பணியிடம்

பணியிடம் மன அழுத்தத்துக்கான சூழ்நிலையை உருவாக்குகிறதா?

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

பணியிட மன அழுத்தம் என்றால் என்ன?

பணித் தேவைகள் மற்றும் பணிப்பளுவைச் சந்திக்கும் மக்களிடையே தோன்றக்கூடிய, அவர்களுடைய சமாளிக்கும் திறனுக்குச் சவால்விடக்கூடிய எந்த எதிர்விளைவுகளும் பணியிட அழுத்தங்கள் என அழைக்கப்படுகின்றன.

பணிப்பளுவானது பணியிட அழுத்தத்திலிருந்து வேறுபடுவது எப்படி?

பணிப்பளு என்பது எல்லாப் பணியிடங்களின் முக்கியமான அம்சம் ஆகும்; அது, ஒரு நபர் ஊக்கமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க உதவுகிறது. இருப்பினும், பளு அதிகமாகும்போது, அது உற்பத்தித்திறனைவிட அதிகச் சேதம் விளைவிப்பதாக ஆகலாம்.

பணியிடத்தை அழுத்தமிக்கதாக ஆக்குவது என்ன?

அழுத்தம் ஒவ்வொருவராலும் வித்தியாசமாக உணரப்படுகிறது. இருப்பினும் ஒருவர் குறைந்த ஆதரவு பெறும்போது, அவர்கள் பணியில் அதிக அழுத்தத்தை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது என்று பலர் ஏற்றுக் கொள்கின்றனர். பணி வடிவமைக்கப்படும் வழிமுறை மற்றும் நிறுவனம் நிர்வகிக்கப்படும் முறை ஆகியவை பணியிடம் தீங்கானதா என்பதைத் தீர்மானிக்கும் முதன்மைக் காரணிகளாக உள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது.உலகச் சுகாதார நிறுவனம்  WHOவால் உருவாக்கப்பட்ட ஒரு குறிப்பு ஆவணம் இவற்றை ‘அழுத்தம் தொடர்பான ஆபத்துகள்’ என்று கூறுகிறது மேலும் அவற்றை ஒன்பது வகைகளில் அடையாளம் காணுகின்றது. இவை கவனிக்க வேண்டிய எதிர்கால அபாய எச்சரிக்கைகளாக உள்ளன. அவை:

·       நிறுவனத்திலிருந்து போதிய ஆதரவு இல்லாமை (வளங்கள், உதவி போன்றவற்றில்.)

·       நிறுவனத்தின் பார்வை மற்றும் செயல்முறைகள் பற்றித் தெளிவின்மை

·       நிர்வாகிகளிடமிருந்து தெளிவில்லாத தகவல்தொடர்பு

·       தெளிவற்ற பணிப்பொறுப்பு

·       அதிக வேலை அல்லது மிகக் குறைந்த வேலை

·       பொருளாதாரரீதியாக மற்றும் பணிரீதியாகப் போதிய வளர்ச்சியின்மை

·       சமமான/போதிய சம்பளம் இன்மை

·       பணிப்பாதுகாப்பின்மை

·       குறைந்த அல்லது எந்த முடிவெடுக்கும் அதிகாரமும் இல்லாமை

·       திறமைகளைக் குறைவாகப் பயன்படுத்தல்

·       நெகிழ்வற்ற அல்லது முன்கணிக்க முடியாத வேலை நேரங்கள்

·       போதிய கண்காணிப்பு இல்லாமை அல்லது ஆதரவற்ற கண்காணிப்பு

·       மோசமான பணியிட உறவுகள்

·       கேலிசெய்தல், துன்புறுத்தல் அல்லது வன்முறை

பணியிடத்தை ஆரோக்கியமானதாக்க நிறுவனம் என்ன செய்யலாம்?

பல நிறுவனக் காரணிகள் பணியிடங்களில் அழுத்தம் தொடர்பான ஆபத்துகள் மீது தாக்கம் கொண்டிருக்கலாம் அல்லது அவற்றை உருவாக்கலாம். ஒரு நிறுவனம் பணியிடத்தை ஆரோக்கியமானதாக்க பின்வருவனவற்றை உறுதிப்படுத்தலாம்:

·       பணியாளர்கள் நிறுவனத்தின் கட்டமைப்பு, செய்முறைகள் மற்றும் நோக்கம் குறித்து விழிப்புணர்வு பெற்றிருப்பதை உறுதிப்படுத்துதல்

·       பணித்தேவை மற்றும் பணியாளரின் திறன் பொருந்துவதை உறுதிப்படுத்துதல்

·       தெளிவான பணிப் பொறுப்பு மற்றும் எதிர்பார்ப்புகள்

·       நிறுவனத்தில் தெளிவான தொடர்பு வழிகள் இருத்தல்

·       இணக்கமான பணியிடச் சூழலை உறுதிப்படுத்தல்

மனநலப் பிரச்னைகளை ஆயுர்வேதம் குணமாக்குமா?

ஆலோசனை வழங்குதல் என்றால் என்ன? அது எப்போது உதவலாம்?