சமூகம் மற்றும் மன நலன்

எனக்கு COVID-19 இருப்பது கண்டறியப்பட்டது, அதற்காக மக்கள் என்னைக் குற்றம் சாட்டினார்கள்

COVID-19 அறிகுறிகளைக் கொண்ட மக்கள் அதைப் பொதுவில் ஒப்புக்கொள்ளத் தயங்குகிறார்கள், ஏனெனில், சமூகக் களங்கம் அதைச் சிரமமாக்கிவிடுகிறது, இதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

இங்கு நான் பேசுகிற நிகழ்ச்சிகள் அனைத்தும் மார்ச் 9, 2020 அன்று தொடங்கின, அன்றுதான் நான் ஸ்விட்ஸர்லாந்திலிருந்து ஃபிரான்ஸ் வழியாக இந்தியா திரும்பினேன். அப்போது, முடக்கம் இல்லை, வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குள் வருகிறவர்கள் தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொள்கிற விதிமுறைகளும் இல்லை. விமான நிலையத்தில், எனக்கு COVID-19 பரிசோதனை செய்யப்படவில்லை, ஏனெனில், சில குறிப்பிட்ட நாடுகளிலிருந்து வருகிற பயணிகளைமட்டும்தான் கண்டிப்பாகப் பரிசோதிக்கவேண்டும் என்று அப்போதைய விதிமுறைகள் தெரிவித்தன, அந்தப் பட்டியலில் ஸ்விட்சர்லாந்து இல்லை.

இந்த நோய்த்தொற்றின் பொதுவான அறிகுறிகள் (இருமல் அல்லது காய்ச்சல்) ஆகியவை எனக்கு இல்லை; ஆனால், நான் பதற்றமாக உணர்ந்தேன், ஆகவே, என்னைப் பரிசோதித்துக்கொள்ள விரும்பினேன். இந்தியா திரும்பி நான்கு அல்லது ஐந்து நாட்களுக்குப்பிறகு, என்னுடைய முகர்தல் மற்றும் சுவை உணர்வு குறைந்திருந்தது, ஆனால், அப்போது இது ஓர் அறியப்பட்ட அறிகுறியாக இல்லை.

இந்த நேரத்தில் பின்பற்றவேண்டிய நெறிமுறையை நான் அறிந்திருக்கவில்லை; ஆகவே, ஒரு பொது மருத்துவரிடம் சென்று என்னைப் பரிசோதித்துக்கொள்வது நல்லது என்று நினைத்தேன். தொடக்கத்தில், நான் என்னைப் பரிசோதித்துக்கொள்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை, ஆனால், பின்னர் அந்த நாடுகளின் பட்டியலில் ஸ்விட்சர்லாந்தும் சேர்க்கப்பட்டது, அதன்பிறகு, என்னால் பரிசோதனைக்குச் செல்ல இயன்றது, அந்தப் பரிசோதனையில், எனக்கு COVID-19 இருப்பது தெரியவந்தது. நான் நடுங்கிப்போனேன்; இதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்று எனக்குத் தெரியவில்லை. அது எனக்கு ஓர் அச்சம் நிறைந்த நேரமாக இருந்தது. “என்னால் யாராவது இறந்துவிடுவார்களோ?”, “இந்த மருத்துவர்களுக்குத் தாங்கள் என்ன செய்கிறோம் என்பது தெரியுமா, அல்லது, இதிலிருந்து வெளியேற வழியே இல்லாமல் நான் சிக்கிக்கொண்டுவிட்டேனா?”, “இந்த நோய்த்தொற்று என்னைக் கொன்றுவிடுமோ?” என்பதுபோன்ற பல சிந்தனைகள் எனக்கு வந்தன.

என்னுடைய பரிசோதனை முடிவுகள் வந்த அதே நாளன்று, பிருகத் பெங்களூரு மகாநகரப் பாலிகே (பெங்களூரின் மாநகர அமைப்பான BBMP) -ஐச் சேர்ந்த மருத்துவ அலுவலர்கள் என் வீட்டுக்கு வந்தார்கள், என் நிலைமையைப்பற்றி வீட்டு உரிமையாளரிடம் தெரிவித்தார்கள். விரைவில், அக்கம்பக்கத்திலிருந்த எல்லாருக்கும் இது தெரிந்துவிட்டது, அவர்கள் என் வீட்டைச் சுட்டிக்காட்டியபடி கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார்கள். அப்போது நான் தனிமைப்படுத்தப்பட்டிருந்தேன்.

தனிமையில்

தனிமைப்படுத்தலுக்காகஒதுக்கப்பட்டிருந்தபகுதிக்குநான்சென்றபோது, எனக்குமிகவும்அச்சம்பெருகியது. அங்குநான்தன்னந்தனியாகஇருந்தேன், அழுத்தத்தைஉணர்ந்தேன், ஆபத்துக்குஉள்ளாவதாகஉணர்ந்தேன். அங்குவரிசையாகப்பலஅறைகள்இருந்தன, அவைஅனைத்தும்முற்றிலும்காலியாகஇருந்தன, நாளில்பெரும்பகுதிநேரம்நான்தனியாகஇருந்தேன். இரண்டுமணிநேரத்துக்குஒருமுறைஒருவார்ட்பையனும்ஒருமருத்துவரும்என்னைப்பார்க்கவருவார்கள். அச்சம், ஆபத்துக்குஉள்ளாகிறோம்என்கிறஆழமானஉணர்வுஆகியவைநிறைந்தஅந்தநேரங்களில், நான்மிகவும்நம்புகிறஒருவருக்குநான்சிலஒலிக்குறிப்புகளைஅனுப்பினேன். பின்னர், அவைஏதேதோவாட்ஸாப்குழுமங்களுக்குஅனுப்பப்பட்டதாகநான்கேள்விப்பட்டேன். இதுஎனக்குமிகுந்தஅதிர்ச்சியளித்தது; எனக்குத்துரோகம்இழைக்கப்பட்டதாகஉணர்ந்தேன்.

தொடக்க நிலையில், அலுவலர்கள் நல நெறிமுறைகள் போன்ற பல விஷயங்களைக் கண்டறிய முயன்றுகொண்டிருந்தார்கள், ஆகவே, குழப்பம் நீடித்தது. ஆகவே, முந்தைய சில நாட்களில் நான் சந்தித்த மக்களையெல்லாம் அவர்கள் பின் தொடரத் தொடங்குவதாக என்னிடம் சொன்னபோது, அது எந்த அளவு செயல்திறனுடன் இருக்கும் என்று எனக்கு உறுதியாகத் தெரியவில்லை, நானே நண்பர்கள், உறவினர்களிடம் இதைப்பற்றிப் பேச விரும்பினேன்.

எனக்கு COVID-19 இருப்பது தெரியவந்திருப்பதாக ஃபேஸ்புக்கில் எழுதினேன். முந்தைய சில நாட்களில் என்னைச் சந்தித்தவர்கள் யாரும் வெளியில் செல்லவேண்டாம், தங்களுடைய தாத்தா, பாட்டி அல்லது முதிய உறவினர்களைச் சந்திக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன். இதற்குக் கிடைத்த பெரும்பாலான எதிர்வினைகள் ஆதரவளிப்பவையாக இருந்தன, அதே நேரம், சில வெறுப்புச் செய்திகள் என்னுடைய நோய்த்தொற்றுக்காக என்னைக் குற்றம் சாட்டின, ‘இரக்கமில்லாத கொலைகாரர்’ என்று அழைத்தன, என்னைக் கைது செய்யவேண்டும் என்றன.

சமூகக் களங்கம்

அமைதியைக் குலைக்கும் இன்னொரு நிகழ்வும் நடந்தது. ஒரு நாள், அதிகாலை சுமார் 1 மணியளவில் எனக்குத் தெரிந்த ஒருவர் என்னை வீடியோ அழைப்பில் அழைத்தார். அவர் சொன்னார், “உங்களுடைய அறையில் ஏன் விளக்குகளெல்லாம் அணைந்துள்ளன? விளக்குகளை எரியவிடுங்கள், கொரோனா நோயாளி ஒருவர் எப்படித் தோன்றுவார் என்று நான் காணவேண்டும்.” நான் நடுங்கிப்போனேன், அன்று இரவு முழுக்க என்னால் தூங்க இயலவில்லை. யாருக்காவது COVID-19 இருப்பது தெரியவந்தால், தயவுசெய்து அதை அலட்சியமாக நினைக்கவேண்டாம், வைரஸால் ஏற்பட்டுள்ள மரணங்களின் எண்ணிக்கையைப்பற்றித் தயவுசெய்து பேசவேண்டாம் என்று நான் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். நோய்த்தொற்று கொண்டவர்களுக்கு ஆதரவும் பச்சாத்தாபமும் காட்டவேண்டிய முக்கியமான நேரம் இது.

இந்த நிலையில் இருக்கிற ஒருவர், பல நிலை அச்சங்களைச் சுழற்சிமுறையில் உணர்வது இயல்புதான், அவரிடம் பேசுகிறவர்களுடைய அச்சத்தாலும் இது தூண்டப்படலாம். நான் தனிமை நிலைக்குச் செல்லும்வரை, என்னுடைய சொந்த உடல்நிலையைப்பற்றிக் கவலையாக உணரவில்லை, அதன்பிறகு, வெளி உலகத்தில் என்ன நடக்கிறது என்பதைப்பற்றி நான் அழுத்தமாக உணரத்தொடங்கினேன். நான் கண்காணிப்புக் குழுவினருடன் பல மணி நேரம் பேசினேன், வெறுப்புச் செய்திகளைப் படித்தேன், இவையும் எனக்கு உதவவில்லை. இவை அனைத்தும் சேர்ந்து, என்னைச் சோர்வாக உணரச் செய்தன, எனக்குத் தலைவலி, தொண்டை வலி வந்தது. அப்போதுதான், இவற்றிலிருந்து என்னைத் துண்டித்துக்கொள்ளவேண்டும் என்று நான் உணர்ந்தேன்.

என்னுடைய பிரச்னைகளைக் கூடுதலாக்குவதுபோல், அலுவலர்கள் என் வீட்டு உரிமையாளரிடம் இந்தத் தகவலைத் தெரிவித்தார்கள், அவர் அச்சப்படத் தொடங்கினார், நான் ஒரு புதிய வீட்டைத் தேடவேண்டியிருக்கலாம் என்பதுபோல் பேசத் தொடங்கினார். இந்த வெவ்வேறு நிகழ்வுகளின் ஒட்டுமொத்தத் தாக்கத்தால், நான் என்னைப்பற்றியே நாணம் கொள்ளத் தொடங்கினேன். இது நகைச்சுவையான விஷயம்தான், ஏனெனில், இந்த வைரஸுக்கும் அறநெறிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. என்றாலும், மக்கள் ஒருவர்மீது ஒருவர் வெறுப்பைக் காட்டத் தொடங்கிவிட்டார்கள். அதனால்தான், நான் என்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்பினேன்: இந்த நேரத்தில் மன நலன் மிகவும் முக்கியம், பல மக்கள் சேர்ந்து சில மக்களை நாணமாக உணரச் செய்தால், அது யாருக்கும் உதவப்போவதில்லை.

இந்த வைரஸால் வரும் உடல் நல அச்சுறுத்தல் ஒருபுறமிருக்க, நாம் ஒரு பொருளாதாரச் சரிவையும் எதிர்கொள்கிறோம். இவற்றுக்கெல்லாம் மேலாக, ஓர் உணர்வு மற்றும் உளவியல் அச்சுறுத்தலையும் சேர்த்தால், அது யாருக்குப் பயன் தரும்? மக்களுக்குப் பல அச்சங்கள் இருக்கலாம், ஆனால், அலுவலர்கள் தங்கள் பணியைச் செய்வார்கள் என்று அவர்கள் நம்பவேண்டும், தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் கவனித்துக்கொள்ளவேண்டும். இப்போது, நெறிமுறைகள் சிக்கலாக இருக்கலாம், பல நேரங்களில் மெதுவாக இருக்கலாம், ஆனால், பல நலப் பணியாளர், அலுவலர் குழுக்கள் தங்களால் இயன்ற சிறந்த பணியைச் செய்துவருகின்றன.

என்னுடைய தனிமைப்படுத்தல் காலகட்டம் நிறைவடைந்துவிட்டது, நான் COVID-19லிருந்து மீண்டுவிட்டேன். எங்கும் பல மிகச்சிறந்த இரக்கச் செயல்களை நாம் காண்கிறோம், அதே நேரம், நிறையக் கசப்புணர்வும் உள்ளது, ‘நாமா அவர்களா’ என்கிற சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த மனநிலையால், நலப்பராமரிப்பு ஊழியர்களுடைய வாழ்க்கைகள் எளிதாகப்போவதில்லை. நாம் என்ன தவறு செய்கிறோம் என்பதை நாம் உணரவேண்டும், இந்த நெருக்கடியைக் கடந்து வருவதற்காக ஒன்றாக உழைக்கவேண்டும்.

வொயிட் ஸ்வான் அறக்கட்டளைக்குச் சொல்லப்பட்டபடி இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இதை விவரித்தவர் தன்னுடைய பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை.

மனநலப் பிரச்னைகளை ஆயுர்வேதம் குணமாக்குமா?

ஆலோசனை வழங்குதல் என்றால் என்ன? அது எப்போது உதவலாம்?