இயல்புநிலையை மறுவரையறை செய்தல், ஒரு நோய்ப்பரவலின்போது நம்பிக்கையைத் தக்கவைத்துக்கொள்வதற்கு என்ன செய்யவேண்டும் என்று ஆராய்தல்

கடந்த காலத்தின் மகிழ்ச்சிக் கணங்களைச் சுட்டிக்காட்டுதல், வியூகத் திறமைகளைப் பயன்படுத்திக்கொள்ளுதல், இணையத்தில் சமூகத்தைக் கண்டறிதல்: இந்த நேரத்தில் மக்கள் எப்படி நம்பிக்கையைத் தக்கவைத்துக்கொள்கிறார்கள்
இயல்புநிலையை மறுவரையறை செய்தல், ஒரு நோய்ப்பரவலின்போது நம்பிக்கையைத் தக்கவைத்துக்கொள்வதற்கு என்ன செய்யவேண்டும் என்று ஆராய்தல்

ஓர் இளம் வாடிக்கையாளர் தன்னுடைய பேச்சை இவ்வாறு தொடங்குகிறார், ‘ஒரு குடும்பத்தைத் திட்டமிடுவதுபற்றி எனக்குக் கவலைகள் உள்ளன.’ அவர் தன்னுடைய அச்சங்களைப் பட்டியலிடுகிறார், அதன்பிறகு, நாங்கள் பல அறிவாற்றல் மற்றும் உடல்சார்ந்த சந்திப்புகளின்வழியாகப் பணியாற்றத் தொடங்குகிறோம். இதில் நாங்கள் முன்னேற முன்னேற, அவருடைய அச்சங்கள் விலகுகின்றன, புதிதாகக் கண்டறியப்பட்ட ஒரு மகிழ்ச்சி முன்னால் வருகிறது.

பணியில் உள்ள, தீவிரப் பதற்றம் கொண்ட ஒரு தொழில் வல்லுனர், சிங்கப்பூரில் ஒரு புதிய பணியைத் தொடங்க ஆர்வமாக உள்ளார். ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுவிட்டன, விசா பெறப்பட்டுவிட்டது, அவர் விரைவில் கிளம்பவேண்டும். இந்த மாற்றங்கள் உண்டாக்கிய பதற்றத்துக்கு நடுவில், புதிய ஆசைகள் விவாதிக்கப்படுகின்றன, வாழ்க்கை இலக்குகள் அமைக்கப்படுகின்றன.

சமீபத்தில் பட்டம் பெற்ற ஒருவர், இதற்குமுன் தேர்வுப் பதற்றத்துடன் போராடியுள்ளார், சக மனிதர்களுடன் ஒப்பிடப்படுகிற விலங்குத்தன்மை கொண்ட அழுத்தத்தைச் சந்தித்துள்ளார், அங்கிருந்து நெடுந்தொலைவு முன்னேறியுள்ளார். எங்களுடைய உரையாடல்கள் இப்போது புதிய ஆசைகளை, கோடை வருவதுபற்றிய மகிழ்ச்சியை, பணி வாழ்க்கையைத் தொடங்குவதுபற்றிய தடுமாற்றங்களை மையமாகக் கொண்டுள்ளன.

இன்று, நோய்ப்பரவல் நேரத்தில், அதே வாடிக்கையாளர்களுடனான என்னுடைய சந்திப்புகள் திகைக்கவைக்கும் வகையில் மாறுபட்டுள்ளன. அவர்களுடைய முந்தைய கவலைகள் எப்படி மாறுபட்டிருந்தாலும் சரி, அவர்கள் எல்லாரும் ஒரேமாதிரியான புதிய கவலைகளை மையமாகக் கொண்டு நகர்கிறார்கள்: வாழ்வாதாரம் மற்றும் உறுதியில்லா நிலை. முன்பு ஒரு குடும்பத்தைத் தொடங்கவேண்டும் என்று ஆவலாக இருந்தவர்கள், இப்போது மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்குச் செல்வதை எண்ணிக் குறிப்பிடக்கூடிய வகையில் அஞ்சுவதை நான் காண்கிறேன். அந்த இளம் பட்டதாரியைப் பொறுத்தவரை, தொடக்கத்தில் அவருக்கு இருந்த மகிழ்ச்சி மாறிவிட்டது, இப்போது அந்த இடத்தில் திறந்த முனை கொண்ட உறுதியில்லா நிலை வந்துவிட்டது. குறிப்பிடக்கூடிய ஒரு பணி மாற்றத்தின் நடுவில் இருந்த அந்தத் தொழில்வல்லுனருடைய இப்போதைய சோர்வு மிக வெளிப்படையாகத் தெரிகிறது.

பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுவிட்டன, தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன, ஊழியர்கள் வேலை இழக்கிறார்கள், திருமணங்கள் தள்ளிப்போடப்படுகின்றன, ஆண்டுக்கு ஆண்டு ஒரு கடிகாரத்தைப்போன்ற கச்சிதமான ஒத்திசைவுடன் நகர்ந்துகொண்டிருந்த ஓர் உலகம், முதன்முறையாகத் தலைகீழாகிறது. நாடு, முடக்கத்தில் உள்ளது.

இந்தக் குழப்பம், உறுதியற்ற நிலையில், நாம் கண்டிப்பாக இயல்பு நிலையை மறுவரையறை செய்யவேண்டும்.

இப்போது, எங்களுடைய நிகழ்வுகளில், நாங்கள் மாற்றுகளைப்பற்றி, கிடைக்கிற, கற்பனை செய்யப்படாத மாற்றுகளைப்பற்றிப் பேசுகிறோம். ஒவ்வொரு முக்கியமான வாழ்க்கைத் தீர்மானத்தையும் திட்டத்தையும் மாற்றலாம், நேரத்தைச் சரிசெய்யலாம் மற்றும்/அல்லது தள்ளிப்போடலாம், அவை முன்பு எவ்வளவு உறுதியுடன் செய்யப்பட்டிருந்தாலும் சரி, இதை ஒருவர் உணரும்போது, பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.

பணி நீக்கக் கடிதத்தை மக்கள் எப்படிக் கையாளவேண்டும்? அதனுடன் தொடர்புடைய களங்கவுணர்வை ஆராயவேண்டும், (பணியிலிருந்து நீக்கப்படும் ஆபத்து மிகுதியாக உள்ள) ஒரு தொடக்க நிலை நிறுவனத்தில் சேர்வதாகத் தீர்மானிப்பது போன்ற வியூக அடிப்படையிலான ஆபத்துகளை எதிர்கொள்வது ஒரு பெருமைப் பதக்கமாகும் என்று உணரவேண்டும். ஒருவர் ஒரு விஷயத்தில் திடீரென்று மாறியாகவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படும்போது, மாற்றங்கள் நிகழ்கின்றன, இதுபோன்ற நிகழ்வுகளுக்கு வியூகத் திறன்கள் தேவை, இதன்மூலம் அவர் தன்னுடைய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு தன்னுடைய பணி வாழ்க்கைப் பாதையை மாற்றியமைக்கலாம்.

சில தொழில் வல்லுனர்கள், முன்பு ஒரு புதிய வாய்ப்பாக இருந்த விஷயத்தின் இப்போதைய துண்டுகளைத் திரட்டச் சிரமப்படுகிறார்கள், நாங்கள் அவர்களுடன் அமர்ந்து பேசுகிறோம், விருப்பத்தேர்வுகளை, நேரக்கோடுகளைத் திருத்தியமைக்கிறோம். இதுபோன்ற நிகழ்வுகளில், நாங்கள் முதலில் தொடக்கக் களைப்பை நீக்குவதில் கவனம் செலுத்துகிறோம், இதற்கு நாங்கள் முதலில் பெருமூச்சு விடுகிறோம் (உடலிலும் சரி, மனத்திலும் சரி), பின்னர், அனுபவங்களை நினைவுகூரத் தொடங்குகிறோம், மகிழ்ச்சிக் கணங்களைத் தேர்ந்தெடுத்துப் பேசுகிறோம், எடுத்துக்காட்டாக, தனிப்பட்ட மைல்கற்கள், சாதனைகள், வென்ற ஒப்பந்தங்கள், பெற்ற பாராட்டுகள், சம்பாதித்த பதவி உயர்வுகள் (இவற்றில் சில, பல எதிர்ப்புகளைக் கடந்து வெல்லப்பட்டவை), சமாளித்த சவால்கள் போன்றவற்றைப்பற்றிப் பேசுகிறோம், இதன்மூலம், நாங்கள் ஒரு ‘நேர்வித நிகழ்வுகள் புத்தக’த்தை உருவாக்குகிறோம், துன்ப நேரத்தில் இது அவர்களுக்கு வலுவூட்டுகிறது. அவர்களுடைய புன்னகை, அவர்களுடைய கண்களை எட்டுகிறது, தோள்கள் வெளிப்படையாக நேராகின்றன, இவற்றை நாங்கள் ஒரு வீடியோச் சந்திப்பில் காண்கிறோம்!

ஒரு சிகிச்சையாளர் என்றமுறையில், வாடிக்கையாளருடைய சோர்வை, அச்சத்தை நீக்குவதன்மூலம், அவர்களுக்குள் இருக்கிற உள்ளார்ந்த உயிர் பிழைக்கும் உள்ளுணர்வு மேலே வரும், அதன்மூலம், எதிர்காலத் திட்டங்களைத் திட்டமிட எங்களுக்கு வழி அமையும் என்பதை நான் அறிவேன்.

வாடிக்கையாளர்கள் என்னை அணுகும்போது, அவர்களுடைய எதிர்காலத் திட்டங்கள் உறுதியற்று உள்ளன, அவர்களுடைய தனிப்பட்ட கவலைகளுடன், இந்த நோய்ப்பரவலின் மத்தியில் அவர்கள் தனித்து விடப்பட்டதாகவும் கைவிடப்பட்டதாகவும் உணர்கிறார்கள் என்ற ஒட்டுமொத்தக் கவலையும் வெளிப்படையாகத் தெரிகிறது. அதே சமயம், சமூகத்தில் எல்லாரும் ஒருவரிடமிருந்து ஒருவர் தள்ளியிருக்கிறார்கள் என்பதால், அனைவரும் தனிமையில் இருக்கவேண்டும், தனித்திருக்கவேண்டும் என்று பொருள் இல்லை; இணையத்தில் வீடியோக் கருத்தரங்குகள், மெய்நிகர் விளையாட்டுகளின் வழியாக மக்கள் சுறுசுறுப்பான சமூக வாழ்வுகளைத் தொடரலாம். முதன்முறையாக, ஒட்டுமொத்த மனிதகுலமும் சேர்ந்து ஒரே இக்கட்டை எதிர்கொள்கிறது என்பதை அறிந்திருப்பது முக்கியம்.

இந்த அச்சங்களைத் தான்மட்டும் எதிர்கொள்ளவில்லை, எல்லாரும் இவற்றுடன் போரிட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை ஒருவர் உணரும்போது, அவருக்குள் ஒருவிதமான நோய்த்தணிவு உணர்ச்சி ஊறுகிறது. இதில் யாரும் தனியாக இல்லை, ஒருவர்மட்டும் இப்படி உணரவில்லை. முதன்முறையாக, மக்கள் அனைவரும் ஒரு புதிய இயல்பு நிலையை மறு வரையறை செய்யத் தடுமாறுகிறார்கள். ஒரு புதிய வாழ்க்கை முறை.

சமீபத்தில், நான் என்னுடைய அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களுடன் ஜூமில் தம்போலா விளையாடி மகிழ்ந்தேன், அதை நானே வெளியில் சொன்னேன். இதில் பங்கேற்ற ஆறு பேரும் அருகருகில் வசிக்கிறோம், இயல்பு நிலையை மறுவரையறை செய்வதன்மூலம் தனிமையை எதிர்த்துப் போரிடலாம் என்று நாங்கள் தீர்மானித்தோம். நாங்கள் கொஞ்சம் ஒயின் பருகினோம், ஒருவரையொருவர் கேலி செய்தோம், ஒவ்வொரு வீட்டிலும் எங்கள் சிரிப்புகள் எதிரொலித்தன, பழைய நட்புகள் புதிய நேரத்துக்கேற்ப மாறின.

எங்கள் சந்திப்புக்கிப்பிறகு, ஒரு வாடிக்கையாளரிடமிருந்து எனக்கு ஓர் உரைச்செய்தி வந்தது, அது எனக்கு மகிழ்ச்சி, மன நிறைவை அளித்தது. “நீங்கள் Housepartyபற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? என்னுடைய நண்பர்கள் எனக்கு அனுப்பிய புதிய செயலி அது. அதில் வீடியோக் கருத்தரங்குகளை நடத்தலாம், அதே நேரத்தில் விளையாட்டுகளையும் விளையாடலாம். இன்று நான் அதில் என் நண்பர்களையெல்லாம் சந்திக்கப்போகிறேன்!” என்று அவர் செய்தி அனுப்பியிருந்தார். அவர் இத்துடன் நிறுத்தவில்லை, இன்னும் ஒரு படி முன்னேறி, இன்னொரு விஷயத்தையும் விளக்கியிருந்தார், அந்தச் செயலியில் பல ‘ஹவுஸ்-பார்ட்டிகள்’ நடக்கலாமாம், அதில் ஒருவர் ஒரு பார்ட்டியிலிருந்து இன்னொரு பார்ட்டிக்குத் தாவிச் செல்லலாமாம். அது ஒரு சிறிய செய்திதான், ஆனால், அதில் பல விஷயங்கள் தெரியவந்தன, புதிய இயல்பும் பழைய இயல்பைப்போன்ற அதே அளவு துடிப்புடனும் ஆற்றலுடனும் இருக்கலாம் என்று அது எனக்குச் சொன்னது.

ஜெயா ஓர் ஆலோசகர், ஒருங்கிணைந்த உடல் சார்ந்த உளவியலில் சிறப்புத்திறன் கொண்ட உளவியல் சிகிச்சையாளர்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org