Others

தாய்க்கு ஏற்கெனவே மனநலப் பிரச்னை இருந்தால், அவரது குடும்பத்தினர் அவருக்கு எப்படி உதவலாம்?

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

மனநலப் பிரச்னை உள்ள ஒரு பெண் கர்ப்பமாக விரும்பினால், அது சாத்தியமே. ஆனால், அவர் முதலில் இதனால் வரக்கூடிய சிக்கல்களைப் புரிந்துகொள்ளவேண்டும். அதன் அடிப்படையில் திட்டமிடவேண்டும். இதுபோன்ற சூழ்நிலைகளில் அவரது குடும்பத்தினர், கணவரின் ஆதரவு மிகவும் அவசியம். அவரது கணவரும் குடும்பத்தினரும் செய்யக்கூடியவை:

- மனநலப் பிரச்னைக்காக அவர் சாப்பிட்டுக்கொண்டிருக்கக்கூடிய மருந்துகளைப்பற்றி மகப்பேறு மருத்துவரிடம் பேசலாம், அதன் அடிப்படையில் கர்ப்பத்தைத் திட்டமிடலாம்

- அவரது பிரச்னையைப்பற்றித் தாங்களே நன்கு தெரிந்துகொள்ளலாம், மற்ற குடும்பத்தினர், நண்பர்களுக்கும் இதைப்பற்றிச் சொல்லலாம், அவர் எந்தக் களங்கவுணர்வையும் சந்திக்காதபடி உறுதிசெய்யலாம்

- சில பெண்கள் கர்ப்பமாக உள்ளபோதுதான் அவர்களுக்கு மனநலப் பிரச்னையே வந்திருக்கும், அல்லது, அப்போதுதான் அது கண்டறியப்பட்டிருக்கும், அதுபோன்ற சூழ்நிலைகளில், அவரைக் குற்றம்சாட்டக்கூடாது. மனநலப் பிரச்னைகளும் மற்ற உடல்நலப் பிரச்னைகளைப்போல்தான். அவற்றை முன்கூட்டியே அறிவதோ கட்டுப்படுத்துவதோ இயலாது.

- கர்ப்பமாக இருக்கும் எந்தவொரு பெண்ணுக்கும் பதற்றம், மனோநிலை மாற்றங்கள் போன்றவை பொதுவாக வருவதுண்டு, ஆனால், மனநலப் பிரச்னை கொண்ட ஒரு பெண்ணிடம் இவற்றின் தாக்கம் மிக அதிகமாக இருக்கலாம்.

- அவர் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படாதபடி பார்த்துக்கொள்ளவேண்டும். இது அவரது குழந்தையையும் பாதிக்கலாம்

- மனநல மருந்துகளுக்குப் பக்கவிளைவுகள் இருக்கலாம். இவற்றை அவர் தனது மனநல மருத்துவர் மற்றும் மகப்பேறு மருத்துவரிடம் பேசவேண்டும், மருந்துகளின் நன்மை, தீமைகளை எடைபோடவேண்டும். மருத்துவரிடம் பேசாமல் சிகிச்சையைப் புறக்கணிக்கக்கூடாது, மருந்து சாப்பிடுவதை நிறுத்தக்கூடாது.

- மனநலப் பிரச்னைகளின் அறிகுறிகளை எச்சரிக்கையாகக் கவனிக்கவேண்டும்.

மனநலப் பிரச்னை கொண்ட ஒருவரைக் கவனித்துக்கொள்வது களைப்பூட்டும் விஷயம்தான். அவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் முதலில் தங்களைக் கவனித்துக்கொள்ளவேண்டும், தங்களது அழுத்தங்களைப்பற்றி ஓர் உறவினர், நண்பர் அல்லது ஆலோசகரிடம் பேசவேண்டும்.

கவனக்குறைவு மிகைச்செயல்பாட்டுக் குறைபாடு (ADHD)

டிஸ்லெக்ஸியா

அறிவாற்றல் பழகுமுறை சிகிச்சை

மின்சார வலிப்புச் சிகிச்சை என்றால் என்ன?

ஆலோசனை வழங்குதல் என்றால் என்ன? அது எப்போது உதவலாம்?