அடிமையாதல் என்பது, ஒரு தெரிவு

அடிமையாதல் என்றால் என்ன?

ரோகித் கல்லூரியில் சேர்ந்த போது புகைக்கத் தொடங்கினான். அவன் புகைக்கும் பழக்கமுடைய பதின்பருவ குழுவுடன் நண்பராக இருநான். அவர்களுடன் பொருந்துவதற்காக ரோகித் நாளொன்றுக்கு உத்தேசமாக ஒன்று அல்லது இரண்டு சிகிரெட்களை பிடிக்கும் பழக்கம் கொண்டான் . இப்படியே ஆறு மாதத்திற்கு பின், ரோகித் ஒரு நாளைக்கு ஒரு கட்டு பிடித்துக் கொண்டிருந்தான். அவன் வகுப்புகளிலும், வேலைகளிலும், தரங்களிலும் ஆர்வம் இழந்தான். அவன் விடுமுறைக்கு வீட்டிற்குச் சென்ற போது, அவனால் விரும்பய அளவு புகைக்க முடியவில்லை. அவன் எரிச்சலாக, குமட்டலுடன் மற்றும் ஒய்வின்றி உணரத் தொடங்கினான். அவன் எளிய வேலையில் கவனம் செலுத்த முடியாமல் உலாத்திக் கொண்டே இருப்பான். அவன் புகைக்கும் உணர்வைத் தவிர்க்க முடியாமல், புகைப்பிடிப்பதற்காக வீட்டிலிருந்து பதுங்கி வெளியேற முயற்சித்தான். அவன் தனது விடுமுறையையும் அல்லது குடும்பத்துடன் இருக்கும் நேரத்தையும் அனுபவிக்க முடியவில்லை – அவன் சிந்திப்பது எல்லாம், எப்படி வீட்டிலிருந்து வெளியேறி புகைக்கலாம், எப்படி மாட்டிக் கொள்ளாமல் வீட்டில் புகைபிடிக்கலாம், எந்தத் தடையும் இல்லாமல் புகைப்பிடிப்பதற்காக எப்போது கல்லூரிக்குச் செல்லலாம் என இருந்தது. அவனது பெற்றோருக்கு ரோகித் சிகிரெட்டிக்கு அடிமையாகிவிட்டான் என்பது தெரியாது, ரோகித் வகுப்புக்கு சரியாக வராததால் மீண்டும் அந்த ஆண்டு திரும்பப் படிக்க வேண்டும் என்று கல்லூரியில் இருந்து ஆண்டு இறுதியில் அழைத்தபோது தான் தெரிய வந்தது.

இந்த கற்பனைக் கதையானது வாழ்க்கை நிகழ்வுகளில் இந்தக் குறைபாட்டை வைத்து புரிந்துகொள்ள உதவுவதற்காகக் கட்டமைக்கப்பட்டது.

அடிமையாதல் என்பது, ஒரு நபர் இன்பம் அவருக்கு கொடுக்கும் ஒரு பொருளைச் (மது, சிகிரெட், போதைப்பொருள், இன்னும் பல) சார்ந்து இருப்பவராக மாறும் முறைமை ஆகும். ஒரு நபர் ஒரு பொருளைச் சார்ந்திருக்கும் நிலைக்கு மாறும்போது, அவர்களால் குடும்பம், நண்பர்கள் மற்றும் பணிப்பொறுப்புகள் போன்ற மற்ற வாழ்க்கைப் பகுதிகளில் கவனம் செலுத்த இயலவில்லை. இது அவருக்கும் , அவரைச் சூழ்ந்து இருப்பவர்களுக்கும் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.

அடிமையாதல் ஒரு உறுதியான உயிரிய அடிப்படை கொண்ட மூளை நோய் ஆகும், அது சமூக மற்றும் உளவியல் காரணிகளின் தாக்கதைக் கொண்டுள்ளது.

குறிப்பு: அடிமையாதல் குறித்து பல தவறான கருத்துக்கள் உள்ளன, அவற்றில் அடிமையான ஒரு நபர் வலிமையில்லாதவராக அல்லது ஒழுக்கமற்றவராக இருப்பார் என்ற நம்பிக்கையும் அடங்கும்.அடிமையாதல் பல மரபியல் மற்றும் சூழ்நிலைக் காரணிகளால் ஏற்படுகிறது, அது ஒருவரின் தேர்வு மட்டுமல்ல என்பதை நினைவில் கொள்வது முக்கியமானது  .

ஒரு நபர் ஒரு பொருளுக்கு அடிமையாவது எப்படி? 

மது, நிக்கோட்டின் சார்ந்த சிகிரெட்கள், போதைப்பொருட்கள் போன்ற எல்லா போதைக்கு அடிமையாக்கும் பொருட்களும் – ஒருவரின் உடலில் உயரிய மாறுபாடுகளை உண்டாக்கும் வேதிப்பொருட்களைக் கொண்டுள்ளன. ஒருவர் இந்தப் பொருட்களில் ஏதாவது ஒன்றை எடுக்கும்போது அவரது மூளை டோப்பமைனை வெளிவிடுவதால் மகிழ்ச்சி உணர்வுகள் தூண்டப்படுகின்றன. இது உடனடியான பரிசுக்காக அந்த நபரை அப்பொருளை மீண்டும் மீண்டும் எடுக்கத் தூண்டுகிறது. அந்த நபர் அப்பொருள் இல்லாததபோது அதற்காக ஏங்குகிறார், அந்த உற்சாக நிலையை மீண்டும் உருவாக்க மிகவும் விரும்புகிறார்.

ஒருநபர் அப்பொருட்களைத் தொடர்ந்து பயன்படுத்துவதால், அதன் மீதான அவரது உடலின் சகிப்புத்தன்மை அதிகரிக்கிறது, மீட்சி அறிகுறிகள் அவர்களை மீண்டும் அதை எடுக்க வைக்கிறது. அவர்கள் அந்த பொருள் எல்லாமல் வாழவே முடியாது, அது உணவு, தண்ணீர் அல்லது ஆக்சிஜன் போன்று முக்கியமானது என நினைக்கலாம். அந்த நபர்கள் தாங்கள் அப்பொருளில் அதிகமாக கவனைத்தைச் செலுத்தி, வேலை பொறுப்புகள், குடும்பம் மற்றும் நண்பர்களைப் புறக்கணித்தவர்களாக் காண்பர்.

WHO வழிகாட்டுதல்களின் படி, ஒரு பின்வருமாறு இருந்தால் அடிமையாகி விட்டார் எனலாம்:

 •         அவர்கள் அப்பொருளை எடுத்துக் கொள்வதற்குக் கட்டாயமேற்பட்டதாக உணர்வர் 
 •         அவர்கள் தானாக அதைப் பயன்படுத்துவதை நிறுத்த (அல்லது கைவிட முடியாது)
 •         அவர்கள் அடுத்த அளவினை எப்படிப் பெறுவது என்பதில் அடிக்கடி கவனம் செலுத்துவர்

இதோ அடிமையாதல் தொடர்புடைய குறைபாடுகளைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படும் WHOவின் கண்டறிதல் தொடர்களின் பட்டியல். 

அடிமைத்தனம் நீடித்ததாகும், திரும்ப முயற்சிக்கும் நிலையானது நாட்பட்ட நோய்களான நீரிழிவு நோய் போன்றவற்றின் மீள்வருதலை ஒத்தது. அதற்கு இடையீடு மற்றும் கட்டுப்பாட்டு வடிவில் சிகிச்சை தேவைப்படுகிறது. ஒரு சுற்று சிகிச்சையானது அந்த நபர் மீண்டும் அடிமையாக மாட்டார் என்ற  உறுதியைத் தராது; மீண்டும் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. மீண்டும் ஏற்படுவதால் அந்த நபர் தோல்வியடைந்து விட்டார் என்பது பொருளல்ல; அது அந்த நபருக்கு அப்பொருளிலிருந்து வெளியே வர அதிகமான ஆதரவு தேவை என்பதைக் குறிக்கிறது.

பொதுவாக அடிமையாக்கும் பொருட்கள்

இந்தியாவில், பொதுவாக அடிமையாக்கும் பொருட்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்:

 •         அனுமதிக்கப்பட்ட போதைப் பொருட்கள்  மது மற்றும்   புகையிலை/சிகிரெட் போன்றவை
 •         தகாத போதைப் பொருட்கள், உற்சாகமூட்டும் போதைப்பொருட்கள் 
 •         மருந்தக மருந்துகள் அல்லது பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள்

வழக்கத்திற்கும் அடிமையாவதற்கும் என்ன வேறுபாடு?

உளவியல் நிபுணர்கள், போதைக்கு அடிமையான நபர் அதே விளைவினைப் பெற குறிப்பிட்ட பொருளை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் நிலையை விவரிப்பதற்கு சார்புத்தன்மை என்னும் தொடரைப்பயன்படுத்துகின்றனர். போதையேற ஒரு கோப்பை தேவைப்படும் ஒரு நபருக்கு, சில மாதங்களுக்குப் பிறகு அதே அளவு போதையை அடைய மூன்று கோப்பை மது தேவைப்படுவதாகத் தோன்றலாம். சார்புத்தன்மை (அதிகரிக்கத்த ஏற்புத்தன்மை எனவும் அறியப்படுவது)என்பது அடிமையாவதை எச்சரிக்கும் ஒரு அடையாளமாகும்  .

அடிமையாதலில் பிற அடையாளங்கள்:

 •         Whenஅந்தப் பொருளை அந்த நபரின் நேரம் மற்றும் சிந்தனையில் பெரும்பான்மையானவற்றை ஆக்கிரமிக்கும் (நான் அடுத்து எப்போது குடிப்பது/ புகைப்பது, அதை எதை வைத்து பதிலீடு,நான் அதை எங்கிருந்து பெறுவது, அதை எப்படிப் பெறுவது?)
 •         மீட்சி அறிகுறிகள் அந்த நபர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அப்பொருளை எடுத்துக் கொள்ளாமல் இருக்கும் போது: நடுக்கம், எரிச்சல், தீவிர ஏக்கம் மற்றும் பிற உளவியல் உணர்வியல் விளைவுகள் 
 •         கட்டுப்பாடின்மை,  அந்த நபர் அப்பொருள் இல்லாமல் நாள் முழுவதும் இருக்க நினைக்கும் போது, அவர் அப்படிச் செய்ய முடியாமல் தோல்வியடைகிறார் 
 •         ஏக்கம்: அப்பொருளை உட்கொள்வதற்காக ஒரு தூண்டல்
 •         அதுஅந்த நபரின் உடல் மற்றும் உணர்வுகளுக்கு மற்றும் அவர்களைச் சூழ்ந்தவர்களுக்கும் தீங்கிழைக்கும் எனத் தெரிந்திருந்தும் தொடர்ந்து பயன்படுத்தல் 

அதிகப்படி எடுத்தல் மற்றும் அடிமையாதலுக்கு இடையேயான வேறுபாடுகள் என்ன?

தினசரிப் பயன்பாட்டில், பொருளை அதிகமாக எடுத்தல் என்ற தொடர் , ஒரு நபர் ஒரு பொருளை வேறுபாடின்றி உட்கொள்வதைக் குறிக்கிறது. அந்த நபர் அக்குறிப்பிட்ட பொருளை அதிக அளவு, அல்லது பொருந்தாத நேரங்களில் மற்றும் இடங்களில் உட்கொள்ளலாம். ஒரு பொருளை அதிகமாக எடுத்துக் கொள்ளும் நபர் அதற்கு அடிமையாகமலும் இருக்கலாம். அவர்கள் எவ்வளவு பயன்படுத்துவது, எப்போது அப்பொருளைப் பயன்படுத்துவதை நிறுத்துவது என தீர்மானிக்க முடியும் மேலும் நீண்ட நேரத்திற்கு அப்பொருளை எடுக்காமல் தொடர்ந்து சாதாரணமாகச் செயல்பட முடியும். இருப்பினும், இதற்கு அப்பொருளைப் பயன்படுத்துவதால் உளவியல், சுய அல்லது சமூகத்துக்கிடையே பிரச்சினைகள் ஏற்படாது என்பது பொருளல்ல.

மருத்துவத் தொடர்களில், அடிமையாதல் என்பது ஒரு நபர் ஒரு பொருளைச் சார்ந்திருக்கும் நிலையைக் குறிக்கிறது. அடிமையாதல் நீடித்தது, திரும்ப ஏற்படும் குறைபாடு ஆகும். அப்பொருளைப் பயன்படுத்துவதால் மூளையில் மாறுபாடுகளுக்குக் காரணமாகி, அதை பயன்படுத்துவதை விடுவதைக் கடினமாக மாற்றுகிறது.

அதிக அளவு எடுப்பதும், அடிமையாவது தனியொருவருக்குத் தீங்கு.

அடிமையாதல் மனநோய் என்று ஏன் கருதப்படுகிறது?

போதைப் பொருட்களை அடிக்கடி பயன்படுத்துவது ஒருவரின் மூளை செயல்படும் வழிகளில் மாற்றங்களை உருவாக்குகிறது. ஒருவர் ஒரு பொருளுக்கு அடிமையாகி இருக்கும் போது, அவர்களின் தேவைகள் மாறுகின்றது என்பது பற்றிக் கூட அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்; அப்பொருள் தான் அதிகபட்ச முக்கியத்துவம் பெறுகிறது. அவர்கள் தங்களின் தூண்டுதல்கள் மற்றும் தீர்மானங்கள் மீது கட்டுப்பாட்டை இழக்கின்றனர்; இதனால் தான் அவர்கள் அப்பொருளை மீண்டும் மீண்டும் எடுக்க விரும்புகின்றனர், அவர்கள் விரும்பினாலும் அதை விட முடிவதில்லை. போதைப்பொருள், மது அல்லது சிகிரெட்டை வைத்திருப்பது தான் முக்கியத்துவம் பெறுகிறது, எனவே அவர்கள் தங்களின் வேலை, குடும்பம், நண்பர்கள் அல்லது பிற பொறுப்புகள் மீது கவனம் செலுத்த ஆர்வமில்லாமல் மற்றும் இயலாமல் உள்ளனர். இது அவர்களின் தினசிரிச் செயல்பாடுகள் மற்றும் உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

அடிமையாவதால் ஒருவரின் மூளையில் ஏற்படும் மாறுபாடுகளானது, பிற மனநலக் குறைபாடுகளான மனச்சோர்வு, கடும் கவலை அல்லது ஸ்கிசோபெர்னியா போன்றவற்றுடன் தொடர்புடைய மூளையின் பகுதிகளில் ஏற்படுகிறது. எனவே, அடிமையாகி நபருக்கு இந்த கடும் மனநலக் குறைபாடுகள் ஏற்படுவதற்கும் அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

அடிமையாதல் என்பது விருப்பமா?

மக்கள் போதைப் பொருட்களை பல காரணங்களுக்காகப் பயன்படுத்தத் தொடங்குகின்றனர்: ஆர்வம், சகாக்களின் அழுத்தம், பொருத்துவதற்கு முயற்சித்தல், வீட்டில் உற்றுநோக்கிய நடத்தையை முன்மாதிரியாக கொள்ளல், அல்லது ஒரு எதிர்ப்பு. அப்படியிருக்கும் போது, சில நபர்கள் அதற்கு அடிமையாகின்றனர், மற்றவர்கள் எப்போதாவது ஒன்றிரண்டு சிகிரெட், அல்லது குடியுடன் கட்டுப்படுத்திக் கொள்கின்றனர் ஏன்?

மருத்துவர்கள் சில நபர்கள் மற்றவர்களை விட எளிதில் பாதிக்கப்படத் தொடங்குன்றனர். “எளிதில் தூண்டுதல் அடைபவர்கள், எளிதில் கோப்ம் கொள்பவர்கள், அல்லது எதிர்ப்பு அல்லது மாறுபாட்ட எதிரான குணமுடையவர்கள், அல்லது அதன் மறுபுறம் கடும் கவலை அல்லது குறைந்த சுய மதிப்பீடு உடையவர்களும் எளிதில் அடிமையாகின்றனர்,” என்று மரு பிரதிமா மூர்த்தி, உளவியல் நிபுணர், NIMHANS போதை மருத்துவ மையம் கூறுகிறார். மரபியல் ரீதியாக அடிமையாகவும் வாய்ப்பில் இருப்பவர்களும் (அடிமையாதல் பாதிப்பு கொண்ட நெருங்கிய உறவினர்களை உடையவர்கள்) பெரும் ஆபத்தில் உள்ளவர்கள் ஆவர்.

ஒரு நபர் அடிமையாகிவிடுவாரா என்பதைத் தீர்மானிப்பதில் சூழ்நிலையும் முக்கியப் பங்கு வகிக்கிறது. கிடைக்கும் தன்மை, அணுகல் தன்மை, செலவிடும் தன்மை மற்றும் போதைப் பொருட்கள் குறித்த சமூக விதிகளும், ஒரு நபர் அடிமையாகும் உணர்வைத் தோற்றுவிப்பதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது  .

ஒரு நபர் ஆர்வம், சக அழுத்தம் அல்லது சூழ்நிலையின் தாக்கங்களால், அடிமையாகும் ஆபத்தினை அறியாமல் ஒரு பொருளைப்பயனபடுத்தத் தொடங்கலாம். அடிமையாதலுக்கு பாதிக்கப்படும் நபர்களும் எப்போது அவர்கள் ‘பாதுகாப்பான’ வரம்பை அடைகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியாது. அவர்களிடம் எப்போது நிறுத்த வேண்டும், மேலும் எச்சரிக்கை அறிகுறிகள் (கொஞ்சம் குடித்த பின் ஏற்படும் வாய் உளறல் மட்டும் தள்ளாட்டம் போன்றவை) இல்லாமல் இருக்கும் என்பதைக் கூறும் பாதுகாப்பு உணர்வு இல்லாமல் இருப்பார்கள். இது அந்த நபர்களை அப்பொருளை அதிகமாகப் பயன்படுத்தச் செய்து, அவர்களுக்கே தீங்கி இழைக்க காரணமாகிறது.

அடிமையாதலின் தாக்கம்

போதைக்கு அடிமையாக்கும் பொருட்கள் என்பவை உடல் செயல்பாட்டை பாதிக்கும் வேதிப்பொருட்கள் ஆகும். அடிமையான ஒரு நபர் அப்பொருளினால் கிடைக்கும் வெகுமதியில் மட்டுமே கவனம் செலுத்துவார். அவரது தனிப்பட்ட மற்றும் தொழில்முறைப் பொறுப்புகள் குறையும், குடும்பம் மற்றும் நண்பர்களைத் தவிர்ப்பார்கள், ஏனென்றால் அவர் அப்பழக்கத்தில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறார். இப்பழக்கம் படிப்படியாக அவரது வேலை மற்றும் நெருங்கிய உறவுகளைப் பாதிக்கிறது.

போதைப் பொருள் பயன்பாடு மற்றும் அடிமையாதலால் ஏற்படும் பிற பிரச்சினைகள்:

 •         உளவியல் குறைபாடுகள், மன அல்லது நடத்தைப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் 
 •         பொதுவான நலப் பிரச்சினைகள்: கல்லீரல் பாதிப்பு (அதிக அளவு மது), நுரையீரல் புற்றுநோய் (புகையிலைப் பயன்பாடு), நரம்பு மண்டலப் பாதிப்பு (போதை மருந்துகள்). மது மற்றும் புகையிலை பயன்படுத்துபவர்கள் புற்றுநோய் மற்றும் பிற பரவா நோய்களை ஏற்படித்துக் கொள்ளும் ஆபத்து அதிகமுடையவர்கள்.
 •         நச்சுத்தன்மை, ஒரு நபர் மது மற்றும் புகையிலை இரண்டுக்கும் அடிமையாகும் போது ஏற்படும் ஆபத்து 
 •         போதையால் துணிந்து நடப்பது: இதில் வன்முறை, மோசமாக வண்டி ஓட்டுதல் மற்றும் பாலியல் செயல்கள், வீட்டு வன்முறைகள், விபத்து மற்றும் காயங்களும் அடங்கும்.
 •         பாலியல் வெளிப்பாடு (குறிப்பாக இளம் பெண்களில்) மற்றும் பால்வினை நோய்கள் ஏற்படும் சாத்தியம்
 •         போதை மருந்துகள் எனில், சிபிலிஸ், தொற்றுகள் மற்றும் பிற பரவும் நோய்களான ther HIV/AIDS. பலர் ஏற்கனவே பயன்படுத்திய ஊசியைப் பயன்படுத்துவதால் தொற்றுகள் ஏற்படாது ஏனெனில் அது மற்றவர்களுடன் பகிரப்படவில்லை என நினைக்கின்றனர். இருப்பினும் அது உண்மையில்லை. தொற்று நீக்கம் செய்யாமல் ஓரே ஊசியைப் பயன்படுத்துவது தொற்றுக்களை ஏற்படுத்தலாம்.
 •         சமூகத் தனிமை அல்லது போதைப்பொருள் ஆர்வத்தின் காரணமாக தனித்து இருப்பது
 •         குழப்பமான முடிவுகள் அல்லது ஆபத்தை ஏற்கும் நடத்தை அல்லது போதைப் பொருளை பெற தவறான வழிகளைக் தேடுவதால் ஏற்படும் சட்டப் பிரச்சினைகள்.

கவனிக்கவும், இப்பிரச்னைகள் ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட போதைப்பொருட்களை உட்கொள்வதால் ஏற்படக்கூடியவை, அவர் அதற்கு அடிமையாகாமல் இருந்தாலும் கூட.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org