பணியிடம்

மனச்சோர்வு குறித்து மேலாளரிடம் பேசுதல்

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

நான் என்னுடைய தற்போதைய பணியில் வேலை செய்யத் தொடங்கியபோது, நான் பல பதற்றங்களைக் கொண்டிருந்தேன், அவற்றில் சில என் மனநோய் தொடர்பானவை. உண்மையில் நான் இந்த வேலையில் சேர்ந்து சுமார் ஓராண்டுவரையில் நான் என்னுடைய மனநோய் குறித்து வெளிப்படையாகப் பேசவில்லை. நான் என்னுடைய மேலாளர்களிடம் என்னுடைய சக பணியாளர்கள் செயல்படுவது எனக்கு எப்படிப் பதற்றத்தை ஏற்படுத்துகிறது என்று பேசினேன். என்னுடைய மேலாளருக்கும் மனச்சோர்வு இருந்தது என்பதை அறிந்து கொண்டேன், அது ஒருவகையில் என்னுடைய பயத்தை நீக்கியது. 

இது என்னுடைய நேரத்திட்டத்தை எப்படிப் பாதிக்கும், நான் அதனை எப்படிக் கையாளுவேன் என்று அவருக்கு இருந்த கவலைகள் எதார்த்தமானவை; நாங்கள் என்னுடைய சவால்களை எதிர்கொள்ள ஒரு திட்டத்தை அமைப்பது எப்படி என்று கண்டறிந்தோம். இப்போது என்னுடைய சக பணியாளர்கள் இதனை அறிந்திருப்பதால், அவர்கள் புரிந்துகொள்கிறார்கள், உதவியாகவும் உள்ளார்கள்.


என்னுடைய பணி எனக்குச் சுதந்தரமும் நெகிழ்வுத்தன்மையும் தருகிறது. நான் ஒரு வழக்கமற்ற வழமை கொண்டுள்ளேன், அது நான் சில நேரம் அனுபவிக்கும் படைப்பாக்கத்தின் தளிருக்கான இடத்தை உருவாக்குகிறது. நான் படைப்புத்திறனை உணராத நாட்களில், நான் ஆவணப்படுத்தல் போன்ற வழக்கமான பணிகளில் கவனம் செலுத்துகிறேன். நான் எப்போது உகந்ததாக உணரவில்லையோ அப்போது அதைச்சொல்லி ஆதரவை நாட முடியும். நான் என்னுடைய முதலாளிக்கு நன்றிகளைக் கூறுவேன். ஏனெனில், அவர்கள் மனம்வைத்தால் நான் நினைத்ததைச் செய்ய இயலுகிறது.

சரியான நேரத்தில் இடையீடு, ஆதரவு மற்றும் நேர்மை இருந்தால், மனச்சோர்வு அல்லது பதற்றம் கொண்டவர்கள் கவலைப்படத் தேவையில்லை என்று நான் நம்புகிறேன். அவர்கள் துணிவோடு நடைபோடலாம், தங்களுக்கு உற்சாகம், ஆதரவளிக்கும் ஒரு பணியைக் கண்டறியலாம்.

அருணா ராமன் ஒரு சமூகப் புத்தாக்கர் மற்றும் கல்வியாளர்.

க்ளஸ்ட்ரோஃபோபியா என்றால் என்ன?

நிலைகொள்ளாத கால்கள் குறைபாடு

தன்னை அறிதலின் முக்கியத்துவம்