புதிதாகத் தாயாதல்: தாயின் நலனில் கணவர் மற்றும் குடும்பத்தினரின் பங்கு என்ன?

குழந்தை பிறந்தபிறகு தாயின் உடலிலும் வாழ்க்கையிலும் ஏற்படும் மாற்றங்களைச் சமாளிப்பதற்குத் தந்தையின் ஆதரவு அவருக்கு உதவலாம்.  புதிய தாய்க்குத் தந்தையின் ஆதரவு கிடைக்கும்போது அவருடைய திகைப்பு உணர்வு குறைகிறது, அவரால் தன்னுடைய பொறுப்புகளை இன்னும் சிறப்பாக நிறைவேற்ற இயலுகிறது. 

தந்தைமார்கள் என்னவெல்லாம் செய்யலாம்:

 • பிரசவத்தின்போது, பிற மருத்துவ பராமரிப்புகளின்போது உடனிருக்கலாம்
 • உணர்வுரீதியில் ஆதரவு தரலாம்
 • எல்லாத் தாய்மார்களும் குழந்தை பிறந்தவுடன் அதனுடன் நல்ல பிணைப்பை உண்டாக்கிகொள்கிறார்கள் என்று சொல்ல இயலாது.   தந்தை தன்னுடைய குழந்தையுடன் பிணைப்புச் செயல்முறையை தொடங்கலாம், தாய் மெதுவாகக் குழந்தையுடன் பிணைப்பை உண்டாக்கிக்கொள்ள ஊக்கப்படுத்தலாம்.
 • குழந்தையைச் சமாதானப்படுத்தத் தாய்க்கு உதவலாம்
 • தாய் அழுத்தமில்லாமல் இருப்பதையும்,  போதுமான அளவு ஓய்வெடுப்பதையும் உறுதிப்படுத்தலாம், அதன்மூலம் அவர் குழந்தைக்குத் தாய்ப்பாலூட்டுவதற்கு உதவலாம்.
 • குழந்தைக்குத் தடுப்பூசி போடும் விஷயங்களைத் திட்டமிடலாம்
 • சமூக, கலாசாரத் தடைகளால் தாய்க்கு உண்டாக்கப்படும் அழுத்தங்களைச் சமாளிக்க அவருக்கு உதவலாம்.
 • கர்ப்பங்களுக்கிடையில் ஓர் இடைவெளி இருப்பதை உறுதிசெய்யலாம், அதன்மூலம் தாய் உடல் ரீதியிலும் உணர்வு ரீதியிலும் குணமடைய இயலும்.  கர்ப்பத்தடைத் திட்டங்களைப்பற்றி  மகப்பேற்று மருத்துவருடன் விவாதிக்கலாம். 

தாயின் நலனில் குடும்பத்தின் பங்கு என்ன?

ஒரு குழந்தை பிறந்தபிறகு, அந்தக் குழந்தையின் தாய் திகைப்பாக உணரலாம், அவருக்குக் கூடுதல் ஆதரவு தேவைப்படலாம். சில தாய்மார்களுக்கு இந்தக் காலகட்டத்தில் மனநலப் பிரச்னைகளும் இருக்கலாம்.  அதுபோன்ற சூழ்நிலைகளில் குடும்பத்தினர் இப்படியெல்லாம் உதவலாம்:

 • புதிதாக உண்டாகும் குடும்பத்துக்குத் தொந்தரவு தராமல் ஆதரவளிக்கலாம்
 • தங்களுக்கும் புதிய குடும்ப அமைப்புக்கும் இருக்கக்கூடிய கலாசார வேறுபாடுகளை மதிக்கலாம்
 • தாய்க்குப் போதுமான அளவு ஓய்வையும், அவருக்கான தனி இடத்தையும் அனுமதிக்கலாம், அதன்மூலம் அவர் தன்னுடைய குழந்தையுடன் நல்ல பிணைப்பை உண்டாக்கிக்கொண்டு அதற்குப் பாலூட்ட இயலும்

Related Stories

No stories found.
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org