ஒரு தாய்க்கு மனம்சார்ந்த பிரச்னை வரும்போது, அவரது குடும்பம் என்ன செய்யலாம்?

ஒரு தாய்க்குக் கர்ப்பம், பிரசவத்தின்போது மனம்சார்ந்த ஒரு பிரச்னை உருவாகியிருக்கலாம், அல்லது, அதற்குமுன்பே அவருக்கு இப்படியொரு பிரச்னை இருந்திருக்கலாம், ஆனால் அவருக்கு உடல்ரீதியிலும் உணர்வுரீதியிலும் அதிக ஆதரவு தேவைப்படும் நேரம், பிரசவத்துக்குப்பிறகுதான். அவர் தன்னையும் தன் குழந்தையையும் சிறப்பாகக் கவனித்துக்கொள்ள அவருடைய குடும்பத்தினர் உதவலாம்.

- ஒரு தாய்க்கு மனம்சார்ந்த பிரச்னை வந்திருக்கிறது என்று தெரிந்தால், அவருடைய கணவரும் குடும்பத்தினரும் அவரிடமிருந்து விலகிவிடுகிறார்கள். இதற்குக் காரணம், அவர்களுடைய அறியாமைதான். இதுபற்றி அவர்கள் அவருடைய உளவியல் நிபுணரிடம் பேசவேண்டும். அவர் அதிலிருந்து வெளியே வருவதற்கு அல்லது, அந்தப் பிரச்னையைக் கையாள்வதற்கு என்ன வழி, அதற்கு அவர்கள் எபப்டி உதவலாம் என்று புரிந்துகொள்ளவேண்டும்.

- குடும்ப வன்முறை இதற்குத் தீர்வாகாது. அதனை நிச்சயம் கையிலெடுக்கக்கூடாது

- தாய் தன்னுடைய குழந்தையுடன் அன்புப்பிணைப்பை உருவாக்கிக்கொள்ளச் சிரமப்பட்டால், அவரை வற்புறுத்தக்கூடாது. குழந்தையுடன் அத்தகைய அன்புப்பிணைப்பை உருவாக்கிக்கொள்ள அவருக்கு நேரம் தேவை.  

- குடும்பத்தினர் அவருக்கு ஆதரவாக இருக்கவேண்டும், அவரது உணர்வுகள் ஏறி, இறங்குவதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

- தாய் உட்கொள்ளும் மருந்துகளின் அடிப்படையில், குழந்தைக்குத் தாய்ப்பாலூட்டும் நேரத்தைத் திட்டமிடவேண்டும்

- குழந்தைக்குப் போதுமான உணவு கிடைப்பதையும், திட்டத்தின்படி அதற்குத் தடுப்பூசிகள் போடப்படுவதையும் உறுதிசெய்யவேண்டும்

- பேறுகாலத்துக்குப்பிந்தைய மனநலப் பிரச்னைகளைப்பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும்.

- சிகிச்சையளுக்கும் குழுவுடன் தொடர்ந்து பேசவேண்டும், சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவுபெறவேண்டும்.

- வீட்டுப் பராமரிப்பின்போது, எச்சரிக்கை அறிகுறிகளைக் கவனிக்கவேண்டும். இதைப்பற்றி அவருக்குச் சிகிச்சையளிப்பவரிடம் கேட்டறியலாம்.

- அடுத்த குழந்தைக்கான திட்டத்தை உளவியலாளர், மகப்பேறு மருத்துவருடன் விவாதிக்கவேண்டும்

- அபூர்வமாக, தாய் குழந்தையிடம் வன்முறையாக நடந்துகொள்ளவேண்டும், அதுபோன்ற நேரங்களில், குடும்பத்தினர் குழந்தையைக் கவனிக்கவேண்டும், தாய் எப்போது, எப்படிக் குழந்தையை அணுகலாம் என்று உளவியலாளரிடம் கேட்டு, அதன்படி திட்டமிடவேண்டும்

இந்த விஷயத்தில் குடும்பத்தினருக்கும் உணர்வுக் கொந்தளிப்புகள் இருக்கும். அதையும் அவர்கள் கவனித்துக்கொள்ளவேண்டும். புதிதாகப்பிறந்த ஒரு குழந்தையையும், மனநலப் பிரச்னை கொண்ட ஒருவரையும் சேர்ந்து கவனித்துக்கொள்வது களைப்புத்தரும் ஒரு விஷயம். இதுபற்றி அவர்கள் தங்கள் மனநல மருத்துவரிடம் பேசலாம், அவர் அவர்களுக்குச் சரியான ஆதரவுக்குழுவைச் சிபாரிசு செய்யக்கூடும். இதற்காக அவர்கள் ஓர் ஆலோசகரிடமும் பேசலாம். அவர்கள் தங்களது எண்ணங்களைக் கட்டமைக்க அவர் உதவலாம்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org