#நாம்சாதிப்போம்

ஜனவரி 27, புதன்கிழமை அன்று, மனநோய் உள்ளவர்களை வேலை வாய்ப்புகளில் சேர்ப்பதற்காகக ஒரு சமூக ஊடக பரப்புரை தொடங்கப்பட்டது. பலவேறு பொறுப்பாளர்கள், மனநோய் உள்ளவர்கள் வேலை செய்யும் திறனுடையவர்கள் என்ற கருத்தை ஆதரிக்கும் செய்திகளுடன் அவர்கள் இருக்கும் படங்களைப் பதிவிடுவதன் மூலம் #wecanwork பரப்புரையை ஆதரிக்க முன்வந்தனர்.இப்பரப்புரை, சென்னையில் சமூக நீதிக்கான சமஉரிமை மையத்தில் தோன்றி, இந்தியாவில் அனைத்து மூலைகளிலும், பல்வேறு பொருளாதார அடுக்குகளிலும் ஆதரவைப் பெற்றது.

இப்பரப்புரை, மாற்றுத்திறனுடையவர்களின் உரிமை சட்டமுன் வரைவின் மீதான ஒன்றிய ஆய அமைச்சரின் தற்போதைய அறிக்கை பதிலளிக்கும் வகையில் தொடங்கப்பட்டது. அந்த அறிக்கை, மனநோய் உடையவர்கள் மற்றும் மன ஊனமுடையவர்களின் வேலைசெய்யும் திறனை வேறுபடுத்துவதுடன், முதலாமவர்களின் திறன்களை இழிவுபடுத்துகிறது. இந்தப் பரப்புரையின் பின்னணியில் உள்ள குரல்கள் இந்த அறிக்கைகளை புறக்கணிக்க முயல்கின்றன. ஏனெனில் அவை கூறப்பட்ட சட்ட முன்வரைவின் விதிகளை நீர்த்ததுப் போகச் செய்து, மனநோய் உடைய மக்களை இன்னும் அந்நியமாக்கும்.

மேலும், இந்தப் பரப்புரை இது போன்ற நிகழ்வுகளின் விளைவாக, கால ஓட்டத்தில் வலுவூட்டப்பட்ட இது மாதிரியான பார்வைகளை எதிர்த்து உடைக்க முயற்சிக்கிற்றது. இந்தப் பரப்புரையில் பங்கேற்றவர்களில், மனநோய் பாதிப்புடைய நபர்களுக்கு வேலையளித்தவர்கள்,  நலம்பெற்று வெற்றிகரமாக வேலை பெற்றவர்கள், செயற்பாட்டளார்கள் மற்றும் சமூகப் பணியாளர்கள், மனநல வல்லுநர்கள், மற்ற குறைபாடுடைய நபர்களும் அடங்குவர்கள். இப்பரப்புரையை இங்கு http://wecanwork.tumblr.com/ காணலாம்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org