முக்கியக் கேள்விகள்

தானே முன்வந்து மனநல மருத்துவமனையில் சேர்ந்த ஒருவர் இப்போது வீடு திரும்ப வேண்டும் என்று கேட்கிறார். ஒருவேளை அவர் இன்னும் குணமாகவில்லை அவருக்கு மேலும் சிகிச்சை தேவைப்படுகிறது என்று நான் கருதினால் என்ன செய்யவேண்டும்?

தானே முன்வந்து மனநல சிகிச்சை பெறுகின்ற ஒருவர் வீடுதிரும்ப வேண்டும் என்று கோரினால், அவருடைய மனநலப் பிரச்சனை குணமாகிவிட்டதா இல்லையா என்பதை நீங்கள் மதிப்பிடவேண்டும். அவர் குணமாகிவிட்டார் அவரை வீட்டிற்கு அனுப்புவது நல்லது என்று நீங்கள் கருதினால் அடுத்த 24 மணி நேரத்திற்குள் நீங்கள் அவரை வீட்டிற்கு அனுப்பிவிடலாம். ஒருவேளை அவர் இன்னும் குணமாகவில்லை அவரை வீட்டிற்கு அனுப்புவது நல்லதல்ல என்று நீங்கள் நினைத்தால், அவர் வீட்டிற்குச் செல்லவேண்டும் என்று கோரி 72 மணி நேரத்திற்குள் நீங்கள் ஒரு குழுவை உருவாக்க வேண்டும். இந்தக் குழுவில் இரண்டு மனநல நிபுணர்கள் இடம் பெற்றிருக்கவேண்டும். அவர்கள் இருவரும் தனித்தனியே நோயாளியைப் பரிசோதிக்கவேண்டும். இந்தப் பரிசோதனைக்குப் பிறகு பாதிக்கப்பட்டவரை மருத்துவமனையிலேயே வைத்து சிகிச்சை தருவது நல்லது என்று அவர்களும் கருதினால், நீங்கள் அவரை வீட்டிற்கு அனுப்ப மறுக்கலாம். அதுபோன்ற சூழ்நிலைகளில் நீங்கள் அடுத்த 90 நாட்களுக்கு அவருடைய சிகிச்சையைத் தொடரலாம் (பிரிவு 18, MH சட்டம்)