தாயின் நலன்: கணவர், குடும்பத்தினரின் பங்கு

குழந்தை பிறந்தபிறகு, ஒரு பெண்ணின் உடலிலும் வாழ்க்கையிலும் பல மாற்றங்கள் வருகின்றன. அவற்றை அந்தப்பெண் சமாளிக்க, அவருடைய கணவரின் ஆதரவு அவசியம். இந்த விஷயத்தில் தனக்குத் தன் கணவரின் ஆதரவு இருக்கிறது என்று ஒருபெண்ணுக்குத் தெரிந்துவிட்டால் போதும், அவரது சுமை குறைந்துவிடும், தன் பொறுப்புகளைச் சிறப்பாகக் கையாளுவார்.

தந்தை என்னவெல்லாம் செய்யலாம்:

-          பிரசவத்தின்போதும், பிற மருத்துவப் பராமரிப்புகளின்போதும் உடனிருக்கலாம்

-          உணர்வுரீதியில் தாய்க்கு ஆதரவளிக்கலாம்

-          குழந்தை பெற்ற எல்லாத் தாய்மார்களும் உடனே தங்கள் குழந்தையுடன் அன்புப்பிணைப்பை உருவாக்கிக்கொள்வதில்லை.  அதுபோன்ற நேரங்களில், தந்தை தன் குழந்தையோடு அன்புப்பிணைப்பை உருவாக்கிக்கொள்ளலாம், கொஞ்சம்கொஞ்சமாக தாய் குழந்தையோடு அன்புப்பிணைப்பை உருவாக்கிக்கொள்ள உதவலாம்

-          தாய் குழந்தையைக் கவனித்துக்கொள்ள உதவலாம்

-          தாய்க்கு எந்த அழுத்தமும் இல்லை, அவர் போதுமான அளவு ஓய்வெடுக்கிறார் என்பதையெல்லாம் உறுதிசெய்யலாம், அதன்மூலம் அவர் தன் குழந்தைக்கு உணவூட்ட உதவலாம்

-          குழந்தைக்கான தடுப்பூசிகளைத் திட்டமிடலாம்

-          சமூக-கலாசாரத் தடைகளால் அவர் சந்திக்கும் அழுத்தங்களைச் சமாளிக்க உதவலாம்.

-          ஒரு குழந்தைக்கும் இன்னொரு குழந்தைக்கும் இடையே போதுமான இடைவெளி இருப்பதை உறுதிசெய்யலாம், இதன்மூலம் தாய் உடலளவிலும் உணர்வளவிலும் தேறிவருவார், அடுத்த குழந்தைக்குத் தயாராவார் கருத்தடைத் திட்டங்களைப்பற்றி அவர் மகப்பேறு மருத்துவரிடம் விவாதிக்கலாம்.

தாயின் நலனில் குடும்பத்தின் பங்கு என்ன?

குழந்தை பிறந்தபிறகு, புதிய பொறுப்புகளை எண்ணி அந்தத்தாய் திகைத்துப்போயிருப்பார். அவருக்குக் கூடுதல் ஆதரவு தேவை. சில தாய்மார்கள் இந்த நேரத்தில் மன நலப் பிரச்னைகளையும் சந்திக்கக்கூடும். இதுபோன்ற நேரங்களில் குடும்பத்தினர் அவருக்குப் பலவகைகளில் உதவலாம்:

-          தொந்தரவுசெய்யாமல் அவர்களுக்கு வேண்டிய ஆதரவை வழங்கலாம்

-          அவர்களுடன் இருக்கிற கலாசார வேறுபாடுகளைப் பெரிதுபடுத்தாமல் மதிக்கலாம்

-          தாய் போதுமான அளவு ஓய்வெடுக்க உதவலாம், அதன்மூலம் அவர் தன் குழந்தையோடு அன்புப்பிணைப்பை உருவாக்கிக்கொள்வார், அதற்கு உணவூட்டத்தொடங்குவார்

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org