குறைபாடுகள்

குழந்தைப் பருவக் குறைபாடுகள்

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

குழந்தைப் பருவக் குறைபாடுகள்

குழந்தைகளின் வளர்ச்சி பெற்றோருக்கு மற்றோருக்கும் மகிழ்ச்சிதரக்கூடிய ஓர் அனுபவம். அதேசமயம், இந்தப் பருவத்தில் சில குழந்தைகள் சந்திக்கக்கூடிய பொதுப் பிரச்னைகளையும், அவற்றை எப்படித் தீர்ப்பது என்பதுபற்றியும் அவர்கள் தெரிந்துவைத்திருப்பது அவசியம்.

இந்தப் பிரிவில் குழந்தைப் பருவத்தில் வரக்கூடிய குறைபாடுகளைப் பற்றிய விபரங்களை நாம் காணலாம். இந்தக் குறைபாடுகள் பொதுவாக ஒரு குழந்தை சிறிய சிசுவாக இருக்கும்போதோ சற்று வளர்ந்த பிறகோ அதன் வளர் இளம் பருவத்திலோ கண்டறியப்படுகின்றன.

குழந்தைப் பருவக் குறைபாடுகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்: கற்றல் குறைபாடுகள் மற்றும் வளர்ச்சிக் குறைபாடுகள்.

கற்றல் குறைபாடுகளை கற்றல் ஊனங்கள் என்றும் அழைப்பார்கள். இதில் டிஸ்லெக்ஸியா, டிஸ்கால்குலியா, டிஸ்பிராக்ஸியா போன்ற பலவிதமான குறைபாடுகள் இடம் பெறுகின்றன. கவனக் குறைவான மிகைச் செயல்பாட்டுக் குறைபாடு என்பதும் ஒரு வகையான கற்றல் குறைபாடுதான்.

வளர்ச்சிக் குறைபாடுகள் என்பவை குழந்தையின் வளர்ச்சிக் காலகட்டத்தில் தோன்றக்கூடிய பலவிதமான நிலைகள் ஆகும். இந்தக் குறைபாடுகளில் பெரும்பாலானவை கருவிலேயே தொடங்கிவிடுகின்றன, ஆனால் சில குறைபாடுகள் பிறப்புக்குப் பிறகு காயம், தொற்று அல்லது பிற காரணிகளாலும் ஏற்படுகின்றன. ஆட்டிஸம், செரிபரல் பால்சி, பேச்சுக் குறைபாடு, மனநிலைப் பிறழ்வு போன்றவை வளர்ச்சிக் குறைபாடுகள் ஆகும்.

பல்வேறு குழந்தைப் பருவக் குறைபாடுகள், அவற்றுக்கான காரணங்கள், அவற்றின் அறிகுறிகள், அவற்றைக் கண்டறிதல், சிகிச்சை எடுத்துக் கொள்ளுதல் மற்றும் அந்தக் குறைபாடு கொண்ட குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளுதல் ஆகியவற்றைப் பற்றி நீங்கள் இந்தப் பிரிவில் வாசிக்கலாம், புரிந்து கொள்ளலாம்.

ஆலோசனை வழங்குதல் என்றால் என்ன? அது எப்போது உதவலாம்?

ஒரு பதின்பருவப் பெண்ணுடைய மனநலனைப் பாதிக்கக்கூடியவை எவை?