உரிமைகள் & பொறுப்புகள்

இந்தியாவில் ஒருவருக்கு மனநலப்பிரச்சனை இருக்கிறது என்றால் அதனால் அவர் மட்டும் பாதிக்கப்படுவதில்லை, ஒட்டுமொத்த குடும்பமும் அவரோடு சேர்ந்து துன்பத்தை அனுபவிக்கிறது. போதாக்குறைக்கு மனநலப்பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களைப் பார்த்துக்கொள்கிறவர்களும் சட்டப்படி தங்களுக்கு உரிய உரிமைகள் மற்றும் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன என்பதைப் பற்றி அறியாதவர்களாக இருக்கிறார்கள். அதாவது ஒருவருக்கு மனநலப்பிரச்சனை இருக்கிறது என்ற காரணத்தினாலேயே சட்டம் அவர்களுக்குச் சில உரிமைகள், நன்மைகளை வழங்குகிறது, இதைப்பற்றித் தெரிந்துகொள்ளாதவரை, அந்தப் பலன்களை அவர்களால் பெற இயலாது.

எதார்த்தத்தில் பார்க்கப்போனால் மனநலப்பிரச்சனை கொண்ட ஒருவர் தான் செல்லுமிடத்தில் எல்லாம் எதிர்ப்பை/ நிராகரிப்பைச் சந்திக்கிறார். அவர் பள்ளிக்கு / கல்லூரிக்குச் சென்றாலும் சரி வேலைக்குச் சென்றாலு சரி, அவ்வளவு ஏன் சாதாரணமாக பேருந்து அல்லது தொடர்வண்டி போன்ற பொதுப் போக்குவரத்தில் சென்றாலும் கூட அவர்களுக்கு எதிர்ப்பு வலுக்கிறது. இன்னொரு பிரச்சனை மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், பிறரிடம் இதைப்பற்றிச் சொல்லு உதவியோ அல்லது ஆதரவோ கேட்கத்தயங்குகிறார்கள். இதை வெளியே சொன்னால் அவர்கள் தங்களைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்று எண்ணி பேசாமலேயே இருந்து விடுகிறார்கள்.

இந்தப் பகுதியில், மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவருடைய வாழ்க்கையில் தொடர்புடைய அனைத்து நபர்களின் உரிமைகள் மற்றும் கடமைகளைப்பற்றிய சில அடிப்படைக் கேள்விகளுக்குப் பதில்கள் கிடைக்கும். இங்கே வழங்கப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும், மனநலம் மற்றும் மனக்குறைபாடு பற்றி இந்தியாவில் ஏற்கனவே அமலில் உள்ள பல்வேறு சட்டங்களின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன. வருங்காலத்தில் இந்தச் சட்டங்களை சர்வதேச அளவில் அமலில் இருக்கும் இதே போன்ற சட்டங்களுடன் ஒப்பிட்டு இந்தியா இன்னும் என்னென்ன செய்யலாம் என்பது பற்றியும் நாம் பேசுவோம்.

இந்த விவரங்களை வழங்குவதன்மூலம், மனநலக்குறைபாடு கொண்ட ஒரு குழந்தையைப் பள்ளிக்கு அனுப்புகிறவர்கள், மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவருக்குத் திருமணம் செய்துவைக்க முயற்சி செய்கிறவர்கள் உள்ளிட்ட பலரும் பலன் பெறுவார்கள் என்று நம்புகிறோம், இது போன்ற சமயங்களில் சட்டம் என்ன சொல்கிறது என்று அறிந்து, அதற்கேற்ப அவர்கள் செயல்படுவதற்கு இது வழிவகுக்கும்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org