பதினைந்து கோடி இந்தியர்களுக்கு மனநலப் பிரச்னைகள் உள்ளன

தேசிய மன நல மற்றும் நரம்பியல் கழகத்தால் (NIMHANS) 2016 இல் வெளியிடப்பட்ட, தேசிய மனநல ஆய்வானது, இந்திய மக்கள் தொகையில் 10.6 விழுக்காடு நபர்கள் மன நலப் பிரச்சினைகளால் பாதிக்கபட்டுள்ளதாகக் கூறுகிறது. இந்த ஆய்வு 12 மாநிலங்களில் 18 வயதுக்கு மேற்பட்ட 40.000 நபர்கள் மாதிரி அளவுடன் நடத்தப்பட்டது. அது பொது மனநலக் குறைபாடுகளான ( CMD) மனச்சோர்வு மற்றும் கவலை, தீவிர மனநலக் குறைபாடுகளான  (SMD) ஸ்கிசோபெர்னியா, மது மற்றும் போதைப் பொருள் பிரச்சினைகள் மற்றும் நாட்டில் தற்கொலை ஆபத்துக்கள் ஆகியவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

ஆய்வின் படி, மக்கள் தொகையில் 5% பேர் மதுச் சார்பு நிலைக்காக உடனடி சிகிச்சை தேவைப்படுபவர்கள் மற்றும் இந்த எண்ணைக் மதுச் சார்புநிலை உடைய ஆண்களில் 10% வரை அதிகரிக்கிறது. The ratio of prevalence of CMDகளிலிருந்து SMDகான பரவல் விகிதம்  1:10 ஆக இருப்பது, பொது மனநலக் குறைபாடுகளான மனச்சோர்வு மற்றும் கவலை, பயங்கள் மற்றும் ஆளுமைக் குறைபாடுகள் மீது பெரும் அளவில் ஆரம்ப இடையீடுகள் தேவைப் படுவதைக் குறிக்கிறது. இந்த திடுக்கிடச் செய்யும் எண்ணிக்கையுடன் பெரிய சிகிச்சை இடைவெளியும் இணைந்துள்ளது. இந்த ஆய்வு, அந்த மனநலப் பிரிச்சினைகளில் 25%க்கும் குறைவானவையே சிகிச்சை பெறுகின்றன என்பதைக் கண்டறிந்துள்ளது. “நாட்டில் மனநோய்கள் குறித்து மோசமான புரிந்துகொள்ளுதல் உள்ளது. இது மருத்துவக் கவனிப்பில் தாமதத்திற்கு வழிவகுக்கிறது  ,” என்று மரு விவேக் பெங்கால், மனநோய் மருத்துவப் பேராசிரியர், NIMHANS கூறுகிறார். இந்த ஆய்வு சிகிச்சை இடைவெளிகளை எப்படிச் சரிசெய்வதற்கான பரிந்துரைகளின் பட்டியல்களை ஒன்றாக்கித் தருகிறது.  மரு பி என் கங்காதர், NIMHANS இயக்குநர் மற்றும் துணை-வேந்தர் மனநோய் பாதிப்புகளை சாதாரணமானதாக்குவதின் மூலமாக, அதனுடன் தொடர்புடைய களங்கத்தைப் போக்கி, கிடைக்கக் கூடிய சிகிச்சை வலியுறுத்துவதின் மூலமாக விழிப்புணர்வை அதிகரிக்க ஊடகங்களை வலியுறுத்துகிறார். மனநோய்களுக்கான சிகிச்சைகள் மனநோய் மருத்துவரின் பொறுப்பு மட்டுமல்ல. சில பொதுவான மனநோய்களை PHCகளிலும் கூட (பொது சுகாதார மையங்கள்) கண்டறிந்து சிகிச்சையளிக்க முடியும்,” என்று மரு பி என் கங்காதர் மேலும் கூறினார்

இந்த ஆய்வு நகர்ப்புறங்களில் மனநோய் பாதிப்பு விகிதம் மூன்று மடங்குக்கு மேலாக உள்ளதைக் குறித்துக் காட்டுகிறது. அதிகப்படியான அழுத்தம் மற்றும் வாழ்வு நிலை இந்த எண்ணிக்கைக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்ற யூகங்கள் இருந்த போதும், உறுதியான காரணம் எதுவும் அறியப்படவில்லை. "மக்கள்தொகையில் குறிப்பிடத்தக்க விழுக்காட்டினரின் வேலை செய்யும் திறனை மனநோய் உடன் தொடர்புடைய ஊனமானது குறைக்கிறது. இது நிச்சயமாக அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவாது ", என்று மரு பி என் கங்காதர் திறம்மிக்க மனநலக் கொள்கையின் தேவை குறித்து வலியுறுத்திச் சொல்கிறார்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org