர்களின் கவனிப்பில் பெரும் சமூகம் பங்கேற்பதற்கு, அங்கு, மனநலப் பிரச்சினைகள் குறித்து அதிகப்படியான விழிப்புணர்வு இருக்க வேண்டும். அது பச்சாதாபப் பட வழிவகுக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

பராமரிப்பாளர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்படவர்களுக்கான நன்மைகள்

ஸ்கிசோபிரனியா, பைபோலார் டிஸ் ஆர்டர் போன்ற தீவிரமான மனநோய் பாதிக்கப்படவர்களைக் கவனிப்பது, பொதுவாக நீண்ட காலம் எடுக்கும் மேலும், காலப்போக்கில் பராமரிப்பாளர்களை சோர்வடையச் செய்யக் கூடும். அந்நபர்களுடன் தொடர்ந்து இருக்க வேண்டிய தேவையிருப்பதால் அவர்கள் தங்கள் வழக்கமான வேலையைத் தொடர்வது அல்லது சிறப்பு நிகழ்ச்சிக்குப் போவது என்பது இயலாததாகும். ஆனால், அண்டைவீட்டார் அல்லது குடும்பத்தின் ஆதரவுடன், பராமரிப்பதின் சுமை இலகுவாக மாறும். இது லக்‌ஷ்மம்மா போன்ற பராமரிப்பாளர்கள் வேலைசெய்ய மற்றும் அவர்களின் குடும்பத்தை பொருளாதாரரீதியாக ஆதரிக்க அனுமதிக்கிறது. பல கிராமப்புற அமைப்பில் காணப்படுவது போன்று வலுவான ஆதரவுக் குழுக்களில், அண்டை வீட்டார்கள் அடிக்கடி பாதிக்கப்பட்டவர்களைக் கண்காணித்துக் கொண்டே இருக்கின்றனர். சமூக அமைப்புடன், பராமரிப்பாளர்கள் நிம்மதியையும் குறைந்த தனிமைப்படுத்தலையும் உணர முடியும். நோயாளி சமூக அமைப்பின் ஒரு பகுதியாக வலுவான ஆதரவையும் உணர்வார் மேலும் பாதிப்பானால் ஏற்படும் அவர்களின் நடவடிக்கை, அவர்களை அறிந்த சமூகத்தால் எளிதில் ஏற்றுக் கொள்ளப்படும். எனவே, ஒரு நபர் நோயிலிருந்து விடுபடும் போது, சமூக் அவர் ஒரு செயல்படும் உறுப்பினராக மாற அவர்களுக்கு உதவ முடியும்.

ஒரு சமூக உறுப்பினர் எப்படி உதவலாம்?

  • அந்நபர் அவருடைய நோயிலிருந்து விடுபட்டால், நீங்கள் அவர்களை வேலைக்குப் பரிந்துரைக்கலாம் அல்லது அவர்களது திறமைக்கு ஏற்ற வேலைகளை வழங்கலாம்.
  • அந்நபர் சிகிச்சையில் இருந்தால், பராமரிப்பாளர்களுக்கு குறுகிய கால கவனிப்பை வழங்க முயற்சிக்கலாம். பராமரிப்பாளர்களுக்கு இடைவேளை எடுத்துக் கொள்வதற்காக அவர்களுக்கு உதவுங்கள்.
  • நீங்கள், மாற்றுத்திறன் சான்றிதழ் போன்ற ஆவணங்களைப் பெற அரசு அதிகாரிகளை அணுகுவதற்கும், எழுத்து வேலைகளுக்கும் உதவ முடியும்
  • பராமரிப்பாளர்கள் தனிமையாக உணர்வார்கள். குடும்ப நிகழ்ச்சிகள் அல்லது சமூக சந்திப்புகளுக்கு அவர்களை அழையுங்கள் மற்றும் உங்களுடன் சேர்வதற்கு உற்சாகப்படுத்துங்கள்.   

சமூக விழிப்புணர்வை உருவாக்குதல்

பல மனநலப் பிரச்சினைகளுக்கு (மன அழுத்தம், ஸ்கிசோபிரன்யா மற்றும் பல), தங்கள் வீடுகள் மற்றும் சமூகத்தில் மனநல பாதிப்பை உணர்பவர்களுடன் இணைந்து பணியாற்றி, அவர்களுக்கு இருக்கும் வளங்கள் மற்றும் ஆதரவு வலைப்பின்னல்களைப் பயன்படுத்தித் திறம்பட சிகிச்சை அளிக்க முடியும். விழிப்புணர்வு ஏற்படுத்தும் பரப்புரைகள் மற்றும் பெரும் அளவில் அறிவு மற்றும் திறன்களைப் பரப்புதல், மனநோய்கள் பற்றிய இழுக்கினைக் குறைக்க உதவும்.1 தெரு நாடங்கள், சுவரெழுத்துக்கள் போன்ற செயல்கள், சமூக உறுப்பினர்களுக்கு மனநலனின் முக்கியத்துவம் குறித்து உணர்த்துவதற்கு திறம்பட உதவுகிறது. “அது போன்ற விவரங்கள் மீதான தொடர்ச்சியான வெளிப்பாடுகள் மனநலபாதிப்புகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வைக் கொண்டுவருவதில் உதவின மேலும் இழுக்கைக் குறைத்தன”, என்று மரு. ஜனார்த்தனன் கூறுகிறார். அவர், “சிகிச்சை மற்றும் மருந்துகளால் நோயிலிருந்து விடுதலை பெற்ற நபர்களும், சமூக உறுப்பினர்களின் மீது நேர்மறைத் தாக்கத்தை உருவாக்குவார்கள்என்றும் கூறுகிறார்.

உசாத்துணைகள்:

1- ஐனார்த்தனன், N & நாயுடு, DM (2012) சமூக அடிப்படையிலான மறுவாழ்வில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுடையும் உள்ளடக்குதல்: இன்றைய தேவை  சமூக உளவியல் மறுவாழ்வின் சர்வதேய ஆய்விதழ் Vol 16(1) 117-124

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org