தாய்மை

தந்தை உண்ணும் உணவால், பிறக்கப்போகும் அவருடைய குழந்தையின் மனநலன் பாதிக்கப்படுமா?

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

தாயின் உணவுமுறை பிறக்காத குழந்தையின் உடல் மற்றும் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று அறியபட்டிருந்தாலும், ஒரு புதிய ஆய்வு தந்தையின் உணவுமுறையும் அவருடைய பிறக்காத குழந்தையின் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது எனச் குறிப்பிடுகிறது.

இந்த ஆய்வு, ஆஸ்த்திரேலிய இராயல் மெல்பேர்ன் தொழில்நுட்பக் கழகத்தால் ஆண் எலிகளின் மீது நடத்தப்பட்டது. எலிகளின் ஒரு குழு அதிகளவு உணவை உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட வேளையில், மற்றொரு குழுவிற்கு  முந்தைய குழுவை விட  25% குறைவான அளவு உணவு கொடுக்கப்பட்டது. ஆய்வை வழிநடத்திய பேராசிரியர் ஆண்டனியோ பவுலினி, இரண்டாம் குழுவின் வாரிசுகள் முந்தைய குழுவை விட குறைவாக உண்டு, குறைவான கவலையின் ஆதாரங்களைக் காட்டின என்று கூறினார். முடிவுகள் ஒரு தலைமுறையின் உணவுப்பழக்கம் அடுத்ததைப் பாதிக்கிறது என்று பரிந்துரைத்தன.

நீங்கள், கடந்த தலைமுறையின் குறைவான உணவுமுறையின் விளைவாக குறைவான கவலை நிலைகளைப் பார்ப்பது, சமூகத்தில் அதிகரிக்கும் உடல்பருமனால் நீண்ட கால உடல்நல விளைவுகளுக்கான எச்சரிக்கை மணியை அடிக்கிறதுஎன்று அவர் கூறினார்முழுமையான ஆய்வினை இங்கு காணலாம்

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org