பணியிடம்

நான் தெளிவான எதிர்பார்ப்புகளை உறுதிப்படுத்துகிறேன்

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

2012 எனக்குக் கடினமான காலகட்டம். என்னால் என்னுடைய எல்லா வேலைகளையும் கையாள முடியவில்லை. என்னுடைய மேலாளர் ஒரு சாதாரண உரையாடலைத் தொடங்கி, நான் அழுத்தத்தை எப்படிச் சமாளிக்கிறேன் என்று என்னிடம் கேட்டார். நான் அந்த நேரத்தில் என்னுடைய மனநலப் பிரச்னையைப்பற்றி எவரிடமும் வெளிப்படையாகக் கூறவில்லை. நான் என்னுடைய மேலாளரிடம் அதுபற்றிப் பேசுவதற்கான, எந்தக் குறுகிய காலச் சரிசெய்தல்களும் இல்லை என்று கூறுவதற்கான வாய்ப்பாக இந்த உரையாடலை எடுத்துக்கொண்டேன். அது நன்றாகப் புரிந்துகொள்ளப்பட்டது. என்னுடைய வேலைப்பளு குறைக்கப்பட்டது, நான் சமாளிக்கக்கூடிய செயல்களைச் செய்வதற்கான (விடுமுறையில் செல்வது, வீட்டிலிருந்து வேலை செய்வது போன்ற) வாய்ப்புகள் கொடுக்கப்பட்டேன்.

நல்லவேளையாக, சக பணியாளர்கள் எனக்கு உதவினார்கள். நான் தீவிர மன அழுத்தத்தால் வருந்தவில்லை, ஆனால் சில ஏற்ற இறக்கங்கள் கொண்டிருந்தேன். நான் ஒருங்கிணைந்து பணியாற்றக்கூடிய சூழல் கொண்ட சிறிய நிறுவனத்தில் வேலை செய்கிறேன். எனவே நான் எதிர்பார்ப்புகளைத் தெளிவாக அமைப்பதை (குறிப்பாக வேலைக் கெடு நாட்களைப்பற்றி) உறுதிப்படுத்துகிறேன். நான் திறந்த மனம் கொண்டவனாகவும் உள்ளேன். நான் மற்றவர்களிடம் நான் பிரச்னையால் வருந்துகின்றேன் என்று கூறுவதுடன் அவர்களிடம் அதனை வலியுறுத்தவும் முடிகிறது.

நீங்கள் வேலைசெய்யத் தேர்ந்தெடுக்கும் இடத்தின் பணிக்கலாசாரம் மிகவும் முக்கியமானதாகும். மேலும் நீங்கள் விரும்பக்கூடிய நபர்களான குடும்பம், நண்பர்கள் மற்றும் சக பணியாளர்களிடம் உங்கள் நோயைக் குறித்துக் கூறுவது சம அளவில் முக்கியமானதாகும்.”


பாரத் ஒரு வலைப்பதிவர் மற்றும் பெங்களூரைச் சேர்ந்த ஒரு தொடக்கநிலை நிறுவனத்தின் COO.

இது மனநலப் பிரச்னைகளைச் சமாளித்துக்கொண்டே பணிக்குத் திரும்புதல்பற்றிய தொடரின் ஒரு பகுதியாகும். இத்தொடரின் பிற பகுதிகளை நீங்கள் இங்கே படிக்கலாம்.

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org