மன நலனைப் புரிந்துகொள்ளுதல்

ஆன்ட்டி-டிப்ரஸன்ட்களைப்பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

ஆன்ட்டி-டிப்ரஸன்ட்கள் என்றால் என்ன?

ஆன்ட்டி-டிப்ரஸன்ட்கள் என்பவை அடிப்படையில் மனச்சோர்வுக்கான அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதற்காக உளவியலாளர்கள் பரிந்துரைக்கும்மருந்துகளாகும்.  பல்வேறு வகையான பதற்றக் குறைபாடுகளின் அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதற்கும் உளவியலாளர்கள் ஆன்ட்டி-டிப்ரஸன்ட்களைப்பரிந்துரைக்கிறார்கள்.  இது அவற்றின் தீவிரத்தன்மையைப்பொறுத்து அமைகிறது. சில நேரங்களில் OCD போன்ற பிரச்னைகளைக் குணப்படுத்தவும் இதுபயன்படுத்தப்படுகிறது.

ஒருவருக்கு மருந்துகளைப் பரிந்துரைப்பதற்குமுன்னால், அவருடைய பிரச்னையின் தீவிரத்தன்மையை உளவியலாளர் மதிப்பிடுகிறார், அவருக்குமருந்துகள் தேவையா இல்லையா என்று தீர்மானிக்கிறார்.   அந்த நபர் பின்வரும் அறிகுறிகளை அனுபவிக்கும்போது உளவியலாளர் ஆன்ட்டி-டிப்ரஸன்ட்களைப் பரிந்துரைப்பதுபற்றிச் சிந்திக்கலாம்:

·       அவர் தன்னுடைய அன்றாட வாழ்க்கையை நடத்துவது அல்லது சமாளிப்பதற்கான திறமை குறிப்பிடத்தக்கவகையில் பாதிக்கப்பட்டுள்ளது,   

·       மற்றும் அவர் நீண்ட காலமாக இதை அனுபவித்து வருகிறார்

ஒருவருக்கு ஆன்ட்டி-டிப்ரஸன்ட்கள் பரிந்துரைக்கப்படுகின்றன என்றால் அவர் என்ன செய்யவேண்டும்?

ஆன்ட்டி-டிப்ரஸன்ட்கள் செயல்படுவதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு நேரம் ஆகும்.  ஆன்ட்டி-டிப்ரஸன்ட்களை உட்கொள்ளும் ஒருவர் முன்பைவிடச்சிறப்பாக உணரத்தொடங்குவதற்கு 1-3 வாரங்கள்வரை ஆகலாம்மருந்துகளின் முழுப் பலன்களையும் அவர்கள் அனுபவிப்பதற்குக் குறைந்தபட்சம் 6-8வாரங்கள் ஆகலாம்.    ஆன்ட்டி-டிப்ரஸன்ட்கள் உளவியல் சிகிச்சை அல்லது ஆலோசனைச் சிகிச்சையுடன் இணைந்து சிறப்பாகச் செயல்படுகின்றன

ஆன்ட்டி-டிப்ரஸன்ட்களை உட்கொண்டால் ஏதாவது பக்கவிளைவுகள் இருக்குமா?

ஆன்ட்டி-டிப்ரஸன்ட்களின் சில பொதுவான பக்கவிளைவுகள்தூக்கமாக உணர்தல் அல்லது களைப்புதலைவலிவறண்ட வாய்தலைச்சுற்றல்வயிற்றில் சிரமத்தை உணர்தல் மற்றும் எடை அதிகரிப்பு.   இந்தப்பக்கவிளைவுகளில் பெரும்பாலானவை சில வாரங்களில் நின்றுவிடும்அதேசமயம் ஆன்ட்டி-டிப்ரஸன்ட்களை உட்கொள்ளும் ஒருவர் இந்தப் பக்கவிளைவுகளைப்பற்றித் தன்னுடைய பொது மருத்துவர் அல்லதுஉளவியலாளருடன் உரையாடுவது முக்கியம்

ஆன்ட்டி-டிப்ரஸன்ட்களை உட்கொள்ளும் ஒருவர் அதற்கு அடிமையாகிவிட வாய்ப்பிருக்கிறதா?

ஒருவர் ஒரு பொருளுக்கு அடிமையாகிறார் என்றால், அவர் அதை மேலும் மேலும் அதிகம் உட்கொள்ளவேண்டும் என்று உணரத்தொடங்கக்கூடும், ஒரு கட்டத்தில் அது அவருடைய வாழ்க்கையையே பாதிக்கத்தொடங்கிவிடக்கூடும்.    ஆனால் ஆன்ட்டி-டிப்ரஸன்ட்கள் இப்படி யாரையும் அடிமையாக்குவது இல்லை.  ஒருவர் இந்த மருந்துகளைத் திடீரென்று நிறுத்தும்போது, சில நாட்களுக்குத் தளர்வாகவோ,அசவுகரியமாகவோ உணரலாம், ஆனால் இந்த உணர்வுகள் பொதுவாகச் சீக்கிரத்தில் நின்றுவிடும்.  அதேசமயம் அவருக்கு ஆரம்பத்தில் இருந்த பிரச்னைக்கான அறிகுறிகள் மீண்டும் வருகின்றன என்றால், அந்தப்பிரச்னை முழுமையாகக் குணமாகவில்லை என்றுதான் பொருள், மருந்துகளுக்கு அவர் அடிமையாகிவிட்டார் என்று பொருளில்லை.  

ஆன்ட்டி-டிப்ரஸன்ட் சிகிச்சையில் இருக்கும்போது ஒருவர் மது அருந்தலாமா?

ஆன்ட்டி-டிப்ரஸன்ட்களை உட்கொள்ளும் ஒருவர் மது அருந்துவது பரிந்துரைக்கப்படுவதில்லை.  மதுவே மனச்சோர்வை உண்டாக்கும் ஒரு பொருளாகும், அது அவரை விரைவில் மயக்கநிலைக்குக்கொண்டுசெல்லலாம்.  அத்துடன், மதுவானது ஆன்ட்டி-டிப்ரஸன்ட்களின் நன்மைகளுக்கு எதிராகச் செயல்படலாம், அந்த நபருடைய அறிகுறிகளை மோசமாக்கலாம்.  ஆகவே, ஒருவர் ஆன்ட்டி-டிப்ரஸன்ட்சிகிச்சையில் இருக்கும்போது மதுவை விட்டுவிடுவது நல்லது. 

ஆன்ட்டி-டிப்ரஸன்ட்களுக்குப் பதிலாக ஒருவர் உடற்பயிற்சியில் ஈடுபடலாமா?

பொதுவாக உடற்பயிற்சி என்பது ஓர் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நல்ல பழக்கமாகும்.  தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்தால் அது ஒருவருடைய மனநிலையை மேம்படுத்தவும் மனநலப் பிரச்னைகள்தொடர்பான அறிகுறிகளைக் குறைக்கவும் உதவுகிறது.   தொடர்ச்சியாக உடற்பயிற்சியில் ஈடுபடுகிறவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் பல நிலைகளில் பலன்களைப் பெறுகிறார்கள் என்று ஆராய்ச்சிகள்சுட்டிக்காட்டுகின்றன

மனச்சோர்வு மற்றும் பதற்றம் போன்றவற்றின் மிதமான அறிகுறிகளுக்கு உடற்பயிற்சி பலனளிக்கலாம்.  அதேசமயம்ஒருவருக்கு மிதமானது முதல் தீவிரமானதுவரையிலான அறிகுறிகள் இருந்தால்,அவருக்குச் சிகிச்சையளிக்கும் உளவியலாளர் மருந்துகளுடன் தொடர்ச்சியான உடற்பயிற்சியையும் ஒரு நல்ல உணவுப்பழக்கத்தைப் பின்பற்றுவதையும் சமநிலையான ஒரு வாழ்க்கை முறையைக்கொண்டிருப்பதையும் பரிந்துரைப்பார்.

ஆன்ட்டி-டிப்ரஸன்ட்களை உட்கொண்டுவரும் ஒருவர் எப்போது அதை நிறுத்தலாம்?

ஒருவர் மருந்துகளை உட்கொள்ளும்போதுஅவருக்குச் சிகிச்சையளிக்கும் உளவியலாளர் அடிக்கடி தன்னை வந்துபார்க்குமாறு சொல்வார்இந்த வழக்கமான சந்திப்புகளின்போதுமருந்துகள் எந்த அளவுசிறப்பாகச் செயல்படுகின்றன என்பதை அவர் புரிந்துகொள்வார்.    ஒருவர் ஒரு குறிப்பிட்ட அளவிலான ஆன்ட்டி-டிப்ரஸன்ட்களை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்கு உட்கொண்டு அதன்மூலம் மருந்துகளின்முழுப் பலனையும் அனுபவிக்கிறார் என்றால்அவருடைய உளவியலாளர் மருந்துகளின் அளவைக் குறைப்பதுபற்றிச் சிந்திக்கக்கூடும்.  அப்படிச் செய்யும்போது ஒருவேளை தனக்குப் பழைய அறிகுறிகள் திரும்பவருகின்றன என்று அவர் உணர்ந்தால்அதை உளவியலாளரிடம் உடனே தெரிவிப்பது முக்கியம்.    ஆகவேஆன்ட்டி-டிப்ரஸன்ட்களைச் சாப்பிடுவதை எப்போது நிறுத்துவது என்கிற தீர்மானத்தைஎடுப்பதற்குமுன்னால் அவர் தன்னுடைய உளவியலாளரிடம் இதைப்பற்றி விவாதிப்பது சிறந்தது.   திடீரென்று மருந்துகளை நிறுத்திவிடுவது பரிந்துரைக்கப்படுவதில்லை.

ஆன்ட்டி-டிப்ரஸன்ட்களை உட்கொள்ளும் ஒருவர் தன்னுடைய உளவியலாளரிடம் கேட்கவேண்டிய கேள்விகள் என்னென்ன?

ஆன்ட்டி-டிப்ரஸன்ட்களால் கிடைக்கும் பலனானது ஒவ்வொருவருக்கும் மாறுபடும்: ‘ஒரே தீர்வு எல்லாருக்கும் பொருந்தும்’ என்று ஏதுமில்லை. ஆகவே, ஒவ்வொருவரும் மருந்துகளின் தாக்கத்தைவெவ்வேறுவிதமாக அனுபவிக்கிறார்கள்.   ஆன்ட்டி-டிப்ரஸன்ட் சிகிச்சையில் இருக்கும் ஒருவர் தன்னுடைய உளவியலாளரிடம் கேட்கவேண்டிய சில அம்சங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

·       சில ஆன்ட்டி-டிப்ரஸன்ட்களுக்குக் குறிப்பிட்ட பக்கவிளைவுகள் இருக்கின்றன, ஆகவே, தனக்கு பரிந்துரைக்கப்படும் ஆன்ட்டி-டிப்ரஸன்ட்டால் ஏதாவது பக்கவிளைவுகள் ஏற்படுமா, அதைத் தான் கூர்ந்து கவனிக்கவேண்டுமா என்று அவர் உளவியலாளரிடம் கேட்கலாம். 
 

·       ஆன்ட்டி-டிப்ரஸன்ட்களின் ஒரு பொதுவான பக்கவிளைவு, தலைசுற்றல் அல்லது வயிற்றில் சிரமமாக இருப்பதுபோன்ற உணர்வு.   ஆகவே, ஒரு குறிப்பிட்ட மருந்தைச் சாப்பிடுவதற்குமுன்பு எடுத்துக்கொள்ளலாமா அல்லது சாப்பாட்டுடன் எடுத்துக்கொள்ளவேண்டுமா அல்லது சாப்பாட்டுக்குப்பிறகு எடுத்துக்கொள்ளவேண்டுமா என்று தெரிந்துகொள்வது நல்லது.   
 

·       நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் போன்ற வேறு நலப் பிரச்னைகளுக்காக ஒருவர் ஏற்கனவே சில மருந்துகளை உட்கொள்கிறார் என்றால், அந்தக் குறிப்பிட்ட மருந்தானது பரிந்துரைக்கப்படும் ஆன்ட்டி-டிப்ரஸன்ட்டுடன் இணைந்து செயல்படக்கூடுமா என்பதைப்பற்றி அவர் தெரிந்துகொள்ள விரும்பலாம்.     
 

·       ஆன்ட்டி-டிப்ரஸன்ட்களை உட்கொள்ளும் பெண்கள் கர்ப்பமாகத் திட்டமிடுகிறார்கள் என்றால், அந்த மருந்துகளால் குழந்தைக்கு ஏதாவது பாதிப்பு வரக்கூடுமா என்பதைப்பற்றி அவர்கள் விவாதிக்கக்கூடும்.  
 

·       ஆன்ட்டி-டிப்ரஸன்ட்களை உட்கொள்ளும் தாய்மார்கள் தங்களுடைய குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கிறார்கள் என்றால், அவர்கள் தங்களுடைய பொது மருத்துவரிடம் அல்லது உளவியலாளரிடம் இந்த மருந்து தன்னுடைய குழந்தைக்கு ஏதாவது பாதிப்பை ஏற்படுத்துமா என்பதுபற்றி விவாதிப்பது அவசியம். 

ஆன்ட்டி-டிப்ரஸன்ட்களை உட்கொண்டுவரும் ஒருவர் எப்போது அதை நிறுத்தலாம்?

ஒருவர் மருந்துகளை உட்கொள்ளும்போதுஅவருக்குச் சிகிச்சையளிக்கும் உளவியலாளர் அடிக்கடி தன்னை வந்துபார்க்குமாறு சொல்வார்இந்த வழக்கமான சந்திப்புகளின்போதுமருந்துகள் எந்த அளவுசிறப்பாகச் செயல்படுகின்றன என்பதை அவர் புரிந்துகொள்வார்ஒருவர் ஒரு குறிப்பிட்ட அளவிலான ஆன்ட்டி-டிப்ரஸன்ட்களை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்கு உட்கொண்டு அதன்மூலம் மருந்துகளின் முழுப்பலனையும் அனுபவிக்கிறார் என்றால்அவருடைய உளவியலாளர் மருந்துகளின் அளவைக் குறைப்பதுபற்றிச் சிந்திக்கக்கூடும்அப்படிச் செய்யும்போது ஒருவேளை தனக்குப் பழைய அறிகுறிகள் திரும்பவருகின்றன என்று அவர் உணர்ந்தால்அதை உளவியலாளரிடம் உடனே தெரிவிப்பது முக்கியம்ஆகவேஆன்ட்டி-டிப்ரஸன்ட்களைச் சாப்பிடுவதை எப்போது நிறுத்துவது என்கிற தீர்மானத்தைஎடுப்பதற்குமுன்னால் அவர் தன்னுடைய உளவியலாளரிடம் இதைப்பற்றி விவாதிப்பது சிறந்தது.   திடீரென்று மருந்துகளை நிறுத்திவிடுவது பரிந்துரைக்கப்படுவதில்லை.

யார் ஆன்ட்டி-டிப்ரஸன்ட்களைப் பரிந்துரைக்கலாம்?

ஆன்ட்டி-டிப்ரஸன்ட்களைப் பொதுவாக மன நல மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.  பொது மருத்துவர்கள் மற்றும் நரம்பியல் நிபுணர்கள் போன்ற எந்த ஒரு சிறப்புத் துறையில் பணியாற்றும் எந்த ஒருமருத்துவரும் ஆன்ட்டி-டிப்ரஸன்ட்களைப் பரிந்துரைக்கலாம்.   உளவியலாளர்கள்உளவியல் நிபுணர்கள் மற்றும் சமூகப் பணியாளர்கள் போன்ற மனநல நிபுணர்கள் உரையாடல் மற்றும் சிகிச்சையைவழங்குகிறார்கள்ஆனால் அவர்கள் மருந்துகளைப் பரிந்துரைக்க இயலாது


இந்தக் கட்டுரை சக்ரா வேர்ல்டு மருத்துவமனையில் உளவியல் ஆலோசகரான டாக்டர் சபீனா ராவ் வழங்கிய குறிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது.

கவனக்குறைவு மிகைச்செயல்பாட்டுக் குறைபாடு (ADHD)

டிஸ்கிராபியா