தாயின் நலனில் குடும்பத்தின் பங்கு

ஒருவேளை, கர்ப்பமாக உள்ள பெண்ணும் அவருடைய கணவரும் ஒரு கூட்டுக்குடும்பத்தில் இருக்கிறார்கள் என்றால், அந்தத் தாயின் நலனில் அவரது குடும்பம் ஒரு முக்கியமான பங்கை ஆற்றவேண்டும். இந்தியப் பெண்களில் பலரும், தங்களுடைய கர்ப்பகாலத்தின் பெரும்பகுதி தங்களது மாமியார் வீட்டில்தான் இருக்கிறார்கள். ஒருபக்கம் பார்த்தால், இது ஒரு நல்ல ஆதரவு அமைப்பாக அமையும், இன்னொருபக்கம், இது சில சிரமங்களையும் உண்டாக்கலாம். உதாரணமாக, கர்ப்பம், பிரசவம், குழந்தையைக் கவனித்துக்கொள்வது போன்றவற்றில் மாமியார் வீட்டினருடைய சிந்தனைகளும் பழக்கவழக்கங்களும் இந்தப் பெண்ணின் சிந்தனைகளோடு ஒத்துப்போகாமலிருக்கலாம். அதுபோன்ற நேரங்களில் குடும்பத்தினர் செய்யக்கூடியவை:

  • அந்தப் பெண்ணுக்கு ஊட்டச்சத்துமிக்க உணவை வழங்கலாம்

  • அவரைச் சுற்றியிருக்கும் சூழல் உணர்வுரீதியில் ஆரோக்கியமாக இருப்பதை உறுதிசெய்யலாம்

  • ஒருவேளை அவருடைய மனோநிலை அடிக்கடி மாறினால், அவருக்குப் பதற்றம் வந்தால், அதைப் பொறுத்துக்கொண்டு இருக்கலாம்

  • அவரை அதிகம் தொந்தரவு செய்யவேண்டாம், அதேசமயம், அவரது கர்ப்பம் எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும்

  • கர்ப்பம் தொடர்பாக அவருக்கு ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், அவருக்கு முழு ஆதரவு அளிக்கலாம்

  • பிறக்கும் குழந்தை ஆணாகதான் இருக்கவேண்டும் அல்லது பெண்ணாகதான் இருக்கவேண்டும் என்று எண்ணுவது தவறு என்று தெரிந்துகொள்ளலாம், அதைப் பிறருக்கும் சொல்லலாம், புதிய தாய்க்கு அழுத்தத்தைத் தராமலிருக்கலாம்.

  • பெரிய குடும்பத்துக்கும், இப்போது உருவாகவிருக்கும் புதிய குடும்பத்துக்கும் இடையிலுள்ள கலாசார மாறுபாடுகளை மதிக்கலாம்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org