நான் என்னுடைய மனநலப் பிரச்னைகளை என் அலுவலகத்திடமிருந்து மறைப்பதில்லை. இதுதான் சரியான அணுகுமுறை

Published on

நவம்பர் 2015ல் எனக்கு இருதுருவக் குறைபாடு II இருப்பதாகக் கண்டறியப்பட்துட. அதேசமயம், நான் சிலகாலம் தீவிர பதற்றக் குறைபாட்டின் ஒரு வடிவைக் கொண்டுள்ளேன், அது தீவிர செயல்பாட்டுக் குறைபாடாக வெளிப்பட்டது.

பெரும்பாலான நேரங்களில் நான் மோசமான குற்ற உணர்வுடன் போராட வேண்டியிருக்கும் (அதாவது சிலநேரங்களில் நான் முன்புபோல் சிறப்பாக இருக்க முடியவில்லை என்ற உணர்வு). என்னுடைய தற்போதைய வேலையில், நான் என்னுடைய பணிவழங்குபவருடன் நேர்மையாக உள்ளேன். நான் எனக்கு எது சரியாக வரும், எது சரியாக வராது என்று வரையறுத்துள்ளேன். நான் என்னால் எது முடியும் என்று சொல்வதில் வெளிப்படையாக இருப்பதால், இந்த நேர்மை உதவியுள்ளது. நல்லவேளையாக, நான் என்னை விமர்சிக்காத, ஆனால் எனக்குப் பிரச்னை உள்ளது என்று புரிந்துகொள்ளும் பணி வழங்குநருடன் வேலை செய்கின்றேன். அந்த வழியில், நான் அவற்றை உள்ளபடி சிறப்பாகக் கையாள இயலுகிறது. 

என்னுடைய தற்போதைய குழு மிகச் சிறியது, மேலும் என்னுடைய குழுக் கண்காணிப்பாளர் என்னுடைய சூழ்நிலையை மிகவும் புரிந்துகொண்டவராக உள்ளார். அவர் என்றைக்கேனும் ஏதாவது தவறாக உள்ளதாக உணரும்போது, என்னிடம் பேசுகிறார், “எல்லாம் சரியாக உள்ளதா? உனக்கு ஓய்வு தேவையா? நான் எப்படி உதவலாம்? உன்னுடைய சில வேலைகள் அழுத்தமூட்டுபவையாக உள்ளனவா? அப்படியெனில், உனக்காக வேறு ஒருவர் அவற்றைச் செய்யலாமா?” என்று கேட்கிறார்.

ஆதரவு அமைப்புகள் மிகவும் முக்கியமானவை – தாங்கள் பேசக்கூடிய ஒருவர் உள்ளார், அவரிடம் பேசும்போது தாங்கள் விமர்சிக்கப்படமாட்டோம் என்று மக்கள் உணர வேண்டும். அவர்கள் பணியிடத்தில் சிகிச்சையளிப்பவராக இருக்க வேண்டும் என்றில்லை, அவர்களுடைய நலனை மனத்தில் கொண்டவராக, அவர்கள் வேலையில் அவர்கள் இருக்கக்கூடிய இடம் குறித்துக் கவலைப்படுகிற யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். 

அலிசியா சோசா ஓர் ஓவியர் மற்றும் தொழில்முனைவோர்.

இது மனநலப் பிரச்னைகளைச் சமாளித்துக்கொண்டே பணிக்குத் திரும்புதல்பற்றிய தொடரின் ஒரு பகுதியாகும். 

logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org