இடம்பெயர்வதற்கு அப்பால்: நாம் இடப்பெயர்வின் உணர்வுத் தாக்கத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்

புதிய நகரொன்றுக்கு இடம்பெயர்வது, புதிய வேலை வசதி, புதிய வாழ்க்கை, புதிய வீடு ஆகியவை மகிழ்ச்சி தரலாம். இருப்பினும், தனக்கு வசதியான, அறிந்த அனைத்தையும் விட்டுவிட்டு எந்த ஆதரவு அமைப்பும் இல்லாத புதிய நகரத்திற்கு இடம்பெயர்வதும், முதலிலிருந்து தொடங்க வேண்டியிருப்பதாலும் அழுத்தம் அதிகரிக்கலாம். அது ஒரு நபருடைய மனநலத்தில் தாக்கம் ஏற்படுத்த முடியுமா?

இதுபற்றி, பெங்களூரின் சஹாரா வேர்ல்டு மருத்துவமனையின் மனநல நிபுணர் Dr சபினா ராவ், வைட் ஸ்வான் அறக்கட்டளையின் சிறீரஞ்சிதா ஜெருகாரிடம் பேசுகிறார். நாட்டிற்குள்ளே இடம்பெயர்வதும் அழுத்தம் தரக்கூடியதாக ஏன் இருக்கிறது, அதற்கு ஒருவர் எப்படித் தயாராக இருக்க முடியும் என்பது பற்றிச் சொல்கிறார்.

நாம் எப்போதும் இடம்பெயர்வதை அழுத்தம் நிறைந்ததாகவோ உணர்வுரீதியில் பாதிப்பதாகவோ நினைப்பதில்லை. அது உண்மையா?
மக்கள் இடப்பெயர்வை ஓர் எதார்த்த நிலையிலிருந்து பார்ப்பதாக நினைக்கிறேன் – அவர்கள் அதனை ஓர் எதார்த்தமான இட மாற்றம் என்று நினைக்கிறார்கள், தாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் சமூகத்தில் எவ்வளவு முதலீடு செய்திருக்கிறோம் என்பதையோ, தாங்கள் சார்ந்திருக்கும் சமூகக் கட்டமைப்பு ஆகியவற்றையோ கவனத்தில் கொள்வதில்லை. இது, ஒரு மனைவியோ பெற்றோரோ தன்னுடைய கணவர் அல்லது மகனுடன் வாழ்வதற்காக இடம்பெயரும்போது, அந்த நகரத்தில் அவர்கள் ஒரு வேலை கொண்டிருக்காத போது அதிகம் நடக்கிறது.. அனைவரும் அது சிறந்ததற்கு என்று நினைக்கிறார்கள். பெற்றோர் 40-50 ஆண்டுகள் நிலையான நட்புகளை, உறவுகளை விட்டுச் செல்கிறார்கள். திடீரென அவர்கள் தனிமையாக உள்ளார்கள். அவர்களுக்கு யாரையும் தெரியாது, இது அவர்களுக்குக் குறிப்பிடத்தக்க கலாசார அதிர்ச்சி ஆகும்.

கலாசார அதிர்ச்சியைக் கொண்டு வருவது எது? அவர்கள் நாட்டிற்குள்ளேதானே இடப்பெயர்கிறார்கள்…
மக்களால் மாற்றத்தின் அளவை முன்கூட்டியே எதிர்பார்க்க இயலுவதில்லை என்று நினைக்கிறேன். அவர்கள் ஒரே நாட்டிற்குள் இடம்பெயர்வதால் பெரிய வித்தியாசம் இருக்காது என்று நினைக்கிறார்கள். மக்கள் வெளிநாட்டிற்கு இடம்பெயரும்போது அதற்காகக் கூடுதலாகத் தயாராகின்றனர் என்று நான் நினைக்கிறேன். என்னுடைய வாடிக்கையாளர்கள் சிலர் வேறு நாட்டிற்கு இடம்பெயர்ந்து சென்றது உண்டு. அவர்கள் எல்லாவற்றிற்கும் தயாராக இருந்தனர் – அங்கே குளிராக இருக்கும், அங்கே எனக்கு யாரையும் தெரியாது, எனக்கு மொழி புரியாது போன்றவை – நீங்கள் நாடுவிட்டு நாடு இடம்பெயரும்போது அதேபோன்ற அம்சங்களை எதிர்பார்ப்பதில்லை. ஆகவே அதை அவர்கள் சந்திக்கிறார்கள். ஆனால் இந்தியாவிற்குள் இடம்பெயரும்போது அவர்கள் தயாரிப்பு இன்றி உள்ளனர். 

தங்கள் முதல் பணிக்காக நகரத்துக்கு இடம்பெயர்கிறவர்கள் இடப்பெயர்வை உணர்வது எப்படி?
அது இருபக்கம் கொண்ட விஷயம் என்று நான் நினைக்கிறேன். ஒரு பக்கம், அவர்கள் புதிய வேலையைத் தொடங்குவதால், சிலர் அதிகச் சம்பளம் பெறுவதால் மிகவும் உற்சாகமாக உள்ளனர். அவர்களில் பலர் சிறு நகரத்தை விட்டு வெளியேறி பெரும் நகரத்திற்குச் செல்வதில் உற்சாகமாக உள்ளனர். ஆனால் அவர்கள் நகரத்தின் பெரும் தன்மைக்கு தயாராக இல்லை. அதன் குழப்பம், பெரும் தனிமை போன்றவை அவர்களைச் சிரமப்படுத்துகின்றன, அவர்களுடைய பணிக் கட்டமைப்பு ஒரளவுக்கு உதவுகிறது. ஆனால் நான் என்னுடைய அனுபவத்தில் அவர்கள் மிகவும் குழப்பமான உறவுகளில் மாட்டிக் கொள்வதைக் கண்டுள்ளேன். இவர்கள் இருபதுகளின் தொடக்கத்தில் ஆரோக்கியமற்ற உறவில் உள்ள இளம் நபர்கள். அவர்கள் அவசியமற்ற பணத்தைக் கொண்டுள்ளனர். அதனை மது போதைக்குப் பயன்படுத்த முடியும் மேலும் சமாளிப்பதற்கு அதனை நோக்கித் திரும்புகிறார்கள். தனிமை, பொருந்திக் கொள்வதின் பதற்றம், பின்னடைவு ஆகியன புகைபிடித்தல், குடிப்பழக்கமாக மாறுகிறது. 

நான் பெங்களூருக்கு வருமுன் கூட்டுக் குடும்பத்தில் வசித்த பல நோயாளிகளைச் சந்தித்துள்ளேன். பல நபர்களுக்கு வீட்டிற்குத் திரும்புவது எளிதாக இருப்பதில்லை. அவர்கள் வருத்தமாக, தனிமையாக உணர்வதால் அங்கே திரும்பிப் போக முடியாது. முழுமையான ஆதரவிலிருந்து – உணர்வுரீதியிலும் நிதிரீதியிலும் – முழுவதும் நீங்களாகவே பார்த்துக்கொள்ளும்நிலைக்குச் செல்கிறீர்கள். இப்போது இந்த IT நகரத்தில் நீங்கள் யார் என்று நீங்களாகவே கண்டறிய வேண்டும். 

உணர்வு முதிர்வின் மற்றொரு பிரச்னை, அவர்களில் பலர் கல்லூரியிலிருந்து நேரடியாக வேலைக்கு வருகின்றனர், வேலையிடத்தில் நட்பு கொள்ள முயற்சிசெய்கின்றனர். அவர்கள் வேலையைச் சமூகச் சூழலுக்கான இடமாகவும் பார்க்கிறார்கள். அனைவரும் பணியிடத்தில் சிறந்த உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றில்லை. உண்மையில், அவர்கள் பகுப்புத்திறனுடன் இருக்க வேண்டிய பணியிடத்தில் சிறந்த உறவுகளை மேற்கொள்ள வேண்டுமா என்று நான் ஆச்சரியப்படுகிறேன்; ஆனால் நீங்கள் சமூக வாழ்க்கையில் உணர்வுப்பூர்வமாக இருக்க நினைக்கலாம், நீங்கள் இரண்டையும் கலக்க முயற்சிசெய்கிறீர்கள். பல நிகழ்வுகளில், தங்களுடைய உறவுகள் நன்கு இல்லாததால் வேலையை விட்டுச் செல்ல விரும்பி வருகின்ற நோயாளிகளை நான் கண்டுள்ளேன்.

நகரத்தின் அடையாளம் தெரியாத தன்மை, நீங்கள் வீட்டில் செய்யாத ஒன்றைச் செய்வதற்கான சுதந்தரம் தருவதுபற்றி ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?
அது நூறு சதவீதம் உண்மை. எத்தனை நபர்கள் திருமணம் செய்யாமல் வாழ்கின்றனர் என்று நான் ஆச்சரியமடைந்துள்ளேன். கலாசாரச் சூழலில் பார்க்கும்போது, திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்வது சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்படாதது என்றுதான் ஒருவர் நினைப்பார்.

நீங்கள் திருமணம் ஆகாத உறவில் இருக்கும்போது, அதனை உங்கள் வீட்டில் ஏற்றுக் கொள்ளாதபோது – அது கிட்டத்தட்ட இரட்டை வாழ்க்கை வாழ்வது போல் ஆகிறது, அப்போது என்ன நடக்கிறது?
நிச்சயமாகப் பல இளையவர்கள் அதனைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அதனை நன்கு யோசித்தார்களா என்று எனக்குத் தெரியவில்லை. முதலில், அவர் புதிய நகரத்தில் பொருந்திக் கொண்டு வாழ முயற்சிசெய்யும் ஒருவர். ஒருவேளை அவர் இதற்கு முன்பு உறவில் இல்லாமலிருந்திருக்கலாம். அவர்கள் காதலில் விழுந்துவிட்டதாக மட்டும் நினைக்காமல், இன்னொரு நபருடன் இணைந்து தங்குகின்றனர். இந்த இடப்பெயர்வு அவர்களுக்கு எப்படி இருக்கும் என்ற உரையாடல் இல்லாமல் இணைந்து தங்கத் தொடங்கிய சிலரை நான் சந்தித்துள்ளேன். அவர்கள் இதனை நன்கு யோசித்தார்களா என்று எனக்குத் தெரியவில்லை. அதன்பிறகு, ஒருவருக்குத் திருமணம் செய்யும் நோக்கம் இல்லை என்று இன்னொருவர் கண்டுபிடிக்கிறார். இந்த நபருக்கு அது அதிர்ச்சியாக வருகின்றது, சில நேரங்களில் தற்கொலை எண்ணமும் உள்ளது. ஆனால் அவர்களுடைய ஊகத்தை அடிப்படையாக்க எந்த முதிர்ச்சியான உரையாடலும் இல்லை. 

இப்போது நிறைய இடப்பெயர்வுகள் நடக்கின்றன – நீங்கள் என்னுடைய பணியிடம் அல்லது இருப்பிடத்தைப் பார்த்தால், வெளியே இருந்து இந்த நகரத்திற்கு வந்த மக்களைக் கட்டாயம் பார்ப்பீர்கள். இந்த இடத்தின் கலாசாரத்திற்கு அறிமுகமில்லாத மற்ற நபர்களும் இங்கே உள்ளார்கள் என்று அறிவது எளிதானதா, அல்லது கடினமானதா?
பெரும்பாலான மக்கள் பொருந்திக் கொள்வதற்கு வழியைக் கண்டறிந்து கடந்து போகிறார்கள் என்று கூறுவேன், ஆனால் எப்போதும் சிறு அளவிலான நபர்கள் உள்ளார்கள் – அவர்கள் அதே கலாசாரம் மற்றும் இடத்தில் நிறைய நபர்களைக் கொண்டிருந்தாலும் – வீடு, உணவைத் தவறவிடுவார்கள், அது ஒரு பெரிய விஷயம்.

இடம்பெயர்வது உங்களைக் குறிப்பிட்ட வகை மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புகளுக்கு உள்ளாக்குகிறதா?
மனச்சோர்வு மற்றும் பதற்றத்தை இடம்பெயர்வதன் விளைவாக வரும் நோய்களாக நான் தெளிவாகக் கருதுகிறேன். போதைப் பொருள் பயன்பாடு மற்றொரு பிரச்னை ஆகும். அது 20 – 30 வயதுக் குழுவில் உள்ளது. இது நிறையக் குழப்பம் கொண்ட விஷயம், மேலும், இடம்பெயரும் நபர்களைப் பற்றிய வருத்தமான ஒரு விஷயம், அவர்கள் வேலையிலிருந்து தங்கள் மனத்தைத் திருப்புவதற்கு வழிகளைக் கண்டுபிடிக்க உண்மையில் நேரம் கொண்டிருக்கவில்லை. அவர்கள் ஒரு நாளைக்கு 10-12 மணிநேரம் வேலை செய்கின்றனர், எனவே நீங்கள் அவர்களிடம், ஒரு மணிநேரத்தை நண்பர்களுடனோ உடற் பயிற்சி செய்வதிலோ ஏன் செலவிடக்கூடாது என்று பரிந்துரைத்தால், அவர்களால் இயலாது, அவர்கள் உண்மையில் அதற்கு நேரம் கொண்டிருக்கவில்லை. நாளின் நிறைவில் அவர்கள் விரும்புவது எல்லாம் ஒரு கோப்பைத் தேநீர் அருந்திவிட்டுப் படுக்கைக்குச் செல்வது தான். அவர்கள் வீட்டிற்குச் சென்று திரைப்படத்தையோ யூடியூப் விடியோக்களையோ பார்க்கிறார்கள், அல்லது உடற்பயிற்சிக்கூடத்திற்கு விரைந்தோடுகிறார்கள். எனவே அவர்கள் எதிர்பார்க்காத சூழ்நிலைகளைச் சந்திப்பது மட்டுமில்லாமல், அது குறித்து எதைச் செய்வதற்கும் அவர்கள் நேரம் கொண்டிருக்கவில்லை.

ஒருவர் இடம்பெயர்கிறார் என்றால், அந்த இடப்பெயர்வைத் தனக்குக் குறைந்த அழுத்தம் கொண்டதாக மாற்ற அவர் என்ன செய்யலாம்?
அவர் அதனை நாடு விட்டு நாடு இடம்பெயர்வதாகப் பார்க்க வேண்டும் – அப்படி இடம்பெயர்ந்தால் அவர் என்ன செய்வார்? அவர்கள் என்ன வகை மொழி பேசுவார்கள், அவர்கள் என்ன வகையான உடை அணிவார்கள், அந்த இடத்தின் கலாசாரம் என்ன, அவர் என்ன வகையான உணவைப் பெறுவார், வாழ்க்கைச் செலவு எவ்வளவு, அவர் தன்னுடைய கலாச்சார மக்களைப் பார்க்க வேண்டுமெனில் எங்கே செல்ல வேண்டும், அவர் தொடர்ந்த ஊக்கமுடன் இருக்க வழிகளைக் கண்டுபிடிப்பது எப்படி? இடம்பெயர்வது ஒரு சாகசமாக இருக்க வேண்டியதில்லை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். ஒருவர் செய்யும் எந்தப் புதிய விஷயமும் அழுத்தம் தரக்கூடியது – திருமணம், குழந்தை பெறுதல், வீடு வாங்குதல், வீட்டைக் கட்டுதல் போன்றவை – மேலும் அதில் இடம்பெயர்வதும் உண்டு. இடம்பெயர்வது சிறிது அழுத்தத்தைக் கொண்டுவருகிறது, அது வேடிக்கையாக மட்டும் இருக்கப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர் பழக்கமான இடத்திலிருந்து மிகவும் வித்தியாசமான இடத்திற்கு இடம்பெயர்ந்து செல்கிறார். அதுதான் உண்மை.

ஒருவர் அமெரிக்காவிற்கு ஒரு கல்லூரிக்குச் செல்லும் போது, அவருக்குமுன் அங்கே உள்ளோர் அவர் கொண்டுவர வேண்டிய பொருட்கள், பார்க்க வேண்டிய விஷயங்கள், செல்ல வேண்டிய இடங்கள், எதை எதிர்பார்க்க வேண்டும் என்று ஒரு பட்டியல் கொடுப்பார்கள்தானே? ஆனால் நாம் இந்தியாவிற்குள் இடம்பெயர அதுபோன்ற வளங்களைக் கொண்டிருக்கவில்லை. எனவே அவர்கள் அந்த இடத்திற்கு முன்பே இடம்பெயர்ந்து சென்ற, அவர்கள் அறிந்த நபர்களைத் தொடர்புகொள்ளலாம். அவர்களைத் தொடர்பு கொண்டு எதை எதிர்பார்க்கலாம் என்று பேசுவது அவர்களுடைய பொறுப்பு.

இந்த விஷயத்தில் தனக்கு உதவி வேண்டும் என்பது ஒருவருக்கு எப்படித் தெரியும்?
அவர் தனிமையாக இருப்பதை விரும்புகிறவராக இல்லாதவரையில், அவர் பிறரோடு இருப்பதை விரும்பி மகிழலாம், வேலை குறித்து உற்சாகமாக இருக்கலாம். அது உற்சாகமே இல்லாமல் போகத் தொடங்கும்போது, அதாவது, எழுந்து வேலைக்குச் செல்வதில் உற்சாகம் இன்றி இருக்கும்போது, அதுதான் அடையாளம். அவர் வெளியே சென்று தன் நண்பர்களுடன் இருப்பதைத் தவிர்ப்பது சிறந்தது என்று திடீரென உணர்கிறாரா? ஒரு கணம் நின்று, அவர் தன்னுடைய சுறுசுறுப்பைத் திரும்பப் பெறச் செய்யக் கூடியது ஏதேனும் உள்ளதா என்று கேட்கலாம். எடுத்துக்காட்டாக, உடற்பயிற்சிக் கூடத்திற்குச் செல்லலாம், நடன வகுப்பிற்குச் செல்லலாம், தனக்குப்பிடிக்கக்கூடிய எதையேனும் செய்யலாம்…

மனைவிகள் பற்றிச் சொல்லுங்கள். பெரும்பாலான பெண்கள் திருமணம் காரணமாக இடம்பெயர்கின்றனர், புதிய நகரத்தில் அவருடைய கணவரைத்தவிர யாரையும் அவர்களுக்குத் தெரியாது, அவர் வேலைக்குச் செல்லும்போது அவர்கள் வீட்டில் தனியே இருக்கிறார்கள்...
இந்தப் பெண்களில் பெரும்பாலானவர்கள் கவனித்துக்கொள்ள ஓரிரு குழந்தைகளைக் கொண்டுள்ளனர், எனவே அவர்கள் வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்ல முடியாது. மேலும் வீட்டில் அவர்களுக்கு ஆதரவாக இருந்த கணவர் வீட்டார் அல்லது பெற்றோர் அவர்களுடன் வராமல் இருக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே அவர்கள் ஒரு சமூகக் கட்டமைப்பைக் கண்டறிய முன்முயற்சி எடுக்கலாம் – ஆன்மிக மையத்தில் ஒரு கூட்டம், ஒரு யோகா மையம், ஒரு பூங்கா அல்லது ஒருவருடைய வீடு. தான் இணைந்துகொள்ள முடியும் என்று நினைக்கும் சில நண்பர்களைக் கண்டுபிடிக்க முயற்சிசெய்யலாம். அவர்கள் சிறந்த நண்பர்களாக இல்லாமல் போகலாம், ஆனால் குறைந்தபட்சம் இவர்கள் தொடர்புகொள்ளத் தொடங்குகிறார்கள். இல்லையெனில் அது மனச்சோர்வு, பதற்றம் அல்லது சமூகப் பதற்றத்திற்கான வாய்ப்பாகும். எனவே அவர்கள் தங்களுக்காக ஒரு சமூக்க கட்டமைப்பைக் கண்டறிய முயற்சி எடுக்கலாம்.

வயதான நபர்கள் குறித்துச் சொல்லுங்கள். அவர்களுக்கு இது கடினமானதா?
நான் இதுதான் பெரும் சவால் என நினைக்கிறேன், ஏனெனில் அவர்கள் 50-60 ஆண்டுகள் அதேமாதிரி சூழலில் இருந்துள்ளார்கள். அவர்கள் செல்லக்கூடிய சில இடங்களே உள்ளன – வயதானோர் மேம்பாட்டு மையங்கள் போன்றவை, அதன்பிறகு நிதித் தடைகள் உள்ளன. பெரும்பாலான வயதானவர்கள் வருமானம் கொண்டிருப்பதில்லை, அல்லது செலவு செய்வதில் வசதியாக உணர்வதில்லை. அது அவர்களை வீட்டில் தனிமையில் விடுகிறது. அவர்கள் செய்யக்கூடியது, அருகிலுள்ள பூங்காவிற்கோ ஆன்மிக இடத்திற்கோ நடந்து செல்வதுதான்.. பெரும்பாலானோர் அடுக்ககங்களில் உள்ளனர், எனவே குறைந்தபட்சம், கீழே இறங்கி நடக்கலாம். அவர்கள் தங்கள் பிள்ளைகள் மற்றும் மருமகள்களை மட்டும் சார்ந்திருக்காமல் தங்களைத் தாங்களே சமூகரீதியில் ஆதரிக்க வழிகளைத் தேட வேண்டும். 

இந்தக் கட்டுரை, ”இடப்பெயர்விற்கு அப்பால்” என்னும் இடப்பெயர்வு மற்றும் அது நம்முடைய உணர்வு, மனநலனை எப்படிப் பாதிக்கிறது என்பதை விளக்கும் தொடரிலிருந்து எடுக்கப்பட்டது, மேலும் இங்கே படிக்கவும்:
1. நிறுவனங்கள் பணியாளர்களுடைய மாற்றங்களுக்கு உதவ வேண்டும்: மவுலிகா சர்மா
2. இடம்பெயர்வது இவை அனைத்துமாக இருந்துத: ஒரு சவால், சாகசம் மற்றும் தன்னைத் தானே அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பு: ரேவதி கிருஷ்ணா

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org