பாராளுமன்றத்தில் மனநலப் பராமரிப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது

பாராளுமன்றமானது 2016 மனநலப் பராமரிப்பு மசோதாவை நிறைவேற்றியது, இந்த மசோதா மனநலப் பிரச்னைகளுக்கான நலப் பராமரிப்புச் சேவையை வழங்குவது, மனநலப் பிரச்னை கொண்டவருடைய தனிநபர் உரிமைகளை வலுப்படுத்துவது ஆகிய நோக்கங்களைக்           கொண்டிருக்கிறது.      இந்த மசோதா சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது, கடந்த திங்கட்கிழமையன்று அது மக்களவையின் ஒப்புதலைப் பெற்றது.   

இந்த மசோதாவின் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று, தற்கொலை ஒரு குற்றச்செயல் இல்லை என்று நிறுவியதும், தற்கொலையில் ஈடுபடுகிறவருக்கு மனநலப் பராமரிப்பு தேவைப்படுகிறது என்பதை அடையாளம் கண்டதும் ஆகும்.    இந்த மசோதாவின்படி, அரசாங்கம் நடத்தி வருகிற மற்றும் நிதியளிக்கிற  சேவைகளிலிருந்து மனநலப் பராமரிப்புச் சிகிச்சையை அணுகும் உரிமை ஒவ்வொரு மனிதருக்கும் உள்ளது.       வீடில்லாதவர்கள் அல்லது வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களிடம் BPL அட்டை இல்லாவிட்டாலும் அவர்களுக்கு இலவசச் சிகிச்சை வழங்கப்படுவதற்கும் இந்த மசோதா வழிசெய்கிறது.   ஒவ்வொரு மனிதருக்கும் எந்தப் பாரபட்சமும் இல்லாமல் சிகிச்சையைப் பெறுவதற்கு உரிமை உண்டு, தங்களுடைய மனநலப் பிரச்னை மற்றும் சிகிச்சைபற்றிய ரகசியத் தன்மைக்கான உரிமை உண்டு என மசோதா குறிப்பிடுகிறது.

மத்திய மற்றும் மாநில மனநல அதிகார அமைப்புகளை உருவாக்குதல், அந்த அதிகார அமைப்புகளில் ஒவ்வொரு மனநல அமைப்பையும், மனநலச் செவிலியர்கள், உளவியலாளர்கள், மனநலச் சமூகப் பணியாளர்கள் போன்ற மனநல நிபுணர்களையும் பதிவுசெய்வதற்கும் இது ஆணையிடுகிறது.    (இந்த மசோதாபற்றிய கூடுதல் தகவல்களை இங்கு வாசிக்கலாம்.)

Related Stories

No stories found.
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org