முதியவர்களை அவமதிப்பது என்பது என்ன?

60 வயதில் உமா தனது உறுதியான ஆதரவுத் தூணான கணவரை இழந்தார். அவர் தன்னுடைய வயதுவந்த பிள்ளைகளுடன் தங்குவதற்குக் குடிபெயர்ந்தார், அவரது பிள்ளைகள் ஆரம்பத்தில் அவரை அன்புடன் வரவேற்றனர். இருப்பினும், உமாமட்டுமே வீட்டில் இருக்கவேண்டியிருந்தபோது விஷயங்கள் மோசமாகத் தொடங்கின. அவர் தீவிரமான மருத்துவ நிலையைக் கொண்டிருந்தாலும், அவர் தன்னைத் தானே பார்த்துக்கொள்ளவேண்டும் எனப் பிள்ளைகள் எதிர்பார்த்தனர். அவருடைய பிள்ளைகள் வித்தியாசமான வாழ்க்கை முறையைப் பின்பற்றியதால் அவரது உணவுப் பழக்கமும் பாதிப்புக்குள்ளானது. விரைவில், தன்னுடைய பிள்ளைகள் எரிச்சலடைவதைத் தவிர்ப்பதற்காக உமா மிகவும் அடிப்படையான விஷயங்களான அருகிலுள்ள பூங்காவில் விடுதல் போன்றவற்றைக் கேட்கக் கூடத் தயங்கினார். அவர்களால் அவருடன் நேரம்செலவழிக்க இயலவில்லை, அவர் குடும்பத்தின் முக்கிய முடிவுகளில் எப்போதும் சேர்க்கப்படவில்லை. உமா தனித்துவிடப்பட்டதாகவும், தனிமையாகவும் நம்பிக்கையின்றியும் உணரத் தொடங்கினார். அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

இந்தப் பிரச்னையைப் புரிந்துகொள்ள உதவுவதற்காக அதனை ஒரு நிஜ வாழ்க்கை நிகழ்வில் பொருத்தி உருவாக்கப்பட்ட கற்பனையான விவரிப்பு இது.

உலகச் சுகாதார நிறுவனம் (WHO) முதியவர்களை அவமதிப்பதை "நம்பிக்கையை எதிர்பார்க்கும் எந்த உறவிலும் நிகழ்கிற, வயதான நபர்களுக்குத் தீங்கு அல்லது மனச்சோர்வை ஏற்படுத்துகிற ஓர் ஒற்றை, அல்லது தொடர்ச்சியான நடவடிக்கைகள், அல்லது போதிய பொருத்தமில்லாத செயல்கள்" என வரையறுக்கிறது. ஹெல்ப்ஏஜ் இந்தியாவின் சமீபத்திய ஆய்வில், 50% வயதானவர்கள் அவமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர். இருப்பினும், நிபுணர்கள் அவமதிப்பு அல்லது அதனைப்பற்றிப் புகார் தெரிவிப்பது பற்றிய ஒவ்வாமை காரணமாகப் புகார் தெரிவிக்கப்படாத அவமதிப்பின் பல நிகழ்வுகள் உள்ளன எனப் பரிந்துரைக்கின்றனர். அவமதிப்பு உணர்வுப்பூர்வமானதாக, வார்த்தையால் அல்லது பாலியல்ரீதியாக, இருக்கலாம், மேலும் உடல் வன்முறைக்கும் போகலாம். தவிர்ப்பதும் அவமதிப்பாகவே எண்ணப்படுகிறது. இந்த ஆய்வு பெரும்பாலான நிகழ்வுகளில் அவமதிக்கும் நபர் ஒரு நம்பிக்கையானவராக, அவர்கள் உடன் வசிக்கிற —வயது வந்த பிள்ளைகள், அல்லது குடும்பத்தினர் ஆக, உள்ளதைக் காட்டுகிறது.

அவமதிப்பு மற்றும் தவிர்ப்பின் அடையாளங்கள் என்ன?

·       வன்முறையின் உடலியல் அடையாளங்கள் – கண்ணுக்குத் தெரியும் காயங்கள், அல்லது வெட்டுகள், முறிவுகள், அல்லது நகர்வுகள் போன்றவை

·       உட்டச்சத்துக்குறைவின் அடையாளங்கள் – உணவின்மை காரணமாக

·       அவமதிக்கும் சொற்கள்/தொடர்களால் முதியவர்களைப் பேசுதல் 

·       அந்த நபர்களை “ஒரு சுமை”, “எதற்கும் உதவாதவர்”, அல்லது அவர்களுடைய மதிப்பைத் தாக்கும் மற்ற தொடர்களால் அழைத்தல்

·       பொருளாதாரரீதியாக அவர்களுக்குத் தடையேற்படுத்தல் மற்றும் அவசியமான வசதிகளை அளிக்க மறுத்தல்

·       அவர்களுடைய ஒப்புதலைத் தவிர்த்தல் அல்லது முக்கிய குடும்ப முடிவுகளில் அவர்களை ஈடுபடுத்தாமை  

·       முதியவர்களுடைய உணவுமுறைக்குப் பொருந்தாத உணவுகளைப் பொருந்தாத நேரங்களில் வழங்குதல்

·       கிழிந்த உடைகள் மற்றும் அழுக்கான தோற்றம் (போதிய சிகையலங்காரம் இன்மை), அவை தோல் தொற்றுகள் அல்லது புண்களுக்கு இட்டுச் செல்லலாம்

வயதாகும் நபர்கள் ஏற்கனவே மோசமாகிக் கொண்டிருக்கும் உடல் மற்றும் புலணர்வு இயல்பைக் கொண்டிருக்கலாம். பெரும்பாலான அவமதிப்பு மற்றும் தவிர்ப்பு நடைபெறுவதற்குக் காரணங்களாக ஆய்வுகள் காட்டுபவை, முதியவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் இந்த நடத்தைகள் அவர்களை அவமதிக்கக்கூடியவை என்று அறியாமல் இருப்பது, மற்றும், அவர்களுக்குப் போதிய கவனிப்பை எப்படி வழங்குவது என்று தெளிவின்றி இருப்பது. அழுத்தங்களால் உடைந்துபோன கவனித்துக்கொள்வோர், தாங்கள் பாராட்டப்படுவதில்லை மற்றும் சுமையைத் தாங்குகிறோம் என்ற உணர்வில் வயதானவர்களை அவமதிக்க வாய்ப்புள்ளது என்பதைக் காட்டும் விவரிப்புகளும் உள்ளன. அதுபோன்ற நிகழ்வுகளில், கவனித்துக்கொள்கிறவர்கள் உடனடியாக நிபுணர்களின் உதவியை நாட வேண்டும்.  

பொருளாதாரக் காரணங்களாலும் அவமதிப்பு நிகழலாம். அவமதிப்பை நிகழ்த்துபவர்கள் பெரும்பாலும் வயதானவர்களைச் சொத்து அல்லது வருவாய் வழியினைக் கைவிடக் கட்டாயப்படுத்துகிறார்கள், கையாள்கிறார்கள் அல்லது சூழ்ச்சி செய்கிறார்கள். இது வயதானவர்களை மோசமான சூழ்நிலைக்கு ஆளாக்குகிறது, ஏனெனில் அவர்கள் அவமதிப்பவரை அதிகம் சார்ந்திருக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். தீவிரமான நிகழ்வுகளில், வயதானவர்கள் வேறு எங்காவது அடைக்கலம் தேடுவதற்குத் தள்ளப்படுகின்றனர், காரணம், அவர்கள் தங்களைக் கவனித்துக்கொள்ள எந்த வழியும் இல்லை.

சில கவனித்துக்கொள்கிறவர்கள் குழந்தைப்பருவத்தில் துன்புறுத்தப்பட்டிருக்கலாம், அப்போது அவர்கள் முதியவர்களை—பெரும்பாலும் பெற்றோர்களை — அவமதிப்பதும் காணப்பட்டுள்ளது.

முதியவர்கள் அவமதிப்பைப் புகார் செய்யாதது ஏன்

அவமதிப்பை எதிர்கொள்ளும் நபர் உண்மையை மறுக்கலாம், அவமானமாக உணரலாம், உதவியற்ற நிலையில் இருக்கலாம், மேலும் இன்னும் மோசமாக, அவர்கள் தங்கள் மீது குற்றம் சுமத்திக் கொண்டிருக்கலாம். அவர்கள் தங்கள் அனுபவத்தைக்கூறச் சிரமப்படலாம், அல்லது, குறைந்த சுய மதிப்பு மற்றும் தன்னம்பிக்கைக்குறைவை உணரலாம். தொடர்ந்து இது மனச்சோர்வை ஒத்த அறிகுறியாக வளரலாம், சில நிகழ்வுகளில் பதற்றமாக வளரலாம். அவமதிப்பின் மற்றொரு பொதுவான விளைவு தீவிரமான குற்ற உணர்ச்சி மற்றும் இறக்கும் எண்ணமும் கூட ஆகும். முதியவர்கள் மீதான எந்த வடிவிலான அவமதிப்பும் அந்த நபரின் மீது தீவிர மனநல விளைவைக் கொண்டுள்ளது. ஒருவர் மனநல நிபுணர்களிடமும், தீவிரமான நிகழ்வுகளில் சமூகப் பணியாளர்களிடமும் உதவியை நாடுவது முக்கியமானதாகும்.

ஒரு முதியவர் தான் அவமதிப்பை எதிர்கொள்வதாகச் சந்தேகித்தால் அல்லது ஒருவருக்குத் தெரிந்த ஒரு முதியவர் அவமதிப்பை எதிர்கொண்டால் அவர் நைட்டிங்கேல்ஸ் மெடிக்கல் டிரஸ்ட்டால் நடத்தப்படும் முதியோர் உதவி இணைப்பு 1090 ஐ அழைக்கலாம்.

குறிப்புகள்

1.https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4961478/

2.http://www.sciencedirect.com/science/article/pii/S0140673604171444

Dr சந்தோஷ் லோகநாதன், NIMHANSன் உள்ளீடுகளிலிருந்து

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org