குழந்தைப்பேற்றுக்குப்பின் மனச்சோர்வு: உண்மை அறிவோம்

தவறான நம்பிக்கை: சோகமான உணர்வுகள் வந்தால் அவற்றைப் புறக்கணித்தால் போதும் அல்லது நேர்விதமாகச் சிந்தித்தால் போதும், அது தானாகச் சென்றுவிடும்.

உண்மை: குழந்தைப்பேற்றுக்குப் பிந்தைய மனச் சோர்வு என்பது வெறும் சோக உணர்வு அல்ல, அது ஒரு தீவிரமான நோய், அதற்குச் சிகிச்சை அளிக்க வேண்டும்.

தவறான நம்பிக்கை:  எனக்குக் குழந்தைப்பேற்றுக்குப் பிந்தைய மனச் சோர்வு வந்திருக்கக் காரணம் நான் பலவீனமானவள் என்பதுதான்.

உண்மை: வலுவான மற்றும் புத்திசாலித்தனமான பெண்களுக்கும் குழந்தைப்பேற்றுக்குப் பிந்தைய மனச் சோர்வு வரலாம். அது பலவீனத்தாலோ உங்களுடைய தோல்வியாலோ ஏற்படுவதில்லை.


தவறான நம்பிக்கை: நான் குழந்தைப்பேற்றுக்குப் பிந்தைய மனச் சோர்வுக்கு மருந்துகளை எடுத்துக் கொண்டால் என்னால் குழந்தைக்குப் பால் தர இயலாது.

உண்மை: குழந்தைப்பேற்றுக்குப் பிந்தைய மனச் சோர்வைக் குணப்படுத்தும் சில மருந்துகள் நீங்கள் பால் கொடுப்பதைப் பாதிக்காது. இது பற்றி உங்களுடைய மருத்துவர் மற்றும் / அல்லது பால் கொடுத்தல் ஆலோசகரிடம் பேசுங்கள்.


தவறான நம்பிக்கை: குழந்தைப்பேற்றுக்குப் பிந்தைய மனச் சோர்வு, குழந்தை பிறந்து முதல் சில மாதங்களுக்கு மட்டுமே ஏற்படும்.

உண்மை: அது கர்ப்பத்தின் போதும் ஏற்படலாம், உங்களுடைய குழந்தைக்கு ஒரு வயது ஆகும்வரை எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம்.


தவறான நம்பிக்கை: எனக்கு முதல் குழந்தை பிறந்தபோது எனக்கு குழந்தைப்பேற்றுக்குப் பிந்தைய மனச் சோர்வு ஏற்படவில்லை, ஆகவே எனக்கு எப்போதும் வராது.

உண்மை: குழந்தைப்பேற்றுக்குப் பிந்தைய மனச் சோர்வு எந்தக் குழந்தை பிறக்கும்போதும் ஏற்படலாம்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org